(Reading time: 10 - 20 minutes)

திருமணத்தை பற்றி அடிபோடும் சமயத்திலும்,

"எனக்கு நிகரா இருக்க ஒருத்திக்கும் தகுதி இல்லை!"-அவனது பேச்சிலும் ஒருவரையும் ஏற்றத்தில்லை.ஆனால்,இன்று ஒரு பெண்ணை போற்றுகிறான்.

"அவ எனக்கு வேணும்பா!வாழ்க்கை முழுசும்!"-அவன் கண்களில் தெரிந்த அது ஏக்கமல்ல!!ஏதோ ஒரு வித குரோதம்,தாபம்!!

"வேணாம்!பக்கத்துல வராதே!"-அந்தக் கோட்டையை எப்படியும் 3 முறை சுற்றி ஓடிவிட்டான் ஆதித்யா.

"ஐயோ!!யாராவது என்னை காப்பாற்றுங்களேன்!"-அவன் குரல் யார் செவிகளுக்கும் சேரவில்லை.

அவனை பின்தொடர்ந்து ஓடியவள்,களைத்து போய் நின்றாள்.

"ஆதி!ப்ளீஸ்!என்னால ஓட முடியலை!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சதி என்று சரணடைந்தேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"அடிப்பாவி...நீ பண்றது கொஞ்சம் கூட நியாயமே இல்லை!என் கதையில் மட்டும் தான் எல்லாம் தழைக்கீழா நடக்குது!"-அவன் பேசி கொண்டிருக்கும் போதே,அவனை யாரோ பின்னால் இருந்து இறுக்கமாக பிடித்தனர்.

"சின்னய்யாவை பிடித்துட்டேன்!"-

என்று கூவினார் அவர்.

"மணி அண்ணே!வேணாம்!விட்டுவிடு!"

"விட மாட்டேன்!யாத்ராம்மா..சீக்கிரம் வாங்க!"-யாத்ரா சுதாரித்து அவனை நெருங்குவதற்குள் அவன் மணி அண்ணனை தள்ளிவிட்டு மீண்டும் ஓட ஆரம்பித்தான்.

"ஆதி!ஓடாதே!நில்லு!"

"முடிந்தால் பிடித்துக்கொள்!"-சற்று தூரம் துரத்தியவள்,திடீரென்று சுவருக்கு பின்னால் மறைந்துக் கொண்டாள்.

தன்னை பின்தொடர்ந்து வந்தவள்,திடீரென காணாமல் போக ஆதித்யா தன் ஓட்டத்தை நிறுத்தினான்.

"யாத்ரா.."-அவள் பதில் கூறவில்லை.சில அடிகளில் முன்னால் நகர்ந்து வந்தான் அவன்.

சமயம் வந்ததை உணர்ந்தவள்,வெளிவந்து அவனது கழுத்தில் அதை அணிவித்தாள்.மகேசனது ருத்திராட்சத்தை..!!

"அம்மா!இந்தப் பொண்ணை பாரேன்!"-அவன் சிறு குழந்தையை போல சிணுங்கினான்.

"அப்பா!என்ன ஓட்டம் ஓடுற?இந்த ருத்திராட்சத்தை உன் கழுத்தில் மாட்டுவதற்குள் எவ்வளவு போராட்டம்!ஆண்டவா!"

"அப்படியே!இரண்டு போட்டேன்னா!என்ன இதெல்லாம் இன்னும் நெற்றியில் பட்டையை பூசி விடு!ஒரு காவி உடையை தந்து,சாமியாரா.."-அவன் முடிப்பதற்குள் அவள் சட்டென அவனது வாயை பொத்தினாள்.

"உஷ்!!அடி தான் வாங்குவ,இப்படி எல்லாம் பேசுனா!"

"பின்ன என்ன??ஒரு பர்பெக்ட் பிசினஸ் மேன்!இப்படியா இருக்கிறது?"

"ஒன்றும் தப்பில்லை...பேசாம இரு!"

"நீ ரொம்ப மிரட்டுற!"

"என் ஆதித்யாவை இத்தனை நாளா,கொஞ்சினேன்ல!அதான் கொஞ்ச நாளுக்கு மிரட்ட போறேன்!"-அவன் செல்லமாய் அவளை முறைத்தான்.

"போ!நல்ல பையனா போய் டி.வி. பாரு போ!"

"நல்ல..பையனா..போய் டி.வி. பாரு போ!"-அவள் கூறியதை அப்படியே கூறினான்.

சில நொடிகள் ஒரு வித நேசம் கலந்த காதலோடு அவனை பார்த்தவள்,பின்,புன்னகைத்தப்படியே அங்கிருந்து நகர்ந்தாள்.

"இன்னும் என்ன எல்லாம் நடக்க போகுதோ!!"

-தனியாக சிரித்தப்படி வந்தவள் நதிகரையில் சென்று அமர்ந்தாள்.

மனதினில் ஆனந்தம்,உற்சாகம்,கவலை,ஏக்கம் என்ற எண்ணற்ற உணர்வுகளை உணர்ந்தாள் அவள்.

சூரியனானவன் அஸ்தமிக்க தொடங்கினான்.தன் விரல்களால் நதியினை அலவி கொண்டிருந்தாள் யாத்ரா.

"ம்கூூம்...பைராகி கூட அப்படி என்னம்மா பேசுற நீ?"-கௌரியின் குரல் கேட்க சிந்தனையை கலைத்தாள் அவள்.

"பைராகியா?"

"ஆமாம்மா...இந்த நதிக்கு பைராகின்னு பெயர்!"

"அப்படின்னா?என்ன அர்த்தம்கா?"

"தெரியலை...எங்க தாத்தா சொல்லுவார்!இந்த நதிக்கு யாரோ ஒரு ராஜகுமாரன் தான் பெயரை வைத்தானாம்!"

"ராஜகுமாரரா?"

"ம்...இந்த நதியிடம் நாம என்ன நினைத்து வேண்டினாலும்,அதை இந்த நதி நிறைவேற்றும்!"-யாத்ரா தனதருகே தன் கரங்களால் உருவான சிவ லிங்கத்தை பார்த்தாள்.

"உனக்கும் எதாவது வேண்டுதல் இருந்தா வேண்டிக்கோ!இந்த நதி தான் பைரவக்கோட்டைக்கே உயிரோட்டம்!எல்லாருக்கும் தாய் இந்த ஜீவ நதி!உன்னோட விருப்பத்தையும் இந்த தாய் நிறைவேற்றுவாள்!"-அந்த நம்பிக்கை அவளது இருதயத்தின் வேரை தொட்டது.

"தம்பி என்னிடம் டீ கேட்டது!மறந்தே போயிட்டேன்.நான் போய் கொடுத்துட்டு வரேன்!"

"சரிங்கக்கா!"-அவள் எழுந்து சென்றதும்,அவளது விழிகள் பைராகியை பார்த்தன.

"தாயே பைராகி!!என்னோட வேண்டுதல் உனக்கு தெரியாம இருக்காது.அன்னிக்கு அந்த வேண்டுதலை சாட்சியாக்கி தான் உங்களிடம் நதிநீரை யாசகமாக வாங்கினேன்!எண்ணிய வேண்டுதலை நீங்க நிறைவேற்றினீங்க!இப்போதும் மனசுல ஒரு வேண்டுதல் இருக்கு!அதையும் நீங்க தான் நிறைவேற்றணும் தாயே!"-மனம் வைத்த வேண்டுதலுக்கு சலசலப்பே பைராகியிடமிருந்து விடையாக வந்தது.

அந்தக் கோட்டையே அதிர்ந்து கொண்டிருந்தது அந்தப் பாடலினினால்..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.