(Reading time: 8 - 16 minutes)

"னக்கு என்னாச்சுடா?ஏன் ஒரு மாதிரி இருக்க?"

"எனக்கு ஒண்ணுமில்லையே!"

"இல்லை...நீ என்னமோ டிஸ்ட்ரப்பா இருக்க!"

"அதெல்லாம் இல்லைங்க..."

"என் சிவன்யா பற்றி எனக்கு தெரியும்!"

"அது...கொஞ்ச நாளா மனசே சரியில்லைங்க..ஏதோ தப்பு நடக்கப்போறா மாதிரியே இருக்கு!"

"என்னடா!"-இதமாக கேட்டான் திவாகர்.சிவன்யா அவனை இறுக அணைத்துக்கொண்டாள்.

"ஒண்ணுமில்லைம்மா!நான் இருக்கேன்.சரியா!பயப்படாதே...!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

"ம்..!"-திவாகர் அவளது முகத்தை நிமிர்த்தினான்.

"ஒண்ணுமில்லை..."-மெல்ல அவளது கேசத்தைக் கோதியப்படி அவளை சமாதானம் செய்தான் அவன்.அவனது நெஞ்சினில் சாய்ந்து ஆறுதல் தேடிய சிவன்யாவை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம்!!

"என்ன சொல்ற அஸ்வின்?அந்த அஸைண்மண்ட் முடிக்க தான் இன்னும் 4 மாசம் டைம் இருக்கே!"

"இல்லை சார்...அவங்க 10 நாள்ல கேட்கிறாங்க!"

"என்ன நினைச்சிட்டு இருக்கான் அந்த மகேந்திரன்!இஷ்டத்துக்கு டைம் மாற்றுவானா!"

"சார்...இதை நாம முடிக்கலைன்னா,நம்ம கம்பெனி அடுத்த 10 வருஷத்துக்கு நிமிரவே முடியாது!"

"என்ன..."-தனது தலையை அழுத்திப் பிடித்துக்கொண்டான் மகேஷ்.

"வெளியே இரு..!"

"ஓ.கே.சார்!"-அஸ்வினை வெளியே அனுப்பிவிட்டு ஏதேதோ சிந்திக்கலானான்.

அரை மணி நேரம் கடந்திருக்கும்...

தனது கைப்பேசியை எடுத்தான்.

திவாகருக்கு அழைப்பு விடுத்தான்.

"என்னடா?"

"எங்கே இருக்க திவா?"

"ஆபிஸ்ல!"

"ஒரு சின்ன பிரச்சனைடா!"

"என்ன?"

"அந்த மகேந்திரா இன்டஸ்ட்ரியலிஸ்ட்ஸ் அந்த அஸைண்ட்மண்டை 10 நாள்ல கேட்கிறாங்க!"

"என்ன?பத்து நாள்லயா?"

"ஆமாடா!"

"என்ன நினைச்சிட்டு இருக்கான் அவன்?நேரம் பார்த்து பழி வாங்குறானா?"

"இப்போ என்னடா பண்றது!"

"பேசாம ஒண்ணு பண்ணு!அந்த வேலையை ராத்திரி பகல்னு பார்க்காம செய்தாதான் டைம்குள்ள முடிக்க முடியும்!நீ ஒரு 10 நாள் என் வீட்ல வந்து தங்கு!சேர்ந்து முடிச்சிடலாம்!"

"நல்ல யோசனை தான்.ஆனா,சிவா..சிவன்யா தனியா இருப்பாளே!"

"அதான் லட்சுமி இருக்காங்களே!"

"இருந்தாலும்..அந்த வீட்டில அவளை தனியா விட பயமா இருக்குடா!"

"ஏன்?அந்த வீட்டுக்கு என்ன?"

"இல்லை..சிவா கொஞ்ச நாளாகவே தனியா இருக்க பயப்படுறா!"

"ஓ..."

"பேசாம நீ அங்கே வந்துடேன்டா!"

"எங்கே?"

"வீட்டுக்கு!"

"லூசா நீ?நான் எப்படி அங்கே...!"

"ஏன் நீ இதுவரை அங்கே வந்ததே இல்லையா?"

"டேய்!வந்து பார்த்துட்டு போறது வேற,அங்கே தங்குறது வேற!"

"இந்த பிலாசபி எல்லாம் வேணாம்!ப்ளீஸ்டா..!என் பிசினஸே உன் கையில தான்டா இருக்கு!வாடா!"

"மஹீ!"

"நான் சிவன்யாக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்!நீ ஈவ்வனிங் அங்கே போயிடு!நான் நைட் வந்துடுறேன் சரியா?"

"இல்லைடா..!"-இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

"டேய்!டேய்!"-திவாகர் தனது கைப்பேசியை தனது தலையில் முட்டிக்கொண்டான்.

வெளியே மறுப்பு தெரிவித்தாலும் மனதுள் மகேஷின் முடிவை எண்ணி இன்பம் அடைந்துக் கொண்டிருந்தான் அவன்.

வீட்டில் இருந்த சிவன்யாவின் மனம் செல்லும் பாங்கினை விளக்குவது சிறிது கடினமே!அவள் ஒரு நேரம் இன்பத்தில் திளைத்தாள்.மறுநேரம் எதையோ எண்ணி படபடத்தாள்.ஒரு நேரம் அவள் முகத்தில் தங்களின் காதலை தமையன் எவ்வாறு ஏற்பார் என்ற அச்சம்!மறு நேரம் தனது காதலை எண்ணி நாணம்!அனைத்திற்கும் காரணம் அவன் வருகை!காலையில் மகேஷ் தொடர்புக் கொண்டு திவாகரின் வருகை குறித்து கூறியதும் எவ்வகை பாவனையை அதற்கு வழங்குவது என்று புரியாமல் தவித்தாள் சிவன்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.