(Reading time: 29 - 58 minutes)

பின் குரலின் விரைப்பு மொத்ததையும் நீக்கி, இதமான இளகிய தொனியில் ”எங்களுக்கும் நீங்க நல்லா இருக்கனும்றதை தவிர வேற என்ன வேணும் விஜிலா….டேக் கேர்….” என விடை பெற்றாள்.

விஜிலாவிடமிருந்து இதற்கு மேல் எதையும் இபோதைக்கு கேட்டுப் பெற முடியும் என அவளுக்கு தோன்றவில்லை. அதோடு ஒரு அப்பாவியை இவள் டார்ச்சர் செய்ததா ஆகிடக் கூடாது….

னோ இறங்கிப் போன பின்பும் விஜிலாவின் மனம் மித்ரன் பற்றி இப்போது அவள் கேள்விபட்ட விஷயங்களிலேயே சுற்றிக் கொண்டு இருக்கிறது…. அப்பா இறந்ததை கூட பார்க்க மறுக்கப்பட்ட ஒரு நிலை….. அது இவளை ரொம்பவுமே தாக்கியது…..இவளும் ஏறத்தாழ அப்படி ஒரு சூழலில் மாட்டினாள்தானே…வர்ஷன் மட்டும் இல்லைனா அன்னைக்கு இவள் கதையும் அப்படித்தானே போயிறுக்கும்…

ஆனா இவளுக்காக வந்த வர்ஷன் கூட மித்ரனுக்காக போகலை…. “தெரியலை விஜு….அவன்ட்ட சொல்லியும் வர மாட்டேன்னு சொல்லிட்டான்னு எதோ அந்த டைம் கேள்விப்பட்ட நியாபகம்…..அம்மாவுக்கோ எனக்கோ இன்பாவுக்கோ அதை அந்த நேரம் யோசிச்சு கவனிக்கிற அளவுக்கு மன நிலையும் இல்ல….அப்டி ஒரு ஷாக்…..பொதுவா அம்மா அழுது நாங்க பார்த்தது இல்ல….அப்ப அவங்க ரொம்பவுமே அழுதுட்டு இருந்தாங்களா….அதோட பாதி நேரம் மயக்கத்துலதான் இருந்தாங்க…..கொஞ்ச நேரம் தெளியும்…அப்றம் திரும்பவும் மயங்கிடுவாங்க…. நான் அந்த டைம்ல அப்பாவ நினச்சு அழுததையும்விட அம்மாவ நினச்சு பதறுனது அதிகம்….அப்டி இருந்துச்சு அம்மா கண்டிஷன்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்... 

அப்பா இனிமே இல்லைன்றதை நினைக்கவே முடியாத அந்த நேரத்து வலி….அதில் ஃப்யூனரல்னா என்னனு கூட தெரியாம எல்லாத்தையும் நான் நின்னு சமாளிக்கனும்…..கூடவே அடுத்து நேஷன் க்ரூப்ஸ் நிலமை என்னனு அந்த நிலமையிலும் நம்மை பிச்சு பிடுங்குற ஒரு கூட்டம்……இதுல எப்பவும் எதுக்காகவும் வீட்டில் இல்லாத ஒருத்தன், ஏன் இன்னைக்கும் வர மாட்டேன்னு சொல்லிட்டான்னு தேடி துருவி அவனை கெஞ்சி கூத்தாடி வர சொல்ல தோணலை….பைதவே எப்பவுமே அவன் எங்க குடும்பம்னு எனக்கு அது வரைக்கும் தோணுனதும் இல்லை….

 ஆரம்ப காலத்துல அவனால பரச்சனை வரும்னு பாட்டி சொல்றதே வேத வாக்கா பட்டுச்சு…… அப்றம் வளந்த பின்ன ஒரு ஸ்டேஜ்ல, அம்மாவும் அப்பாவும் என்னதான் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா இருக்க மாதிரி தெரிஞ்சாலும், அவங்களுக்குள்ள இந்த மித்ரன் விஷயம்  ஒரு பெரிய பிரிவு சுவரா நிக்குது….ரெண்டு பேருமே உள்ளுக்குள்ள சந்தோஷமா இல்லைனு புரிய ஆரம்பிச்சுது….அதுக்கும் எனக்கு மித்ரன் மேலதான் வெறுப்பா இருக்கும்……

பட் இப்ப யோசிச்சா….அவன் இன்னைக்கு இப்டி இருக்க ஏதோ ஒரு வகையில நாமளும் காரணம் ஆகிட்டமோ…அவனோட அம்மாவை அவன்ட்ட இருந்து பிரிச்சுட்டமோ…இன்னும் பெட்டரா சிச்சுவேஷனை நாங்க ஹேண்டில் செய்துறுக்கலாமோன்னு இருக்கு…அப்பா எங்களை பேட்ச்சப் செய்ய எவ்ளவு ட்ரைப் பண்ணிருக்காங்கன்னு இப்ப புரியுது…அப்போ அம்மா பாட்டி ரெண்டு பேரும் மித்ரனை விலக்கினதுதான் மனசுல பதிஞ்சுருக்கு….ப்ச்…”

ஒரு முறை இந்த ஃப்யூனரலுக்கு மித்ரன் வராததை பற்றி வர்ஷன் குறிப்பிட்டது ஞாபகம் வருகிறது..

சற்று நேரம் இதில் உழன்று கொண்டிருந்த விஜிலாவுக்கு இப்போதுதான்  உறைக்கிறது….. இவள் நேரில் போய் மித்ரனுக்கு ஒரு ஹாயாவது சொல்ல வேண்டும் அது தான் மரியாதை என….

இவள் தன் முடி உடை எல்லாம் பிறர் முன் செல்லும்படி தகுதிப் படுத்திக் கொண்டு படி இறங்க…..

வீட்டின் வரவேற்பறை சோஃபாவில் மித்ரன் உட்கார்ந்திருக்க……நெருக்கத்தில் அவன் முன் முழந்தாளிட்டு, குழந்தையை அவன் மடியில் கிடத்தி , குழந்தை வழுவிடாதவாறு தானே பிடித்திருந்தாள் மனோ.

மித்ரன் குழந்தையை தூக்குவதில் இப்போதுதானே ஆரம்ப கட்ட ட்ரெய்னிங்கில் இருக்கிறான்…..அதில் அவன் இடக்கையில் காயம் வேறு இருந்ததால் மனோவே குழந்தையைப் பிடித்திருந்தாள்….

இந்த காட்சியைப் பார்த்த விஜிலாவுக்கோ பாய்கிறது ஒரு உணர்வு நதி….

 இது ஏறத்தாழ இவளும் வர்ஷனும் உட்காரும் முறை….. ஒரு வேளை வர்ஷன் இப்போது வந்தால் இவள் கூட இப்படித்தான் குழந்தையை அவனிடம் காண்பிப்பாளோ….? பிறண்ட சிந்தனை ஒன்று பெண்ணைத்தாண்டி ஓட….

 கண்ணை இறுக்கி மூடி தலை சிலுப்பி…கண்ணில் வந்துவிட்ட கண்ணீரை சுண்டி இவள் தன்னை சமன் செய்து நடப்புக்கு வருகிறாள்…..

மித்ரனும் மனோவும் சின்ன குரலில் பேசி சிரித்தபடி எதோ ஒரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தாள்…..இடையில் சென்று அவர்கள் இதத்தை கெடுக்க இவளுக்கு இஷ்டமில்லை......

குழந்தையையும் மனோவையுமாய் பார்த்து பேசிக் கொண்டிருந்த மித்ரனின் வலக்கை, தன் மனைவியின் தலை மேல் இருக்கிறது….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.