(Reading time: 10 - 20 minutes)

தவை திறந்தவள் திவ்யாவை கண்டு," ஏய்ய் என்ன நீ ஸ்டேஜில் நிற்காமல் இங்கே என்ன பண்ற" என்று கேட்க, மதுவின் முகத்தை ஆராய்ந்தபடி உள்ளே நுழைந்த திவ்யா "இல்லை மது கொஞ்சம் ரெஸ்ட் ரூம் போகணும் அப்படியே நின்னு நின்னு கால் வலிக்குது அதன் கொஞ்சம் பிரெஷ் ஆயிட்டு போலாம்னு வந்தேன் " என்று கூறியபடி பாத்ரூமில் நுழைந்தாள்.

அதன் பின் திவ்யாவிற்கு சிறிது டச் அப் எல்லாம் செய்து விட்டு ஆவலுடன் வெளியே வந்தவள் அவளை மேடையில் சரணின் அருகே அமர்த்தி விட்டு கீழே செல்லும்போதுதான் கவனித்தாள் மதியும் முரளியும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை. அதுவும் மிக சகஜமாக . சிறு ஆச்சரியத்துடனும் தன்னுடைய பிளான் எல்லாம் பணால் ஆக்கிவிட்டானே இந்த முரளி என்ற சிறு கோபத்துடனும் அவர்கள் அப்படி என்னதான் பேசிக்கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடனும் அவர்களுக்கு பின்னல் இருந்த வரிசையில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.

மதியும் முரளியும் அவளறியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தத்துடன் சிரித்து கொண்டனர்.

இருவரும் ஒருவர் தோளில் ஒருவர் அடித்து கொண்டு ஏதோ ஒரு ஜோக்கை பற்றி பேசி சிரித்து கொண்டும் மிக மிக இயல்பாக பேசிக்கொண்டிருந்தனர் அவள் இருப்பதையே கவனிக்காதவர்கள் போல. ஒரு கட்டத்தில் பொறுக்க இயலாமல் (எல்லாம் பொறாமையில் தாங்க...ஆனாலும் மது ரொம்ப மோசம். மதி ஒரு பெண்ணோடு பேசுனா பொறாமை படலாம் ஆனா ஒரு பையனோடு பேசுனாலுமா )  " முரளி " என்று அழைக்க, மதியும் முரளியும் ஒன்றாக திரும்பி மதுவை பார்த்தனர். முரளியை கூப்பிட இவர் ஏன் திரும்பி பார்க்கிறார் என்று எண்ணியவள் "வா முரளி சாப்பிட போகலாம் பசிக்குது" என்று கூற , முரளியோ "வா  மதி நீயும் பசிக்குதுனு சொன்னையே " என்று அவனையும் அழைக்க , முரளியை பார்த்து ஒரு முறை முறைத்தவள் "சரி நீ உன் பிரெண்டோட வா முரளி. நா போறேன்" என்று முன்னே செல்ல, மதியோ "முரளி நீ அவ கூட போ நா வீட்டுக்குகெளம்பறேன். பாவம் அவளை வருத்த பட வைக்க வேண்டாம். என்னை ஹர்ட் பண்றத நெனைச்சு தன்னையே கஷ்டப்படுத்திக்கிறா" என்று சொல்லி அவனை மட்டும் அனுப்பி வைத்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

 தன்னருகில் முரளி மட்டும் அமர்ந்ததை கண்டவள் மெல்ல தலையை நிமிர்ந்த்தி மதி வருகிறானா என்று பார்க்க அவன் வரவில்லை. சரி கை கழுவி விட்டு வருவானாயிருக்கும் என்று எண்ணி அமைகியாக அமர்ந்தாள். அதற்க்கு வேறு யாரோ சிலர் அருகிலிருக்கும் இருக்கைகளில் அமர ஐயோ மதிக்கு இருக்கை இல்லையே இன்னும் என்ன செய்கிறார் வராமல் என்று கவலை கொண்டவள் தலையை உயர்த்தி பார்க்க அது வரை அமைதியாக இருந்த முரளி "மதி போயிட்டான் நீ நிம்மதியா சாப்பிடு . சாப்பிட பசியோட வந்தவனை தான் திருப்பி அனுப்பிட்டியே" என்று கூறியபடி உணவில் கவனம் செலுத்த வேதனை நிரம்பிய முகத்துடன் அங்கிருந்து எழுந்து சென்றாள் மது. அவள் சென்ற சில நொடிகளில் தானும் உண்ணாமல் எழுந்து சென்றான் முரளி. அவனுக்கு தெரியும் சில நேரம் வலி மிகுந்த அறுவை சிகிச்சை தான் நல்ல பலனை தரும் என்று. அவனை வருந்துவதாக சொல்லி தன்னையே வருத்தி கொள்பவள் இன்று தன்னால் அவன் வருந்தினான் அன்று அறிந்தால் தன்னுடைய இந்த அவனை காயப்படுத்தும் முயற்சியை குறைத்து கொள்வாள் என்று எண்ணி தான் அவ்வாறு பேசினான்.ஆனாலும் மனம் கேளாமல் அவளை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவள் பின் சென்றான்.

மதியும் முரளியும் செய்யும் முயற்சிகள் பலன் தருமா...இதில் இவர்களுடன் கூட்டணி அமைக்கும் அந்த மூன்றாமவர் யார்...அறிவோம் அடுத்த பகுதியில்...

தொடரும்

Episode 11

Episode 13

{kunena_discuss:945}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.