(Reading time: 6 - 11 minutes)

"ல்லைடி லூசு.. விடு டாஅம்மு"

"இல்லை என்னால தான்.." அவள் மேலும் வருந்த அதை தடுக்க நினைத்தவன்,

"ஏண்டி இதெல்லாம் உனக்கே நியாமா இருக்கா? ஏதோ இது தான் முதல் தடவை மாதிரி சீன் போடற? இரண்டு வாரத்துக்கு முன்னாடி நீ கடிச்சு வெச்சது இப்போ தாண்டி ஆறி இருக்கு"

"ஈஈஈ"

"இளிக்காத, காலையில தான் யோசிச்சேன் அதுக்குள்ள அடுத்த 'மார்க்' போட்டுட்டா"

"விடு டா"

"ஹ்ம்ம்.. அது எப்படி டி  கரெக்ட்டா ஒரு காயம் ஆறுனதுக்கு அப்புறம் வேற ஏதாவது பண்ணிடற?"

"அதை காமிச்சு கொடுக்கறதே உன் வாய் தான், அதை முதல்ல கண்ட்ரோல்ல வை, இப்போ வா போலாம்"

"ம்ம்ம்ம் போம்மா தாயே"

"ம்ம்ம்ம் இதே பயம் இருக்கணும்" என்று சிரித்தவாறு அவன் கை பற்றி இழுத்து சென்றாள்.

அதன் பின்னே மாலை முழுவதும் அவனை சந்திக்கும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவில்லை. மேனேஜருடன் புது ப்ராஜெக்ட்டிற்கான 'கிளைன்ட்' மீட்டிங்கில் அவன் பிசியாகி விட இவள் தனியே அமர்ந்து அவன் சொல்ல வந்ததை பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

மாலை பரத் பக்கத்துக்கு டீம் ராகவ் உடன் எங்கோ வெளியில் சென்றிருக்க, அவன் வந்தவுடன் பார்க்கிங் வருமாறு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு தன் பையை எடுத்துக் கொண்டு பார்க்கிங் ஏரியா சென்றாள். இன்னும் ஐந்து நிமிடத்தில் வருவதாக பரத்திடம் இருந்து தகவல் வர, தன் ஸ்கூட்டியில் பையை வைத்தவள் திரும்பி அவன் வருகிறானா என்று பார்க்க, வந்தவன் வேதாந்த்.

அவளுக்கு எதிர் வரிசையில் நிறுத்தியிருந்த தன் பைக்கின் அருகில் சென்றவன் நின்று திரும்பி,

"உன்கிட்ட பேசணும்ன்னு சொன்னேன்ல.. அன்னைக்கு உன் ஸ்கூட்டி..."

உன்னாலே மெய் மறந்து நின்றேனே

உன் தோளில் சாய்ந்து கொள்ள வந்தேனே.....

வேதாந்த் அந்த காரணத்தை சொல்ல துவங்குகையில் அவள் அலைபேசி அழைத்தது!! அந்த பாடல்..!! யாருக்காக அதை 'ரிங்க்டோன்' ஆக வைத்திருந்தாலோ அவன் அழைக்கிறான்.

எரிச்சல் மண்டிய முகத்துடன் அவன் அவளை பார்ப்பதை அறியாதவள் கையில் இருந்த அலைபேசியை காதுக்கு கொடுத்திருந்தாள்!!

எதிரில் உள்ளவன் என்ன சொல்ல வருகிறான்??!!! ஒருவன் அமர்ந்து கொண்டிருக்கிறானே?! என்று கூட எந்த யோசனையும் இல்லாமல் அவள் அப்படி செய்தது வேதாந்திற்கு பற்றிக் கொண்டு வந்தது.

அவளின் அலட்சியம் பிடிக்காமல் அங்கிருந்த செல்ல திரும்பியவனின் வெறுப்பை பெற்று தந்தது அடுத்து அவள் சொன்ன வார்த்தை!!

"தேவ்...!!!"

சரேலென திரும்பியவன் இறுகிய கல்லாய் அப்படியே நின்றிருந்தான்.

"தேவ் தேவ்??? தேவ் இருக்கீங்களா? தேவ் ஏன் பேச மாட்டேங்கிற.. தேவ்..!!!!"

அவன் செவிகளில் வழி புகுந்த வார்த்தை காலையில் இருந்து அவனை அலைக்கழித்து எண்ணங்களை மீண்டும் கொண்டு வந்தது. அவள் செல்போனை பிடுங்கி தூரமாய் விட்டெறிந்தால் தான் என்ன? என்று தோன்றியது.

"தேவ்.. என்னப்பா பேசவே மாட்டேங்கறீங்க? தேவ்?"

அவ்வளவு தான் அவன் கட்டி காத்த பொறுமை அனைத்தும் பறந்திருந்தது.

வேகமாக அவளருகில் சென்றவன் அவள் இவனை பார்ப்பதற்குள் அவள் காதிலிருந்து செல்போனை பிடுங்கி எறிந்து விட்டிருந்தான்..!!

அவள் மிரட்சியுடன் பார்க்க, கீழே விழுந்து சிதறிய செல்போனை பார்த்தபடி அங்கே பரத் அதிர்ந்து நின்றிருந்தான்..!!

Episode 04

Episode 06

ஊஞ்சல் ஆடும்..!!!!

{kunena_discuss:884}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.