(Reading time: 15 - 30 minutes)

வர்கள் கிளம்பி வீட்டிற்கு வந்தனர், சாயந்திரம் அவர்களை கூட்டிக் கொண்டு வெளியே போனான் ருத்ரா, 'சித்து, ரூப், பொடானிகல் கார்டன் போகலாமா,' என்று கேட்டான்

'போகலாம் டாடி,' என்றான் ரூப் 'என்ன சித்து,' என்று கேட்டான்

'நீங்க எங்க சொன்னாலும் போகலாங்க,' என்றாள்

'இப்பெல்லாம் ருத்ரான்னு, கூப்பிடமாட்டேங்கிற, என்னை ருத்ரான்னே கூப்பிடு, சித்து, அழகா இருக்கு,' என்றான்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அவளுக்கு வெட்கமாக இருந்தது, அன்று, ரூப் என்று, நினைத்து அப்படி கூப்பிட்டதை அவன் கேட்டு விட்டான், அதையே இப்போது சொல்கிறான், என்று 'அதெல்லாம் நீங்கள் இல்லாதப்போதான், ' என்று வெட்கத்துடனேயே சொன்னாள், அதைக் கேட்ட ருத்ரா, ‘ஏன் எனக்கு பிடிக்குது என்று சொல்றேன், அப்படியே இனிமேல் கூப்பிடு என்று அவள் கையை எடுத்து முத்தம் கொடுத்தான், இப்போது என்னை ஒரு முறை அப்படிக் கூப்பிடேன்,’ என்றான் அவள் ‘இப்போது முடியாது, அப்புறம் கூப்பிடறேன்,’ என்றாள்

அவனும் சத்தமாக சிரித்துக் கொண்டு ‘ரூப்,  அம்மா உன்னை எப்படி கூப்பிடுவாள் என்றான், அவனும், ‘ருத்ரா, சாரி ரூப் என்று ,' என்றான், மறுபடியும் சத்தமாக சிரித்தான், 'இப்போ ஏன் அப்படி கூப்பிட மாட்டேன்  என்கிறாள், ஏன் என்று கேள்,' என்றான் மகனிடம் குத்தமாக  

'ஏன் மாம் அப்பாவை பேர் சொல்லிக் கூப்பிட மாட்டேன் என்கிறாய், அப்பா இல்லாத போது என்னை அப்படி கூப்பிட்டாயே, இப்போ டாட் பாவம் கேக்குறார் இல்ல, கூப்பிடேன்,' என்றான் அவள் மகன்

'அதெல்லாம் நேரம் வரும் போது கூப்பிடுவேன்,' என்று மெதுவாக வெட்கப் பட்டுக் கொண்டே சொன்னாள்

'அது எப்போ வரும்,' என்று கேட்டான்

'அது வரும் போது வரும்,' என்று சிரித்துக் கொண்டே கூறினாள்

அவனும் சிரித்துக் கொண்டான், அவர்கள் அந்த ஒரு வாரம் தங்கள் வேலைகளோடு,  அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர், புரிந்துக் கொண்டனர், ருத்ரா தன் மனைவியையும், தன் மகனையும் இரண்டு கண்களாக பார்த்துக் கொண்டான், சித்ராவிடம் காதலை பொழிந்தான், அவள் நெகிழ்ந்தாள், அந்த அன்பு வெள்ளத்தில் மிதந்தாள், ரூபேஷும், தன் அப்பாவின் கவனிப்பில் சந்தோஷத்தில் குளித்தான்,

அவர்கள் சென்னைக்கு கிளம்பி சென்றார்கள், எல்லோருக்கும் நிறைய துணிகள் வாங்கி குவித்தார்கள், ருத்ராவுக்கு தன் மனைவியை பார்க்கவே பெருமையாக இருந்தது,

தீபாவளி அத்தனை மனிதர்களுடன், வெகு விமரிசையாக கொண்டாடினார்கள், சித்ராவும், ரூபேஷும், சித்ராவுக்கோ சின்ன வயதிலிருந்து அவளும் தன் அம்மாவும் மட்டுமே, அம்மா இறந்த பிறகோ, அவளும் தன் மகனுமாக தனியாகவே எப்பவும் இருந்த நிலையில், இப்போதோ தான் இவ்வளவு மனிதர்கள், உறவுகளுடன் இந்த தீபாவளியை கொண்டாடுவது, அதுவும் தன் கணவனுடன் சந்தோஷமாக கொண்டாடினாள், ரூபேஷ் பட்டாசு வெடிக்க பயந்தான், அவனை இழுத்துக் கொண்டு எப்படி வெடிக்க வேண்டுமென்று கத்துக் கொடுத்து கூடவே நின்று இருவரும் சரமாரியாக வெடித்தனர்,

கிறிஸ்துமஸ் லீவில் சிங்கப்பூர் போகலாமென்று, தன் மனைவி மகனுக்கு பாஸ்போர்ட் எடுத்து, போவதற்கு டிக்கெட்டும் வாங்கி விட்டான், அவர்கள் சிங்கப்பூர் போய் ஒரு வாரம் நன்றாக என்ஜாய் செய்தனர், ஆறாவது நாள் காலையில் எழுந்திருக்கும் போதே சித்ரா'என்னவோ செய்கிறது,' என்றாள், 'என்ன,' என்று கேட்டான் ருத்ரா,'

'தெரியலை, தலை சுத்துகிறது,' என்று கூறிக் கொண்டே, பாத்ரூமுக்கு ஓடிப் போனாள், அங்கு கொளக், என வாந்தி எடுத்தாள்,

உடனே 'இரு, ஏதாவது டாக்டர்ஸ் இருக்காங்களா பார்க்கிறேன்,' என்றான் ருத்ரா

'இல்லை வேண்டாம் எல்லாம் இந்தியா போய் பார்த்துக்கலாம்,' என்றாள்

'என்ன, உனக்கு என்ன பயித்தியமா, இப்போது வாந்தி எடுத்தால், இந்தியா போய் பார்க்கலாம் என்கிறாய்,' என்றான்

'ஒன்றும் பெரிசாக இருக்காது,' என்றாள்

'அப்படியென்றால், எதனால் என்று உனக்குத் தெரியுமா,'

அவள் சிரித்துக் கொண்டே, அவன் தோளில் தலையைச் சாய்த்து, எனக்கு நாள் தள்ளிப் போயிருக்கிறது,' என்று வெட்கத்துடன் கூறினாள்

'அப்படீன்னா என்ன அர்த்தம்,' என்று கேட்டான் அவளிடம்,

அவள் 'இது கூடவா தெரியாது, மத்ததெல்லாம் தெரிகிறது, இது தெரியாதா,' என்று கேட்டாள்

'ஏய் புதிர் போடாமல் என்ன என்று சொல்லு ,'

'ஐயோ, ரூபெஷுக்கு தங்கை வேண்டுமென்று நீங்கள் ஆசைப் பட்டீர்களே அதான்,' என்றாள்

'எனக்கு பெண்ணா,' என்று அவளை இழுத்து அனைத்து முத்தம் மாறி பொழிந்தான், அவளை தூக்கிக் கொண்டு அவள் புடவையை விலக்கி, அவள் வயிற்றில், முத்தம் கொடுத்தான், அவள், அவன் சந்தோஷத்தை பார்த்து மயங்கி நின்றாள்,

அவர்கள் இந்தியாவிற்கு போனவுடன் டாக்டரை பார்க்க போனார்கள், டாக்டரும் அதை உறுதிப் படுத்தினார், வீட்டிற்கு போய் பெரியவர்களிடம் கூறி ஆசி வாங்கினர், தாத்தாவிற்கு மிகுந்த சந்தோஷம், ருத்ரா, ரொம்ப சந்தோஷமாக இருக்கப்பா, இது உனக்கு நிலைத்து இருக்கனும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்,' என்றார் உணர்ச்சி மிகுதியில்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.