(Reading time: 25 - 49 minutes)

ரு தடவையா?... ஏன்?... அட்லீஸ்ட் ஒரு த்ரீ டைம் ட்ரை பண்ணுங்க…. அப்பதான் அதைப் பத்தின ஒரு தெளிவான பதில் கிடைக்கும்…”

“சரி சரி… அதை அப்புறம் பார்க்கலாம்… இப்போ எக்ஸாம்க்கு என்ன பண்ணணும் முதல்ல அதை சொல்லு…”

“நோட் பேனா ரெடியா?...”

“இல்ல எடுக்கலை…”

“அப்போ எடுத்துட்டு சொல்லுங்க…”

“சரி… இப்போ கொஞ்சம் வொர்க் இருக்கு… முடிச்சிட்டு சொல்லுறேன்…”

“ஓ… சரி.. என்ன வொர்க்?...”

“வண்டிக்கு பஞ்சர் பார்க்கணும் … பார்த்துட்டு சொல்லுறேன்…”

“சரி சரி… பார்த்து போயிட்டு வாங்க… வந்ததும் மெஸேஜ் பண்ணுங்க… வைக்குறேன்…” என அவள் சொல்லி முடித்ததும் சரி என்றபடி போனை கட் செய்துவிட்டு வண்டியைப் பஞ்சர் பார்க்க எடுத்துச் சென்றான் அர்னவ்…

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு,

“இப்பவே மணி 8 ஆச்சு… அதனால நாளைக்கு சொல்லுறேன் சரியா?...” என அவனும் அவளுக்கு மெஸேஜ் அனுப்ப,

“ஏன் இப்போ சொன்னா என்ன?...” என பதிலும் உடனே வந்தது அவனுக்கு…

“இல்ல நேரம் ஆச்சுல்ல… அதான்…”

“எழுத வலிக்குதுன்னு சொல்லுங்க… ஒத்துக்குறேன்… அதை விட்டுட்டு பொய் சொல்லாதீங்க… சரியா?...” என்ற அவளின் மெஸேஜினைப் பார்த்ததும்,

“கரெக்டா கண்டுபிடிச்சிட்டாடா…” என மனதினுள் திட்டிக்கொண்டாள் அவளை…

“என்ன பதிலேக் காணோம்?...”

“இருக்குறேன் சொல்லு…. என்ன எழுதணும்…?..”

அவன் கேட்டதும், வரிசையாக அனைத்தையுமே எழுத சொன்னாள்.. பெயரிலிருந்து அப்ளை செய்யவேண்டியதிற்கு தேவையான அனைத்தையுமே…

“எல்லாமேவா?....” என சலித்துக்கொண்டவன், அவள் சொல்ல சொல்ல ஒவ்வொன்றாய் தனது சர்டிபிகேட் பார்த்து எழுத ஆரம்பித்தான்…

கடைசியில் இன்னும் ஒரு சில தகவல்களே இருக்க,

அவன் அவளிடம், “சாப்பிட்டியா?...” எனக் கேட்டான்…

“மார்க் ஷீட் கொடுத்த டேட் எழுதிட்டீங்களா?...” என அவள் காரியமே கண்ணாய் இருக்க,

“பிடிச்சா உடும்பு பிடிதான் போல…” என மனதினுள் நினைத்துக்கொண்டவன்,

“சாப்பிட்டியான்னு கேட்டேன்…” என்றான்…

“இப்போ என்ன உங்களுக்கு பசிக்குதா?... போங்க போய் சாப்பிட்டுட்டு வாங்க…”

“இல்லடி… அம்மாக்கு மருந்து வாங்கணும்… மெடிக்கல் போகணும்.. அதான்...” என பாவமாக மெஸேஜ் அனுப்ப, அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது..

“அய்யோ கார்த்தி… அதை அப்பவே சொல்லியிருக்க வேண்டியது தான… லூசு…”

“இல்லடி… நீ வேற கேட்டுட்டே இருந்த… நானும் எழுதிட்டே இருந்தேன்.. முடிஞ்சிடும்னு நினைச்சேன்.. அதான் ஒரேடியா முடிச்சிட்டு போய் வாங்கலாம்னு இருந்தேன்..”

“கிளம்புங்க நீங்க முதல்ல.. அம்மாக்கு மருந்து வாங்கி கொடுத்துட்டு வாங்க…” என அவள் அடிக்காத குறையாய் விரட்ட,

“சரிடி… நீ சாப்பிடு… நேரமாச்சுல்ல… நான் போயிட்டு வந்துடுறேன் உடனே…”

“இல்ல நீங்க மருந்து வாங்கிட்டு, சாப்பிட்டுட்டே வாங்க… நான் வெயிட் பண்ணுறேன்… இல்லன்னா நாம நாளைக்கு மிச்சத்த எழுதிக்கலாம்…”

“இல்லடி… பரவாயில்லை… நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன்… பக்கத்துல தான் கடை… வந்து சாப்பிட்டுட்டு உனக்கு மெஸேஜ் பண்ணுறேன்… சரியா?..”

“ம்ம் சரி கார்த்தி…”

அவனிடமிருந்து எந்த பதிலும் வராது போக, அவன் கிளம்பிவிட்டான் என புரிந்து கொண்டு சிரிப்புடன் அமர்ந்திருந்தாள்..

அரை மணி நேரம் கழித்து வந்தவனிடத்தில், அம்மாக்கு மருந்து வாங்கியாச்சா?...என்ன மருந்து திடீர்னு?... என்னாச்சு?.... நீங்க சாப்பிட்டீங்களா?... எனக் கேட்டு பதிலை வாங்கிய பின்னரே சற்று நிம்மதியடைந்தாள்…

எல்லாம் முடித்த பின்னர், “அப்பாடா முடிச்சாச்சு….” என சோம்பல் முறித்தவனிடத்தில், எழுதிய அனைத்தையும் போட்டோ எடுத்து தனக்கு அனுப்ப சொன்னதற்கு அவன் மறுத்தான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.