(Reading time: 13 - 25 minutes)

டந்தவற்றை பார்த்து அதிர்ச்சியில் சிலையாகி போனாள் அனு.

"நீங்க அருமையா கவிதை எழுதுவீங்க!எங்களுக்காக ஒரு காதல் கவிதை சொல்லுங்க!அதை யாருக்காக சொல்லுறீங்கணும் சொல்லணும்!"-அவன் தொண்டையை செறுமினான்.

"கம் ஆன் கௌதம்!"என்று பலரின் குரல் ஒலித்தது.

"விழி என்ற நீர்நிலையில் தங்க நிலவாய் உன் முகம்...

விழுந்த அந்நொடி விண்ணில் பறக்கும் மயிலிறகாய்

பறந்தப் போன நெஞ்சத்தை எங்கு தேடி செல்வேன்??

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்...

உணர்வுகள் மீட்டும் உறவின் அர்த்தத்தை...

உணர வைத்த நிமிடங்களை உணர்ந்திருக்கிறாயா???

கடந்துப் போன காலத்தின் சுவடுகளை கண்களில் கொணர்கையில்

கவிதையாய் உன் நெருக்கத்தை யாசிக்கின்றேன்...!!!

சரிபாதி என்ற சொல்லும் 

சதி என்றே குறுகிட...

சதி என்று சரணடைந்தேன்

உன்னிடத்தில் நான்....!!"-அவன் முடிக்கவும் ஆரவார கோஷம் உச்சத்தை தொட்டது.

"சூப்பர் கௌதம்!!!இது யாருக்காக?"-அவன் சில நொடி மௌனம் காத்தான்.

"இது என் காதலுக்காக..!!!

என் மனசை தனக்கு சொந்தமாக்கின ஒருத்திக்காக...

அவளுக்காக நான் நேரம் செலவிட்டதில்லை!!!பலநாளா உன்கிட்ட ஒண்ணு சொல்ல துடித்து கொண்டிருந்தேன்!!சொல்ல வரும் போதெல்லாம் தயக்கம் தடுத்துடும்!!என் வாழ்க்கையில உனக்காகவே வாழ்கிறேன்!!என் எழுத்தெல்லாம் உன் ஒருத்திக்கே சொந்தம்!!!ஐ லவ் யூ அனு!"என்று முடித்தான்.

அனுவின் முகம் அங்கிருந்த திரையில் பளிச்சிட்டது.

அதுவரையில் அவன் வருணணைக்கு உரியவள் அக்ஷயா என்று எண்ணிய பெண்மனம் தன் பெயரை கேட்டதும் ஸ்தம்பித்துப் போனது!!!

அனைத்தையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருநதாள் அக்ஷயா!!முதல்முறையாக அவள் ஆணவம் அழிந்து கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

அங்கு கொல்கத்தாவே கௌதமின் மொழிகளை கொண்டாடி கொண்டிருந்தது.

மனதில் இருந்த காதலை வெளிப்படுத்திவிட்டான்.

மனம் நிம்மதி அடைந்தது.

ன்றிரவு.....

தங்கள் அறைக்கு வந்ததும் பேச மொழியற்று நின்றனர் இருவரும்!!!

கௌதமின் பார்வை அனுவை துளைத்தது.

அவள் அங்கிருந்து நகர பார்க்க,அவன் உறுதியான கரம் அவளை தடுத்தது.

அவள் திரும்பினாள்.

"அத்தனை பேருக்கு முன்னாடி ஒருத்தன் ப்ரப்போஸ் பண்ணிருக்கேன்!பதில் சொல்ல மாட்ட?"

"ஸாரி...!"

"ஏன்?"-அவன் முகம் இருண்டது.

"எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது! என் ஹஸ்பண்ட்க்கு இது தெரிந்தா உங்களை சும்மா விட மாட்டாரு!"

"ஆ...அப்படியா?அப்போ லவ் பண்ண மாட்ட!!"

".............."

"நீ பண்ண வேண்டாம்!நான் பண்றேன்!"-என்று அவள் நெற்றியில் அவன் அளித்த முத்தமே அவள் வைராக்கியத்தை உடைத்து அவள் காதலை உயிர்பிக்க போதுமானதாக இருந்தது.

காத்திருப்பின் தேடல் கனிய,அவன் காதலுக்குள் கரைய ஆரம்பித்தாள் அனு!!!

கௌதமின் மொழிகளை தொலைக்காட்சியின் மூலம் கேட்ட ராகுலின் முகம் புன்னகை பூத்தது.அதேசமயம் மனம் ஒரு வினாவையும் விடுத்தது!!!

"நீ எப்போடா சொல்ல போற?"

"எங்கிருந்து சொல்ல!!அதான் அவளை பார்த்தாலே பேச்சிழந்து போகிறேனே!!இதில்,காதலை எங்கிருந்து கூறுவது???ம்ஹூம்!!அவளாய் கூறினால் தான் உண்டு!!!"-ஒரு பெருமூச்சு அவனிடமிருந்து வெளியானது....

காதல் புரிபவர்கள் பலர் என்னிடத்தில் கூறியதுண்டு,அதாவது,அவர்களின் காதலை தனது இணையிடம் கூறும் வேளை பெரும் திண்டாட்டத்திற்கு உட்படுவார்களாம் அவர்கள்!!செம்மொழியான தமிழே அச்சமயம் அவர்களின் காலை வாரி விட்டுவிடுமாம்!!!பேச்சின்றி தவிப்பார்கலாம்!!!

உண்மையில்,என்னை பொறுத்தவரை இதயத்தின் மொழிகளை கூறுவதற்கு மொழிகள் தேவையில்லை.அன்பு கொண்ட இரு நெஞ்சம் ஒன்றாகும் என்றால்...

விழிகள் பேசும் மௌனமே உத்தமமாகும்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.