(Reading time: 11 - 22 minutes)

குட்டீஸ்களின் சத்தம் கேட்டு அறையை விட்டு வெளியே வந்த அர்னவ், அவர்கள் இருவரும் அடம் பிடித்துக்கொண்டிருப்பதை பார்த்து அவர்களிடத்தில் வந்து சமாதானம் செய்ய, இருவரும் அழுதனர்….

“என்னடா… ஏண்டா… இப்படி சண்டை?...” என அவர்களின் கைப்பிடித்து சரயூவிடத்தில் அவன் அழைத்து செல்ல அவன் சமையலறைக்குள் செல்ல, அங்கே சரயூ இல்லை…

வேறு எங்கே இருப்பாங்க?... என்ற தேடலோடு அவன் எல்லா இடத்திலும் தேட, எங்கேயுமே இல்லை அவள்…

ஒருவேளை அவர்களது அறையில் இருப்பார்களா என்ற எண்ணத்தோடு அவன் அங்கே செல்ல, கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள் சரயூ…

பார்த்ததும் பதறியபடி, “சிஸ்…. என்னாச்சு….” என்றபடி அவளருகில் சென்று நெற்றியில் அவன் கைவைத்துப் பார்க்க அது நெருப்பென சுட்டது…

“சிஸ்… என்னப் பாருங்க…” என அவன் அவளை எழுப்ப, அவள் எழவில்லை…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“மாமா… அம்மாக்கு என்ன ஆச்சு?...” என மழங்க மழங்க விழித்தபடி அவனையும் அவளையும் மாறி மாறி பார்த்தபடி பூஜாவும் பிரேமிதாவும் நிற்க,

“ஒன்னுமில்லடா…” என தலை அசைத்தவன், உடனேயே ஒரு ஆட்டோவை வரவழைத்து, மூவரையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்…

போகும் வழியிலேயே திலீப்பிற்கு அவன் தகவல் சொல்லிவிட, மருத்துவமனையில், அவளை பரிசோதித்துவிட்டு, “பயப்படும்படி எதுவும் இல்லை… வைரஸ் ஃபீவர் தான்… கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்… பார்த்துக்கோங்க…” என்றபடி டாக்டர் மருந்து மாத்திரைகள் எழுதி கொடுத்துவிட்டு செல்ல, அவன் தமக்கையை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்…

அவள் தோள் பிடித்தபடி அழைத்து வந்த அர்னவிடமிருந்து மனைவியை விலக்கி, அவளை அழைத்துக்கொண்டு சென்றவன் உள்ளே அவளிடம் கத்த ஆரம்பித்தான்…

அவனின் குணம் அறிந்த அர்னவ், குட்டீஸ்களை அவர்களது அறைக்குள் அனுப்பிவிட்டு, சமையலறைக்குள் சென்று பாலை காய்ச்சி குட்டீஸ்களுக்கு கொடுத்துவிட்டு சரயூவின் அறைப்பக்கம் வந்தான்…

“இதுக்குத்தான் சொன்னேன்… அம்மா ஊரும் வேண்டாம்… ஒரு மண்ணும் வேண்டாம்னு… கேட்டீயா நீ?...”

“……”

“இப்போ இப்படி இழுத்துட்டு வந்து நிக்குற?... இதெல்லாம் உனக்கு தேவையா?.....”

“………….”

“தேவை இல்லாம அலைஞ்சு இப்படி காய்ச்சல் வந்து படுத்து கிடக்குற?.. இப்போ யாருக்கு கஷ்டம்???.”

“…………..”

“என்னைக்கு என் பேச்சை நீ காதுல வாங்கியிருக்க… இன்னைக்கு வாங்குறதுக்கு…”

“…………”

“ஒழுங்கா மருந்து மாத்திரையை போட்டு தூங்கி எந்தி… அதான் உதவிக்கு அந்த அக்கா வருவாங்கல்ல, அவங்களை எல்லா வேலையும் பார்க்க சொல்லிட்டு நல்லா ரெஸ்ட் எடு… ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு… நான் மதியம் வரேன்… குட்டீஸ்களை உன்  தம்பி பார்த்துப்பான் அந்த அக்கா வர்ற வரை… நீ தூங்கு… மதியம் நான் வரும்போது பாதி குணமாயிருக்கணும் நீ… புரிஞ்சதா?...” என்ற அக்கறை வார்த்தைகள் பாதி, கண்டிப்பு வார்த்தைகள் பாதியுமாய் அவளிடம் பேசிவிட்டு வெளியே வந்தவன், அர்னவினை அழைத்து பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, வேலைக்கு சென்றதும், அர்னவ் சரயூவின் அறைக்குள் வந்தான்…

படுத்திருந்த அவள் எழுந்து கொள்ள முயற்சிக்க, “சிஸ்… வேண்டாம்…. ரெஸ்ட் எடுங்க… காலையில டிபன் ரெடி பண்ணிட்டிருக்குறேன்… கொஞ்ச நேரத்துல எடுத்துட்டு வரேன்…” என்ற தம்பியை பார்த்து சிரித்தவள்,

“உனக்கு ஏண்டா கஷ்டம்?... இரு நானே செய்யுறேன்…” என்றபடி மீண்டும் எழ முயற்சிக்க,

“மாமா சொல்லிட்டு போனது உங்களுக்கு நினைவிருக்கா?... இல்லையா?...” என கேட்க, அப்படியே தொய்ந்து அமர்ந்தாள் அவள்…

“உங்களை வேலை செய்யவிட்டா, அவர் வந்து என் சட்டையை தான் பிடிப்பார்… என் பொண்டாட்டியை உன்னை பார்த்துக்க சொன்னேனே… ஏண்டா அவளை வேலை செய்யவிட்டேன்னு அப்புறம் எங்கிட்ட சண்டைக்கு வந்துடுவார் சிஸ்… பார்த்துக்கோங்க…” என அவன் லேசாக புன்னகைத்தபடி சொல்ல,

“போடா… போடா…” என்றாள் அவளும் புன்னகைத்தபடி…

“தேவை இல்லாம உனக்கு வேற கஷ்டம் இல்லடா?... இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டு வேலை பார்க்குறதுக்கு அந்த அக்கா வந்துடுவாங்கடா… நீ கவலைப்படாத… அவங்க எல்லாத்தையும் பார்த்துப்பாங்க…” என சரயூ சொல்ல,

“சரி… சிஸ்… நீங்க இப்போ ரெஸ்ட் எடுங்க…” என்றபடி அவளை படுக்க வைத்துவிட்டு குட்டீஸ்களுக்கு காலை டிபனை கொடுத்துவிட்டு, தமக்கைக்கும் சாப்பாடு கொடுத்து மருந்து போட சொல்லிவிட்டு சாப்பிட அவன் அமர்ந்த போது சரயூவின் செல்போன் சிணுங்கியது…

யாரென்று பார்த்தபோது, திலீப் எண் அது என தெரிந்து, “சொல்லுங்க மாமா… அக்கா தூங்கிட்டிருக்காங்க…” என அர்னவ் சொன்னதும்,

“ஓ… சரி… காய்ச்சல் குறைஞ்சிடுச்சாடா?... இப்போ எப்படி இருக்குறா?... சாப்பிட்டாளா?.. எதாவது கொடுத்தீயா?...” என கேட்க, அர்னவிற்கே ஆச்சரியம் தான் திலீப் கேள்விகள்…

“சாப்பிட்டாங்க… குட்டீஸ்-ம் சாப்பிட்டாங்க… மாத்திரை இப்போ தான் போட்டிருக்காங்க… ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கேன்…”

“சரி… அந்த அக்கா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க… வீட்டு வேலையையும், கொஞ்சம் அவளையும் பார்த்துக்க சொல்லு… நான் மதியம் வரேன்…”

“ஓகே…” என அர்னவும் சொல்ல, “சரி…” என்றபடி போனை கட் செய்தான் திலீப்….

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.