(Reading time: 10 - 20 minutes)

சிறிது நேரத்தில் கதவை திறந்து வெளி வந்தவளை கண்டவனுக்கு சத்தியமாக தன் கண்களையே நம்ப இயலவில்லை. உருவத்தில் உண்டான வேறுபாடு அவனுக்கு பெரிதாக தோன்றவில்லை. ஆனால் அந்த கண்கள் ஜீவனை தொலைத்திருந்தது. அந்த இதழ்கள் புன்னகையை தொலைத்திருந்தது. அவளை கண்டவுடன் முதலில் அவனுக்கு உண்டான எண்ணம் அவனையே ஆச்சர்யம் கொள்ள வைத்தது. எண்ண பாடு பட்டாவது அவளின் அந்த சிரிப்பினை திரும்ப கொண்டு வரவேண்டுமென்று அவன் மனம் துடித்தது. கண்டவுடன் காதல் வரும் நட்ப்பும் வருமா என்ற கேள்வி அவனுக்கு உண்டாயிற்று.  அதன் பின் அவன் தன் தந்தையிடம் கூறி அவளுக்கென தங்கள் பள்ளியில் ஒரு பணியை உருவாக்கினான். அதன் பின் அவனும் எவ்வளவோ போராடி அவளை ஒரு வகையில் மீட்டு கொண்டு வந்தான். ஆனால் எவ்வளவோ போராடியும் அவனால் அவளின் அந்த இயல்பான குணத்தை வெளி கொண்டு வரவில்லை. தன்னை தானே கூட்டுக்குள் சுருக்கி கொள்ளும் நத்தையை போலெ தன் இயல்பினை உள்ளிழுத்து கொண்டாள்.

இதையெல்லாம் கூறி முடித்த முரளி, "மதி இன்னைக்கு தான் அவளுடைய அந்த சிரிப்பையும் குறும்பையும் நான் திரும்ப பார்த்தேன். அது ஏன் தெரியுமா. திரும்ப உங்களை பார்க்க போகும் அந்த சந்தோஷம். உன் மேல் அவளுக்குள்ள காதல். உன்னை பார்க்க போறோம்னு தெரிஞ்சதுக்கே இவ்வளவு சந்தோசப்படறவ உன்கூட வாழ்ந்தா எவ்வளவு சந்தோசப்படுவா. ஆனா தனிமையை தேர்தெடுத்து எந்த வாழ்க்கை அவளுக்கு சந்தோசத்தை தருமோ அதை வேண்டாம்னு இருக்கானா அவளோட வேதனையை என்னால முழுசா புரிஞ்சுக்க முடியுது. அதே போல அவளுடைய பிரச்சனை என்னனு தெரிஞ்சும் அவ தான் எனக்கு முக்கியம்னு சொல்ற உன் காதலும் எனக்கு புரியுது மதி. ஆனா மதுவுக்கு இப்போ தேவைப்படறது உன் காதல் மட்டும் இல்லை. " என்றவனை கேள்வி குறியோடு பார்த்தான் மதி.

"மதி அவளுக்கு உன்னுடைய காதலுடன் உன் குடும்பத்தின் அரவணைப்பும் ஆதரவும் முக்கியம். எல்லோரும் அவளை முழுதா ஏத்துக்கணும். அவளின் குறையை நீ பெருசு படுத்தாம இருக்கலாம். ஆனா உன் குடும்பத்தில் யாரவது ஒருத்தர் அவளை தவறுதலா ஒரு வார்த்தை பேசுனாலும் அதை தாங்கிக்கிற மனா தைரியம் அவகிட்ட இல்ல." -முரளி

"அவளுக்கு நான் அப்படி ஒரு நிலை வர விட மாட்டேன்  முரளி என்னை நீங்க நம்பலாம் " -மதி

"மதி, உங்களை நம்பலைன்னு நானோ மதுவோ இது வரை சொல்லலையே. அவளுக்குள்ளே இப்போ ஒரு தாழ்வு மனப்பான்மை வளந்திருக்கு.அதை அவகிட்ட இருந்து உடைச்சு எரியனும். அதுக்கு நீங்களும் நானும்மட்டும் இல்லை உங்க குடும்பத்துடைய உறுதுணையும் தேவை.அதை தான் நான் சொல்றேன். உங்களுடைய உறவுக்காரர்களோ இல்லை சுற்றத்தாரோ எதுவும் சொன்னா பரவாயில்லை. ஆனா அவள் வாழ்க்கை உன்னுடன் மட்டுமானது இல்லையே. இது தான் பிராக்டிகல்." -முரளி

மெல்ல மூச்சை இழுத்து விட்டவன் " முரளி, தனிமை அப்படிங்கறது நம்மளே தேர்ந்தெடுக்கும் போது சுகமானது. ஆனா அதுவே மற்றவர் நமக்கு தரும்போது கொடுமையானது. என் நிலை அது தான். இப்போ நான் எண்ண செய்யணும்?" என்று தன்னையே கேட்பவனை பார்க்கும் போது "கடவுளே இந்த காதல் தான் ஒவ்வொரு மனிதனையும் என்ன பாடு படுத்துகின்றது என்று தோன்றியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ப்ரியாவின் "என் காதல் பொன்னூஞ்சல் நீ" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"மதி முதலில் மதுவுக்கு அவளுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சினை யாருக்கும் வராதது அல்ல. அப்படினு புரியவைக்கணும். அது என் பொறுப்பு. உன் குடும்பத்துல இருக்கறவங்களுக்கு அவளுக்கும் உனக்குமான காதல் அப்பறம் அவளுடைய நிலை இதை எல்லாம் புரிய வெச்சு அவளை அவளா ஏத்துக்க வெக்கணும் இது உன் வேலை. இதெல்லாம் நடந்தா நிச்சயம் உனக்கும் மதுவுக்கும் கல்யாணம் நடக்கும். இப்படி இல்லாம நாம என்னதான் கன்வின்ஸ் பண்ணி மதுவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சாலும் வாழ்நாள் முழுக்க தன் குறையை மனசுல நினைச்சு மருகி போவா." -முரளி

"உண்மைதான் முரளி.எனக்கும் புரியுது. நான் நிச்சயம் இதையெல்லாம் செய்து முடிப்பேன்" என்று முரளியின் கையை பற்றியவன் "அதுவரைக்கும் மது உன் பொறுப்பு. நான் சொல்ல வேண்டியது இல்லை. இருந்தாலும்...அப்பறம் அடிக்கடி நான் உன்னைப்பார்க்க சென்னை வருவேன்" என்று கூற "ஹாஹாஹா என்னை பார்க்கவா இல்லை மதுவை பார்க்கவா " என்று கூறி சிரிக்க, அது வரை அதை எல்லாம் நின்று கேட்டு கொண்டிருந்தவர் கண்கள் கலங்க நடை தளர்ந்து அந்த செடிகளின் மறைவிலிருந்து வெளியே வர அவரை பார்த்து அதிர்ந்து நின்றனர் இருவரும்.

மதியை திட்டி விட்டு தன்னறைக்கு வந்த மது துவண்டு போய் படுக்கையில் விழுந்தாள்.

இன்னும் எத்தனை காலம் அவனை வருந்துகிறேன் என்று கூறி கொண்டு தன்னை தானேவருத்தி கொள்வது. இந்த வேதனை சகித்து கொள்ளும் படி இல்லையே. அவளின் மனம் துவண்டு போனது. இல்லையில்லை இது நான் செய்தே ஆகா வேண்டும் என் மதிக்காக அவரின் குடும்ப நன்மைக்காக. என் வேதனையை சகிக்க இயலாமல் என் ஒருத்தியின் சந்தோஷத்திற்காக நான் அவரை மணந்து கொள்ள கூடாது என்று ஒரு வாறாக மனதை திடப்படுத்தி கொண்டவள் மெல்ல சென்று முகம் கழுவி கண்ணாடியின் முன் நின்று தன முகத்தை திருத்தி கொள்ளவும் கதவு தட்டும் ஓசை கேட்கவும் சரியாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.