(Reading time: 14 - 28 minutes)

விவாஹத்திற்கு முன்பே அவள் அன்பு, முகம் கூட பாராமல் அவனை அடைந்துள்ளது என்பது அவன் புன்னகைக்கு அழகூட்டியது.

எதை எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே உலர்த்த துணிகளோடு அவள் மாடிக்கு வந்தாள்.

அவளை கண்டவன் புன்னகையை அவசர அவசரமாய் மறைத்தான்.

அவள் அவனை கவனிக்காதப்படி துணியை உலர்த்த ஆரம்பித்தாள்.

"என்ன?வித்யாம்மா இல்லை?நீ செய்யுற?"

"அவங்களுக்கு கால் வலி..."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

"ஓ..."

"..........."

"என்னாச்சு?பேசிட்டே இருப்ப?திடீர் மௌனம் ஏன்?"

"நான் உங்க மேலே கோபமா இருக்கேன்!"அவன் அவள் முன்னால் வந்து நின்றான்.

"ஏன்?"

"சொல்ல மாட்டேன்!"

"நீ சொல்லாம நான் போக மாட்டேன்!"-அவள் பெருமூச்சுவிட்டாள்.

"நான் என்ன சொல்லிட்டேன்னு கோபமா ரூம்ல இருந்து வந்தீங்க?"-அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.அவள் கோபப்படும் அழகை அளவெடுத்தவன் சிலை என இருந்த காதலுக்கு உயிர் தர எண்ணி,

"ஏ...பல்லி!"என்றான்.

"ஆ..!"என்று அலறியவள் சிந்திக்காமல் அவனை அணைத்துக்கொண்டாள்.

ஏதோ வென்ற திருப்தி அவனுக்குள்!! மெல்ல அவளை சுற்றி வளைத்தான்.

எங்கோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம்...

இறைவன் ஆண்களை விட பெண்களை உயரம் குறைவாக படைத்ததன் காரணம் தெரியுமா???

அவள் அவனது அணைப்பினுள் செல்கையில்,அவனது இதயத்துடிப்பின் மொழிகளை கேட்ட வேண்டும் என்பதற்காகவே...!!மெல்ல குறுநகை அவன் இதழ்களில் தவழ்ந்தது.

ஏதோ உணர்ந்தவள் அவனது அணைப்பை மெல்ல தியாகம் செய்தாள்.

பேச்சு வராமல் தவித்தது அவள் இதழ்கள்!!!விழிகளில் ஏதோ ஏக்கத்தோடு அவன் பார்வையோ அவளை நீங்கியப்பாடில்லை!!

மெல்ல சமாளித்தவள்,"எங்கே பல்லி?"என்றாள்.

"அது...வந்து...ஆ...நீ கத்துன கத்துல ஓடி போயிடுச்சு!"-அவனை முறைத்தவள்,துணிகளை உலர்த்த ஆரம்பித்தாள்.

"நான் ஹெல்ப் பண்றேன்!"

"ஒண்ணும் வேணாம்!"

"என்ன நீ?ரொம்ப தான் பண்ற?"

இருவருக்குள்ளும் அழகிய யுத்தம் மூள ஆரம்பித்தது.வேடிக்கை என்னவென்றால் இதில் இருவரும் வெற்றி பெற போவதில்லை.அவர்களின் காதலே வாகை சூட காத்திருக்கிறது!!

கும்பலாக அமர்ந்து மூவரும் ஏதோ உரையாடி கொண்டிருக்க கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

"டேய் ராகுல்!வாடா!என்ன கதவை எல்லாம் தட்டிட்டு?"-ஆதித்யா கேட்க அவன் நானில்லை என்பதாய் தலையசைத்தான்.

கதவின் பின்னால் இருந்து சதி வெளிப்பட்டாள்.

"தீக்ஷா?"

"என்னப்பா?நான் வரக்கூடாதா?"

"ஐயோ!இல்லைம்மா...நான் உன்னை பார்க்கலை!உள்ளே வாங்க!"-ராகுலின் பார்வை ஒரு நொடி ரகுவை அடைந்தது.

"வாங்க பார்பி கேர்ள்!வீட்டுக்கு இப்போ தான் அட்ரஸ் தெரிந்ததா?"-நிரஞ்சன் கேட்க அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

"என்னம்மா சொல்ற?"

"எனக்கு இந்த இடம் தெரியாதுப்பா!"

"பாரேன்!!ஏன்டா?ஏன் என் மருமகளுக்கு வீட்டு அட்ரஸ் சொல்லலை?"

"நான்...அது!!"

"சரி...என்னம்மா?முக்கியமான விஷயமா?"

"ம்...அம்மா உங்களுக்கு மீன் குழம்பு கொடுத்து விட்டிருக்காங்க!"

"மீன் குழம்பா?"-நிரஞ்சன் வாயை பிளந்தார்.

"ஏன்டா ஆதி!மது வெஜிடேரியன் இல்லை..."

"எனக்காக செய்ய கத்துக்கிட்டா!சாப்பிட மாட்டாடா!"-என்றார் சற்று வழிந்தப்படி!!

"அடப்பாவி...கொடுத்து வைத்தவன்டா நீ!"-அவர்கள் பேசிக் கொண்டிருக்க தீக்ஷா ரகுவை பார்த்தாள்.அவர் எதிலும் ஈடுபாடாமல் மடிக்கணினியில் கவனம் செலுத்தி கொண்டிருந்தார்.

"சரி...நாங்க கிளம்புறோம்பா!"

"சரிம்மா!"-அவர்கள் கிளம்ப எழுந்தனர்.தீக்ஷா ரகுவை பார்த்து அப்பா என்றாள்.

அதுவரை எதிலும் கவனம் இன்றி  நின்றவர்,அவ்வார்த்தையில் நெகிழ்ந்தது உண்மை!!

ராகுல் அவளை கேள்வியாய் பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.