(Reading time: 29 - 58 minutes)

"தெரியும்.... இருந்தாலும் கேட்டேன்" என்று சொல்லிவிட்டு பின் இருவரும் பர்சனலாக பேசிக் கொண்டிருக்க...

போனில் பேசிக்கொண்டே நடுவில் அடிக்கடி சிரிக்கும் வரூனைப் பார்த்துக் கொண்டிருந்த பிருத்வி... அப்போது வந்த கோபத்தில் அவனையும் மறந்து 3பெக் அளவிற்கு குடித்துவிட்டு கோபமாக அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

சிஸ்டம்ல வேலை பார்த்துக் கொண்டிருந்த யுக்தாவிடம் போனை கொடுக்க பிரணதி வந்தாள்...

"அண்ணி இந்தாங்க போன்...."

"என்ன பிரணா என்னோட போன்லயாவது சார்ஜ் இருக்கா இல்லையா.."

"அதெல்லாம் கொஞ்சமா இருக்கு... என்று பிரணதி கிண்டலாக சொல்ல... யுக்தா சிரித்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்...

"அண்ணி நீங்க இன்னும் சாரி மாத்தாம இருக்கீங்க..."

"நான் எப்பவும் படுக்கறதுக்கு முன்னாடி தான் சேஞ்ச் பண்ணுவேன் பிரணா... இன்னும் உங்க அண்ணன் வரலயே..."

"இவ்வளவு நேரமெல்லாம் என்னால சாரியோட இருக்கமுடியாது அண்ணி... நீங்க எப்படி இருக்கீங்க..."

"நான் அடிக்கடி சாரி கட்டி பழக்கம் இருக்கு பிரணா... ஒரு நாள் முழுக்கக் கூட சாரி கட்டிக்கிட்டுக் கூட இருந்துருக்கேன்... அதனால எனக்கு கஷ்டம் தெரியல..."

"ஆனா உங்களை இப்படி சாரில ஒருநாள் கூட நான் பார்த்ததில்லையே அண்ணி... கல்யாணத்த்ப்பவும் அன்னைக்கு பார்ட்டிக்கு போனப்பவும் தான் சாரி கட்டுனீங்க... மத்த நாளில் நீங்க சாரி கட்டினதில்லையே..."

"வீட்ல இருக்கும்போது சாரி கட்டினது இல்லை... வெளிய போகும்போது ப்ளான் பண்ணி சாரி கட்டுவேன்... இங்க இந்தியா வந்து அப்படி ப்ளான் போட்டு வெளியப் போனதில்லையா அதான் சாரி கட்டினதில்லை... தர்ஷினி மேரேஜ் அப்போ நானும் கவியும் பந்தகால்ல இருந்து மேரேஜ் முடியற வரை சாரி தான் கட்டினோம்...." என்று சொல்லும்போதே கவிக்கூட அந்த மேரேஜ்ல இருந்ததெல்லாம் யுக்தாவுக்கு ஞாபகம் வந்து அவள் முகம் வாடி போனது...

அதை அறிந்த பிரணதியும்... அதை மாற்றும் விதமாக பேசினாள்...  "அண்ணி உங்களுக்கு சாரி ரொம்ப அழகா இருக்கு... இனி அடிக்கடி கட்டுங்க... சரி நாளைக்கு காலேஜ் போகனும்.. நான் போய் படுக்கட்டுமா அண்ணி..."

"ம்ம் சரி பிரணா.."

"அண்ணி நான் வரூன்கிட்ட பேசினப்போ அவங்க பார்ட்டில இருந்தாங்க... அண்ணனும் அங்க தான் இருந்துதாம்... நாங்க போன் பேசிக்கிட்டு இருந்தப்பவே அண்ணன் கிளம்பிடுச்சாம்... சீக்கிரம் வந்துடும் அண்ணி..."

"ஓ... அப்ப பிருத்வி சாப்பிட்டு வந்துடுவாரா... அப்படி எதுவும் எனக்கும் அத்தைக்கும் போன் பண்ணி சொல்லலையே..."

"இல்லை அண்ணி அது ட்ரிங்ஸ் பார்ட்டி.... ஆனா அண்ணனுக்கு அந்த பழக்கமெல்லாம் இல்லை... சும்மா அட்டண்ட் பண்ணிட்டு கிளம்பிடுச்சாம்... வந்துக்கிட்டே இருக்கும்... ஆமாம் அம்மா மணி பத்தாகல அதுக்குள்ள படுத்துட்டுங்காளா.... நீங்க வந்ததும் அம்மா ஃப்ரீயா ஆயிட்டாங்க அண்ணி..."

"அப்படியில்லை பிரணா... இன்னிக்கு அத்தைக்கு பி.பி கொஞ்சம் இன்கீரீஸ் ஆயிடுச்சு போல நான் தான் சீக்கிரம் மாத்திரை சாப்பிட்டு படுக்கச் சொன்னேன்... மாமா இவ்வளவு நேரம் டிவி பார்த்துட்டு இப்பத் தான் படுக்க போனாரு..."

"சரி அண்ணி குட்நைட்... நானும் போய் படுக்கறேன்.."

"ம்ம் குட்நைட் பிரணா..." என்றதும் பிரணதி சென்றுவிட்டாள்.

பைக்கில் வந்துக் கொண்டிருந்த பிருத்விக்கு சரியாக வண்டி ஓட்ட முடியாமல் மயக்கமாக இருந்தது.... சே என்ன செய்து வைத்திருக்கிறோம்... எதற்காக நான் அதை எடுத்து குடித்தேன்.. அவர்கள் இருவரும் போன் பேசிக் கொண்டிருந்தால் எனக்கென்ன... ஏன் என்னை மீறி இந்த கோபம் வருகிறது... என்று நொந்துக் கொண்டே நிதானாமாக பைக்கை ஓட்டிக் கொண்டு வந்தான்...

ஏதோ வரூனை விட யுக்தா மீது தான் அவனுக்கு அதிக கோபம் வந்தது... முன்னேயாவது அவள் இருக்கும் இடம் இவன் இருக்க மாட்டான்... இவன் இருக்கும் இடம் அவள் இருக்கமாட்டாள்..

ஆனால் இப்போதோ இவனுக்கு தேவையானதை செய்யும் அவள் இவன் கேட்டால் தான் பதில் பேசுவாள்... இல்லையேல் அங்கு மௌனம் தான் இருக்கும்.... அப்படியிருக்க இன்றோ அந்த வரூனோடு அவள் இவ்வளவு நேரம் பேசினால் அவனுக்கு கோபம் வராதா...??

யுக்தா மேல் உள்ள அளவுக் கடந்த கோபத்தோடு அவன் தட்டு தடுமாறி பைக்கை ஓட்டி கொண்டு வந்து வீட்டை அடைந்து அவன் காலிங்பெல்லை அழுத்த வந்து கதவை திறந்தவளை பார்த்த பிருத்விக்கு அவள் மேல் உள்ள கோபமெல்லாம் எங்கோ போய்விட்டது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.