(Reading time: 18 - 36 minutes)

தைஜூவை வா என்று சொன்னவனிடத்தில், நேரத்தை விரயமாக்காமல், சதியின் நிலையைப் பற்றி தைஜூ சொல்ல, உள்ளுக்குள் பதறியவனாய் ஹாலுக்கு வந்தான் ஜெய்…

“ஜெய்… ஹாஸ்பிட்டல் போகலாம்ப்பா… உடனே வண்டியை எடு… சதி மயக்கமா ஆகுறாப்பா…” என்ற தகப்பனின் குரல் காதில் விழுந்த போதிலும், அவனது பார்வை என்னமோ அவளிடத்தில் தான் இருந்தது…

சற்று நேரத்திற்கு முன்னால் தன் சட்டையைப் பிடித்து உலுக்கி பேசிய பேச்சென்ன, இப்போது இப்படி ஓய்ந்து போய் பொம்மையாய் கிடப்பதென்ன?... என நினைத்தவனுக்குள் வலி ஊற்றென பெருக, தனது செல்போனை தேட, அப்போது தான் அதை உடைத்தெறிந்த நியாபகமும் அவனுக்கு வர, கூடவே அவனது கோபமும் அவனுக்கு நினைவு வந்தது…

தன் கோபத்தினால் தான் இப்படி ஆகிப்போனாளோ… ஒரு வார்த்தை கூட பேசாது வந்துவிட்டேன் என்ற ஆதங்கத்தில் இப்படி ஆகிவிட்டாளோ… என்ற கேள்விகள் மாறி மாறி மனதினை வாட்ட, வீட்டிலிருந்த லேண்ட்லைனில் டாக்டரின் எண்ணை அழைத்து தகவல் சொல்ல, அடுத்த பத்து நிமிடத்தில் அவர் அங்கு இருந்தார்…

“பயப்படுறதுக்கு ஒன்னுமில்லை… ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்…” என சோமநாதனிடத்தில் சொல்லியவர்,  

ஜெய்யை அழைத்து, “கொஞ்சம் மென்ட்டலி டிஸ்டர்ப்ட் ஆகியிருக்காங்க ஜெய்… மத்தபடி வேற ஒன்னுமில்லை… அதுமில்லாம எதையோ ரொம்ப ரொம்ப யோசிக்குறாங்க… அதுவும் இப்படி மயக்கத்துக்கு காரணம்… கொஞ்சம் பார்த்துக்கோங்க… ரெஸ்ட் எடுக்க வைங்க… போதும்…” என சொல்லிவிட்டு செல்ல, அவனுக்குள் பல போராட்டங்கள்…

மெல்ல தகப்பனிடம் சொல்லி அவளை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி கூற, அவர் முதலில் தயங்கினார் இந்த நிலையில் எப்படி என்று…

பிரசுதி, தட்சேஷ்வர் இருவரையும் நியாபகப்படுத்தியதும், சோமநாதனுக்கு அவன் சொல்வதே சரி என்று பட்டது…

டிரைவரை அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டு, அவளிடம், “தைஜூ, நீயும் அப்பாவும் கிளம்புங்க…” என்றவன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை கொஞ்சமும்…

சதியை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு சோமநாதனும் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்ப, தைஜூவும் அவருடன் கிளம்பினாள் தட்சேஷ்வரின் வீட்டிலிருந்து…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்...

சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஓம்…. என்ற மந்திரம் நீங்காது ஒலித்துக்கொண்டிருக்க, சுற்றியிருந்த காந்த அலைகள் மனதினை அப்படியே மெய்மறக்க செய்து, உள்ளத்திலிருக்கும் கஷ்டத்தினை எல்லாம் இருந்த தடம் தெரியாமல் அப்படியே மறைந்து போக செய்ய, அதில் அப்படியே கண் மூடி இருந்தான் ஜெய்…

“வந்து ரொம்ப நேரமாச்சா சிவா?...”

சிவா என அவனை வேறு யாரும் அழைத்ததில்லை… சிறுவயதிலிருந்தே அவனை அவ்வாறு அழைப்பது பிரம்மரிஷி ஒருவரே…

“இல்ல தாத்தா… இப்போதான் இங்க வந்தேன்… வீட்டுக்கு போன் பண்ணி அவசரமா இங்க வர சொன்னீங்களே… சொல்லுங்க தாத்தா…”

“உன்னோட நிலையும் எனக்கு புரியுது சிவா… நீ நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே உனக்கு கிடைச்சிட்டிருக்குறது வலி மட்டும் தான்… அப்படி இருக்கும்போது சதியோட வார்த்தை உன்னை இன்னைக்கு மட்டும் இரண்டு தடவை காயப்படுத்தியிருக்குன்னு எனக்கு புரியுது…” என்றதும் அவரை அதிர்ச்சியோடு பார்த்தான் அவன்…

“அவ ஏன் இப்படி பேசுறான்னு உனக்கும் போக போக தெரியும் சிவா… அதே போல நீ பட்டுட்டிருக்குற வலிக்கும் காரணம் நீ தெரிஞ்சிக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை…… காலம் அதை உனக்கு தெரியப்படுத்த காத்திட்டிருக்கு சிவா… நீ ஆயத்தமாக தயாரா இரு…”

“……………..”

“அவளோட அந்த வார்த்தைகள் உன்னை கொல்லாம கொல்லுதுன்னு எனக்கும் புரியுது… நினைச்சாலே எனக்கு இன்னமும் உடம்பு புல்லரிக்குது… அவ பேசின வார்த்தைகளுக்கான முழுமையான அர்த்தம் அவ இன்னும் தெரிஞ்சிக்கலை சிவா.. தெரிஞ்சிருந்தா அவ அப்படி பேசியிருக்கமாட்டா…”

“………….”

“அதோட தன்னையும் அறியாம அவ அப்படி பேசுறான்னா, உன் வலிக்கும் ஒரு முடிவு வரப்போகுதுன்னு தான் அர்த்தம்… இன்னும் தெளிவா சொல்லணும்னா உன்னோட வலிக்கான மருந்தை அவ தேட ஆரம்பிச்சிட்டா சிவா…”

“தாத்தா…………………….நீங்க சொல்லுறது……….”

“உண்மைதான் சிவா… எதுக்கும் தயாரா இரு… உன்னை விட்டு நீ அவளை விலக்கி நிக்க வச்சாலும் விதி உன்னோட அவளை சேர்த்து தான் முடிச்சி போட்டிருக்கு… ஆனா அந்த முடிச்சில நிறைய பேராபத்துகளும் இருக்கு… அதுல இருந்து உன் பொக்கிஷத்துக்கு சொந்தமானவளை காப்பாத்திக்க....” என்றவர், அவன் அடுத்து பேசும் முன் அங்கிருந்து சென்றுவிட்டார் வேகமாய்…

தொடரும்

Episode 10

Episode 12

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.