(Reading time: 14 - 28 minutes)

"ன்னை ஆசீர்வாதம் பண்ணுங்க!"என்று அவர் பாதம் பணிந்தாள்.

"நல்லா இரும்மா!"-என்று பதறியப்படி அவளை தடுக்க முயன்றார்.

"இதுவரைக்கும் நீங்க மட்டும் தான் என்னை ஆசீர்வாதம் பண்ணலை!இனி,அந்த குறையும் இல்லை!"என்றாள் புன்னகையோடு!!

நடந்தவற்றை அதிர்ச்சியோடு ராகுல் பார்த்து கொண்டிருக்க எஞ்சிய இருவரும் ராகுலை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

"நான் வரேன்பா!"

"தீக்ஷா ஒரு நிமிஷம்!"-ஆதித்யா அவளை நிறுத்தினார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"அனுக்கு சேர வேண்டியது சேரந்தாச்சு!தீக்ஷாக்கு சேர வேண்டியது சேரணும் நினைவிருக்கா?"-அவர் கூறியதன் பொருள் விளங்க புன்னகைத்தப்படி உள்ளே சென்று நகை பெட்டியை எடுத்து வந்தார் ரகு.

"வாங்கிக்கம்மா!இது என் மனைவி வர போற மருமகளுக்காக வாங்கியது!"-'என் மனைவி'என்ற வாக்கியம் கீதாவின் மேல் ரகுவின் அன்பை அவர் நந்தனுக்கு தெளிவாய் உணர்த்தியது.

"உங்க பையனிடம் கொடுங்க!"-அனைவரும் கேள்வியாய் பார்த்தனர்.

"இரண்டு பேரும் ஒண்ணா வாங்குறோம்"

"சதி!"அவன் சற்று கோபமாக அவள் பெயரை உச்சரித்தான்.

"கோபப்படாதேப்பா!அது உன் அம்மா வாங்கினது!ஒருவேளை அவங்க இருந்திருந்தா,இங்கே யாரும் தலைகுனிந்திருக்க அவசியமில்லை.அவங்க இல்லாததால் அவங்க ஹஸ்பண்ட் தருகிறார்!"-நிரஞ்சனின் மொழி அவனை கட்டுப்படுத்தியது.

தந்தையும்,மகனும் ஒருவரை ஒருவர் பார்ததுக்கொண்டனர்.

சில நிமிடங்களில் தயக்கத்தோடு ஓரடி முன் வைத்தான் அவன்.

எங்கோ வெறித்தப்படி அவளோடு அந்த ஆசியை வாங்கினான்.

தீக்ஷா மீண்டும் அவர் பாதம் பணிய எத்தானிக்க நிரஞ்சன் தடுத்தார்.

"தம்பதி சகிதமா ஆசீர்வாதம் வாங்கணும்!"-ராகுல் மனம் கட்டுப்பாட்டை இழந்தது.

"நிரு!"

"நீ சும்மா இரு ரகு!இதெல்லாம் முறை!"-என்று அமைதிப்படுத்தினார்.

மனம் வெறுப்போ அல்லது ஏக்கமோ ஏதோ ஒன்றை உள்வைத்து தந்தையின் ஆசியை பெற்றான் ராகுல்.

பல வருடங்களுக்கு பின் அவன் கேசம் கோதியவரின் கண்கள் கசிந்துருகின.பல வருடங்களாய் பிரிந்திருந்த ரத்தப்பந்தம் கேசம் கோத அவன் அகங்காரம் தோற்றுப்போனது.

ஏதோ வெற்றி பெற்றவளாய் வந்தப்பணியை முடித்துக்கொண்டு விடைப்பெற்றாள் தீக்ஷா.

ரகு அப்படியே சோபாவில் அமர்ந்தார்.

"ரகு?"

"ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நான் கீதாக்கிட்ட ஒண்ணு சொன்னேன்!பையனா இருந்தா உனக்கு தான் சப்போர்ட் பண்ணுவான்.எனக்கு சப்போர்ட் பண்ண பொண்ணு தான் வேணும்னு சொன்னேன்!அந்த ஆசையை இத்தனை வருஷம் கழித்து மருமகள் மூலமா நிறைவேற்றி வைத்திருக்காடா என் கீதா!"-என்றார் கண்ணீர் மல்க.

காரை கோபமாக செலுத்தி கொண்டிருந்தான் ராகுல்.

அவன் கோபம் எல்லாம் சேர்ந்து காரை வேகத்தை உச்சம் அடைய செய்தது.

"என்னங்க!கொஞ்சம் மெதுவா போங்க!"-அவன் காரை நிறுத்தி கீழிறங்கினான்.அவனது நடவடிக்கை விளங்காதவள் குழம்பியப்படி இறங்கினாள்.

"எதுக்கு இப்படி பண்ண?"

"நான் என்ன பண்ணேன்?"

"நடிக்காதே..!!உன்னால தான் அவர் காலில் நான் விழுந்தேன்!"

"அவர் உங்க அப்பாங்க!"

"சதி...!"

"எனக்கு முதல்ல உங்க பிரச்சனை என்னன்னு சொல்லுங்க!அன்னிக்கு அவர் பிரிவை நினைத்து நீங்க தானே வருத்தப்பட்டீங்க?"

"............"

"உங்க அம்மாக்காக தான்..."

"ஸ்ரேயா என் அம்மா இல்லை!"

"சரி...அவங்களுக்காக தான் அவரை பிரிந்திருப்பதா சொன்னீங்க!எனக்கு ஒரு சந்தேகம்..தப்பு பண்ணது யாரோ ஒருத்தர்,அந்த தவறுக்கு பயன்படுத்திக்கப்பட்ட ஒருத்தர் அதற்கான தண்டனையை கிட்டத்தட்ட 12 வருஷமா அனுபவிக்கார்.இது என்ன நியாயம்?"

"............."

"உண்மையிலே உங்க மனசுல கர்வம் இருக்குங்க!இல்லைன்னா,அப்பா ஆசீர்வாதம் பண்ணதுக்கு சந்தோஷப்பட்டிருப்பீங்க!கோபம் இல்லை!"

"போதும் நிறுத்து சதி!"-ராகுல் அவள் கரத்தை இறுக பற்றினான்.அது நிச்சயம் அவளுக்கு வலித்திருக்க வேண்டும்.

"நீ என்ன நினைத்து கொண்டிருக்கிறாய் என்னைப்பற்றி??நான் திமிர் பிடித்தவனா?உனக்கு என்னைப் பற்றி எல்லாம் தெரியுமா?என் மனசுக்குள்ளே இருப்பது உனக்கு தெரியுமா?"-அவன் பொரிந்து தள்ளினான்.இதுநாள் வரை அவனது இந்த முகத்தை அவள் கண்டதில்லை.ஆடிப்போனாள்.கண்களில் ஒருத்துளி கண்ணீர் பயந்தப்படி எட்டி பார்த்தது.அவன் பற்றிய கரத்தை காட்டிலும்,அவன் சொற்களால் இதயமே அதிகமாய் வலித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.