(Reading time: 10 - 20 minutes)

ன்ன அது சத்தம் என்று எட்டி பார்த்த அனைவரும் சத்தம் ஆதித்யாவின் அறையில் இருந்து வந்ததால் மௌனமாக கலைந்தனர்.

"என்னாச்சு?இந்த பையனுக்கு?"

"ஏன்மா!"

"உனக்கு சத்தம் கேட்கலையா?"-நதியின் சலசலப்பால் மெல்லியதாய் உணர்ந்த சத்தத்தை இப்போது உற்று கேட்டாள் யாத்ரா.

"யாத்ரா!நீ போய் அதை நிறுத்தும்மா!அவனிடம் இன்னொருமுறை சத்தமா பாட்டு வைத்தால்,நான் வந்து அந்த டிவி.டி.ப்ளேயரை உடைத்துவிடுவேன்னு சொல்லு!"-அவள் புன்னகைத்தப்படியே,

"சரிங்கம்மா!"-என்று எழுந்து சென்றாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அவனது அறையை நெருங்க நெருங்க சப்தம் இப்போது காதை கிழித்தது.

காதை மூடியப்படி அவனது அறை கதவை  திறந்தாள்.

பாடல் முனுமுனுத்தப்படி ஏதோ சில சி.டி.களை ஆராய்ந்து கொண்டிருந்தான் ஆதித்யா.

நேராக சென்று பாட்டை நிறுத்தினாள்.

மனதிற்கு பிரியமான பாடல் நின்றதால் திரும்பி பார்த்தான் ஆதித்யா.

"ஓய்!எதுக்கு பாட்டை நிறுத்தின?"

"உனக்கு காது நல்லா கேட்குது தானே!அப்பறம்,ஏன் இவ்வளவு சத்தம்??"

"இது எனக்கு ரொம்ப பிடித்த பாடல்!"

"இதுவா?ஒரு மண்ணும் புரியலை...இது என்ன மொழின்னே தெரியலை!இது பிடித்ததா?"

"இது சைனீஸ்!"

"சைனீஸா?"

"ஆமா!!இது ஆல்பம் சாங்!ஒரு அழகான லவ் ஸ்டோரியை பேஸ் பண்ணது!"

"என்ன ஸ்டோரி?"-ஆதித்யா புன்னகைத்தப்படியே அவளை தன்னோடு இழுத்துக் கொண்டான்.திடீரென ஏற்பட்ட நெருக்கத்தை தவிர்க்க முடியாதவளும்,தவிர்க்க விரும்பாதவளுமாய் நின்றாள் யாத்ரா.

"ஒரு ராஜகுமாரன்,ஒரு ராஜகுமாரி கதை!இரண்டு பேரும் காதலிப்பாங்க!ஆனா,சொன்னது இல்லை...இது தெரியாம அந்தப் பொண்ணோட அப்பா அவளுக்கு வேற ஒரு இளவரசனோட கல்யாண நடக்க ஏற்பாடு பண்ணுவார்!விஷயம் தெரிந்த ராஜகுமாரன் அந்த இளவரசியை விட்டு விலக பார்ப்பான்.

இது அவளுக்கு புரியாம அவனுக்கு தன் மேலே விருப்பம் இல்லைன்னு அந்த இளவரசி முடிவே கட்டிவிடுவாள்!கடைசியில ஒரு யுத்தத்துல அந்த இளவரசன் இறந்துவிடுவான்.

அப்போ அவன் சவத்தை பார்க்க பல அரசர்கள் வருவாங்க!இவளும் வருவா!அப்போ தான் கவனிப்பா,அவனோடு நெஞ்சில் அவளோட பெயரை அவன் பச்சை குத்தி இருந்ததை!!கடைசியா,அவன் மேலே சாய்ந்து அழுதப்படி இவளும் உயிரை விட்டுவிடுவாள்!அப்போ தான் அவங்க காதல் எல்லாருக்கும் தெரிய வரும்!"-கதையை கேட்ட மாத்திரத்தில் யாத்ராவின் கண்கள் கலங்கின.அதை கவனிக்காமல் எங்கோ வெறித்தப்படி அவன் தொடர்ந்தான்.

"அந்த அழகான பந்தத்தை ஒருமுறையாவது யாராவது ஒருத்தர் மனசுவிட்டு தைரியமா சொல்லி இருந்தா!இந்த வேதனைகள் நடந்திருக்காது!அவன் மரணத்துல தன்னால பிழைக்க முடியும்னு தெரிந்ததும்,அவ இல்லாத வாழ்க்கை எதுக்குன்னு எந்த முதலுதவியும் செய்துகாம,தன் உயிரை அழித்துக்கொண்டான்!எவ்வளவு அழகான காதல் பார்த்தியா!"-என்று அவள் முகத்தை பார்த்தவன் திடுக்கிட்டான்.

"ஏ..என்னாச்சு?"-அவள் பேச வார்த்தைகளை தேடி கொண்டிருந்தாள்.

"யாத்ரா..."-அதற்கு மேல் அவள் சிந்திக்கவில்லை.அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.அவளது இதயத்துடிப்பு எகிறுவதை அவனால் உணர முடிந்தது.

"என்னம்மா?என்னடா ஆச்சு?"-அதற்கும் பதில் இல்லை.

"யாத்ரா!"

"நீ என்னைவிட்டு போக மாட்டல்ல ஆதி!"-திக்கியது அவள் குரல்.

அதன் காரணம் அந்த காவியமா!அவளது இதயமா!என்பது புலப்படவில்லை.

"ஏ..ச்சீ..நான் எங்கே போக போறேன்! இதுக்கு தான் உன்னிடம் எதையும் சொல்றது இல்லை!அது வெறும் கதை தானே!அதற்கு போய் இப்படி அழற?பைத்தியமா நீ??"-இப்போது அவளிடம் அழுகை நின்று வெறும் விசும்பல் கேட்டது.

"இன்னொரு முறை!இல்லாததை இருக்குன்னு கற்பனை பண்ணி அழு!அப்படியே கன்னத்திலே இரண்டு அறை விடுவேன்!"-அவள் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டாள்.

"என்ன?"

"போடா!"-என்றாள் சிறு குழந்தையை போல்,

"டாவா?என்ன மரியாதை குறையுது?"

"..........."-அவள் அமைதியாக புன்னகைத்தாள்.

'கல்யாணத்துக்கு அப்பறம் ஏறிவிடுமா?"-இப்போது அவளது புன்னகை நாணமாக உயர்ந்தது.

அழகிய பந்தமானது ஒரு இடத்தில் உருவாக வேண்டுமென்றால்,அந்த இடத்தில் வெகுளித்தனம் அவசியம்!!நிச்சயம் ஆணோ,அல்லது பெண்ணோ தன் துணையின் வெகுளித்தனத்தை ரசிக்காமல் இருக்க மாட்டார்கள்.

அவ்வாறு ரசனையானது காதலில் உதிக்கும் சமயத்தில் காதலானது அற்புத பந்தமாக மாறுகிறது!!ஒருவரின் தவறுகளையும் நேசிப்பவர்கள் அதனை திருத்த முனைவர்,தண்டிக்க அல்ல!!நேசித்து வாழுங்கள்!!

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:969}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.