(Reading time: 23 - 45 minutes)

டித்தவர்களுக்கு ஓரளவு நடப்பதை ஊகிக்க முடிந்தது..முதல் விஷயம் அமர்நாத் இப்போது பொறுப்பில்லில்லை..அடுத்தது அதர்வா அவரின் மகன் மற்றும் அவனின் நண்பன் விநாயக்..அவர்களை நெருங்கினால் குற்றவாளியை நெருங்கிவிடலாம்..ராம் இத வச்சு அடுத்த லெவல் இன்வெஸ்டிகேஷன் பாப்போம்டா,அப்புறமா தேவைனா மத்த பேஜை படிக்கலாம்..ம்ம்ம் சரி பரணி..லேப்டாப்பை கொஞ்சம் எடு ஹாஸ்பிட்டல் பத்தி பாக்கலாம்..ஹாஸ்பிட்டலின் வெப்சைட்டில் இன்னும் சில விஷயங்கள் தெளிவாகின..அமர்நாத் பொறுப்பிலிருந்து விலகி இரண்டு வருடங்கள் ஆகின்றது..அதன் முதன்மை பொறுப்பாளர் தற்போது அதர்வா எனினும் முக்கிய முடிவுகள் அனைத்துமே அமர்நாத்தின் கையெழுத்தின்றி நடைபெறமுடியாது..மேலும் அந்த விநாயக் என்பவன் அதர்வாவின் தாய்மாமன்..அது மட்டுமில்லாது ஒன் ஆப் த ஷேர் ஹோல்டர் ஆப் எஸ்.எம் குரூப்…அமர்நாத்திற்கு இந்த ஹாஸ்பிட்டல் மட்டுமில்லாது பல தொழில்கள் நடந்து கொண்டிருக்கிறது..படிக்க படிக்க பரணி  தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்..

டேய் இவனுங்களா எப்படிடா இவ்ளோ பிசினஸ் மெய்ண்டெயின் பண்றாங்க..நமக்கு இருக்குற ஒரு வேலையை பாக்குறதுக்கே நாக்கு தள்ளுது..

ம்ம்ம் அதனாலதான் தவறுகளோட எண்ணிக்கையும் இவங்ககிட்ட அதிகமா இருக்கு..எந்த அங்கிள்ல மூவ் பண்ணாலும் புது புது விஷயங்கள் வந்துட்டேயிருக்கு..எங்க இருந்து ஆரம்பிக்குறதுன்னே தெரிலடா..

நீ சொல்றதும் கரெக்ட் ராம் அனுமார் வால் மாறி போய்ட்டேதான் இருக்கும் போல..சரி விடு ராம் என்ன பண்றதுநு யோசிப்போம்..போய் படு ரொம்ப லேட் ஆயிடுச்சு..

ஓ.கே மச்சான் நீ படு நா பைவ் மினிட்ஸ்ல வரேன் என்று கூறிவிட்டு இன்னுமாய் தகவல் கிடைக்கிறதா என்று ஏறிட்டான்..அதில் ஒரு செய்தியை பார்த்தவனுக்கு கண்கள் மின்னியது,அவர்களை நெருங்க இதை விட நல்ல சந்தர்ப்பம் இருக்கவா போகிறது..மறுநாளே அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடிவெடுத்தான்…நிம்மதியாய் தூங்கியும் போனான்…மறுநாள் அவன் காட்டியதை பார்த்த பரணியோ வாயடைத்து நின்றான்..

“Wanted care taker for Mr.Amarnath..former MD of S.M groups…contatct:94********

ராம் நீநீநீநீநீ,,.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

ஆமாடா நா இந்த வேலைக்குப் போக போறேன்..

டேய் வேணாம்டா…ரொம்ப பெரிய இடமா தெரியுது கண்டிப்பா இதுல நீ டேரெக்டா இன்வால்வ் ஆகணுமா??

பரணி இது நம்மளை நம்பி குடுத்த வேலை நாம போகாம….

அதில்லடா ராம்…

கவலபடாத மச்சி..எனக்கு ஒண்ணும் ஆகாது பாத்துக்கலாம்.. ACPகிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்றேன்..போனில் அவரை அழைத்து விஷயத்தை கூறினான்..முதலில் தயங்கியவர் அவனின் உறுதியை கண்டு வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார்..அடுத்ததாக அந்த விளம்பரத்தில் இருந்த எண்ணிற்கு அழைத்தான்…

ஹலோ எஸ்.எம் குரூப் ஆப் கம்பனீஸ்..ஹவ் கேன் ஐ ஹெல்ப் யு…பெண்ணின் குரல் இனிமையாய் ஒலித்தது..

ஹாய் திஸ் ஸ் ராம் அண்ட் ஐ ஜஸ்ட் சா தி அட் ஃபார் தி கேர் டேக்கர்,.

ஓ.ஓ.கே ப்ளீஸ் கம் டுமாரோ அண்ட் மீட் மீ இன் அமர்நாத் பவன்..

ஓ.கே தேங்க் யு..

போனை வைத்தவனின் முகத்தில் ஒரு வெற்றி புன்னகை,என்ன ராம் என்ன சொன்னாங்க??

அமர்நாத் பவன்க்கு வர சொல்லிருகாங்கடா,

என்னது அவர் வீட்டுக்கே வா..

ம்ம்ம் இந்த வாய்ப்பை நாம தவற விடகூடாது பரணி…கடவுள் நம்ம பக்கம் இருக்காரு அதான் இப்படி ஒரு வாய்ப்பு தேடி வந்துருக்கு..

டேய் கவனமா இரு ராம்..

கண்டிப்பாடா…

மறுநாள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தவனை கம்பீரமாக வரவேற்றது “அமர்நாத் பவன்….

றுநாள் காலை வழக்கத்தை விட உற்சாகமாய் விடிந்தது மகிக்கு..இன்னும் முப்பதே நாட்கள் மிஸஸ்.மகிஷா ராம் ஆக போகிறாள்,எல்லாமே ஏதோ கனவில் நடப்பதாய் தோன்றியது..அதே உற்சாகத்தோடு கிளம்பி பரணிக்காக காத்திருந்தாள்..இன்றிலிருந்து அவனோடே அலுவலகம் சென்று திரும்புவதாய் ஏற்பாடு..சிறிது நேரத்தில் பரணியும் வந்துவிட இருவரும் அலுவலகத்தை அடைந்தனர்..வந்து அவளிடத்தில் அமர்ந்த நொடி மகியின் கைப்பேசி ஒலித்தது..அன்று வந்ததை போன்றே ப்ரைவேட் நம்பர்..தயக்கத்தோடு அதை எடுத்தாள்..

ஹலோ..

என்ன மகி பாடிகார்ட்டோட தான் ஆபீஸ் வருவ போல..

யாரு மிஸ்டர் நீ என்ன வேணும் உனக்கு??

எனக்கு என்ன வேணும்னு  ராமிற்கு தெரியும்..அத மனசுல வச்சுட்டு அவங்க வேலைய மட்டும் பாத்தா எல்லாருக்கும் நல்லது,பாவம் அநியாயமா இப்போ நீ வேற மாட்டிக்கிட்ட…சொல்லி வை உன்னோட வருங்கால புருஷன்கிட்ட..

இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது..மகி அனைத்தையும் ரெக்காட் பண்ணி வைத்திருந்தாள் அதை ராமிற்கும் பரணிக்கும் பார்வேட் செய்தாள்…அதோடு இப்போது எதுவும் பேச வேண்டாம் எனவும் எஸ் எம் எஸ் அனுப்பிவிட்டாள்,..

அலுவலகம் முடிந்து ஹாஸ்ட்டலில் அவளை விடுவது போல் விட்டுவிட்டு இன்னொரு வாசல் வழியாக அவளை ராம் கூறியிருந்த ஹோட்டல்க்கு அழைத்து வந்தான் பரணி..ராம் அங்கே இவர்களுக்காக காத்திருந்தான்..வந்தவர்கள் நிதானபடுத்திக் கொள்ள நேரம் கொடுத்தவன் மெதுவாக பேச ஆரம்பித்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.