(Reading time: 29 - 58 minutes)

தற்குள் பேப்பருக்குள் தலையை நுழைத்திருந்த மித்ரன் நிமிர்ந்து பார்த்து சிரித்தானாகில்…… மனோவோ அதற்கு மேல் அம்மா எதுவும் சொல்லும் முன்னும்…..

“அவங்க இப்டியே இருக்கட்டும்மா….நீங்க ஸ்பெஷலா சாப்பாடு கொடுத்தா குண்டாகிடப் போறாங்க….அதான் சாப்பாடு கொடுத்துதான் கூப்டுட்டு வந்திருக்கேன்….இப்பவே கிளம்பிடுவோம்….” அம்மாவைப் பார்த்து விஷமச் சிரிப்போடு சொல்ல

மனோ மட்டும் தனியாக இருந்திருந்தால் இந்நேரத்திற்கு அம்மாவிடமிருந்து ஒரு சின்ன அடியாவது கிடைத்திருக்கும்….. ஆனால் மாப்பிள்ளை முன்னால் மகளை என்ன சொல்லவாம்?....

அதோடு மனோ பெரும்பாலும் அம்மாவிடம் இப்படி கலகலவென விளையாடும் பெண்ணெல்லாம் கிடையாது….அவ்வப்போது அம்மாவுக்கே அட்வைஸ் செய்யும் மிஸ்.பொறுப்ஸ்…..

அதோடு சில மாதங்கள் முன்வரை கல்யாண பேச்செடுத்தால் கடித்து குதறுவதற்கு தயாராகும் தங்க மங்கை….ஆக இப்பொழுது மகளை இந்த வகையில் பார்க்க அவருக்கு பூரிப்பாக இருக்கிறது…

இது எல்லா அம்மாக்களுக்குமே இயல்பு….திருமணமாகி கணவன் வீடு சென்ற மகள் முதல் முறை வரும் போது அவள் முக உற்சாகம்தான் மகளுக்கு எப்படிப் பட்ட வாழ்க்கை அமைந்திருக்கிறது என்பதை அம்மாவுக்கு காண்பித்துக் கொடுக்கும் கண்ணாடி….அதை ஆவலும் தவிப்புமாய் அளக்கும் தாயுள்ளம்…

இதில் இயல்பு தாண்டி இருமடங்கு மகிழ்ச்சியில் வந்திருக்கும் மகளைப் பார்க்கவும்…மித்ரன் தனியாக ஸ்விஸ் சென்றிருந்ததால் அவருக்கு வந்திருந்த ஒரு உறுத்தல் ஒன்றுமில்லாமல் போகிறது அவருக்கு…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்... 

“அம்மா அவங்கள எதோ வி ஐ பி மாதிரி யோசிக்காதீங்கமா…..நம்ம அகிய எப்டி பார்த்துப்பீங்களோ அப்டியே இவங்களையும் பாருங்க….அதுதான் நல்லா இருக்கும்…..” இந்நேரம் அம்மாவுக்கு அடுத்த அட்வைசை சொல்லிவிட்டு  மனோ  விஜிலாவைப் பார்க்க மாடியேறினாள்…

ஒருவேளை யாரும் கண்காணித்தால் கூட, வந்திருப்பது விசாரணைக்கென்றோ….அதுவும் வர்ஷனைப் பற்றிய விசாரணைக்கென்றோ தோன்றிவிடக் கூடாது என்பது அவசியம்.……

னோகரி விஜிலா இருந்த அறையில் நுழையும் போது அவள் படுத்து, தலையணையில் முகம் புதைத்து….ஒரு கையால் அருகில் படுத்திருந்த புதல்வனின் தளிர் கரம் பற்றி இருந்தாள்………

அலைகழிந்து கொண்டிருந்த மனமல்லவா விஜிலாவுக்கு…….அதோடு கை குழந்தை வேறு…. ஆக எப்போதோ தூங்கி…எப்போதும் விழித்திருந்து என இழுபட்டுக் கொண்டிருக்கிறது அவளது இரவு பகல்கள்…

இப்போது விஜிலா அருகில் கிடந்த குழந்தையோ, கை காலை ஆட்டிப் பார்த்து அவன் தலைக்கு மேல் சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை இமிடேட் செய்து கொண்டிருந்தான்…..

 விஜிலாவின் மனதிலோ முன்பெல்லாம் வர்ஷனுடன் வாழ்ந்த நாளில் தினமும் காலை விடியும் நேர வழக்கம் ஊர்வலமாகிக் கொண்டிருக்கிறது…

எப்போதும் காலையில் இவள் அரைத்தூக்கத்தில், அரை குறையாய் கண் திறந்து எழுந்து வரும் போது, அவன்  அடுத்த அறை சோஃபாவில் புத்தகமும் கையுமாக உட்கார்ந்திருப்பான்….. அப்படியே போய் அவன் முன் முழந்தாளிட்டு……அவன் மடியில் முகம் புதைத்து….

 இவள் இதைச் செய்யும் போது புத்தகத்தை கை மாற்றிவிட்டு இவள் தலையில் மீது வலக்கையை வைப்பான் அவன்…. அப்படியே அவனை வயிற்றோடு வாகாக பிடித்தபடி கண் மூடிக் கிடப்பாள் இவள்…..

அந்நேரம் இவளுக்கு அது தாய் மடி…. அப்படியே பல நாட்கள் மீண்டுமாய் தூங்கியும் போயிருக்கிறாள்….

அம்மா இல்லை என்றான பின் இவளது அப்பா, தானே தாயும் தந்தையுமாகித்தான் தன் பிள்ளைகளை வளர்த்தார்…. அப்பாதான் இவளது உலகம்….. ஆனாலும் வர்ஷன் இவள் வாழ்வில் வந்த பின்பு இவள் அறிந்த அன்பின் ஆழ அகலங்கள் அதிகம்….. அவனிடம்தான் அன்னை மடி என்ற வார்த்தை தரும் முழுப் பொருள் என்ன என்பது இவளுக்கு அனுபவம்…. 

எப்படி அவன் இவளை விட்டுப் போனான்??? குருதி கொட்ட குடைந்தோடுகிறது கேள்வி இவளுள்…

‘காதல்ல நல்ல காதல், கெட்ட காதல்னு என்ன இருக்கு….’ என அதற்கான பதிலும் ஞாபகம் வர….. துடி துடித்துப் போய் துள்ளி எழுந்து அமர்ந்தாள் விஜிலா….

“அச்சோ விஜிலா பயந்துட்டீங்களா…? தூங்குறீங்கன்னு நினச்சேன்…..குட்டிப் பையன் விழிச்சிறுக்கவும்…..அவன கொண்டு போய் அவங்க சித்தப்பாட்ட காமிக்கலாம்னு நினச்சேன்…பயங்காட்டி இருந்தேன்னா சாரி” குழந்தையை தூக்கிக் கொண்டிருந்த மனோ விஜிலா எழுந்த வேகத்தில் தடுமாறிப் போனாலும்…. பதறி எழுந்த விஜிலாவை ஆசுவாசப் படுத்த முயன்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.