(Reading time: 25 - 49 minutes)

துக்கு மாட்டேன்னு சொல்லுறீங்க?... அப்போ நீங்க எழுதலை அப்படித்தான?..”

“எழுதிட்டேன் நிஜமா…”

“அப்போ போட்டோ எடுத்து அனுப்புறதுல என்ன பிரச்சினை உங்களுக்கு?..”

“ம்ம்… நாட் இண்டிரஸ்டட்…” என்றான் அவளை வெறுப்பேற்ற..

“முடியாது… இப்பவே எனக்கு நீங்க அனுப்பனும்…”

“என்னடி ரொம்ப தான் மிரட்டுற… நானும் அப்போ இருந்து பார்க்குறேன்… டீச்சர் மாதிரி நடந்துக்குற…”

“ஓ… மிரட்டுற மாதிரி தெரியுதா?..”

“ஆமா ரொம்ப தாண்டி பண்ணுற…”

“பரவாயில்லை சொல்லிட்டு போங்க… இப்போ நீங்க அனுப்புங்க…”

“எதுக்குடி இப்படி அடம் பண்ணுற?...”

“நீங்க அனுப்புங்கன்னு சொன்னேன்…”

“நான் எழுதிட்டேன்டி… சத்தியமா… என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு?...”

அவன் அப்படி கேட்டதும், உங்க மேல இல்லாத நம்பிக்கையா கார்த்தி என வாய்விட்டே சொன்னவள்,

“அதெல்லாம் இருக்கு… ஏன் உங்களுக்கு இல்லாத மாதிரி தெரியுதா?...” என மெஸேஜ் அனுப்ப,

“அய்யோ என் ஹேண்ட் ரைட்டிங்க் நலலா இருக்காதுடி… அதான்… புரிஞ்சிக்கோ….” என்றான் அவனும் பரிதாபமாக…

அவனின் பதிலில் சத்தமாக சிரித்தவள், “அய்யோ கார்த்தி.. கார்த்தி…” என தனக்குள் கொஞ்சிவிட்டு,

“உங்க ஹேண்ட் ரைட்டிங்க் நல்லாதான் இருக்கும்… அனுப்புங்க…” என்றதும்,

“நீ எல்லாம் திருந்தமாட்டடி… இரு அனுப்பி தொலைக்குறேன்… பார்த்து மட்டும் சிரி… அப்போ இருக்கு உனக்கு கச்சேரி…” என திட்ட…

அவன் அனுப்பியதை பார்த்து நிறைய சிரித்துவிட்டு,

“சரி சரி… பில்டப் போதும் அனுப்புங்க…” என்றாள்…

அவனும் கொஞ்ச நேரம் கழித்து புகைப்படமாய் தான் எழுதியதை அனுப்ப,

“சீக்கிரம் டவுன்லோடு ஆக மாட்டிக்குதே…” என்று புலம்பிக்கொண்டிருந்தவள் அவன் எழுத்து தெரிய ஆரம்பித்ததும், அப்படியே அதை மெய்மறந்து பார்த்து ரசிக்க ஆரம்பித்தாள்…

“என்னடி பார்த்து சிரிக்குறீயா?...”

“கார்த்தி… உங்க ஹேண்ட் ரைட்டிங்க் ரொம்ப நல்லாயிருக்கு… எனக்கு பிடிச்சிருக்கு ரொம்ப…………” என அவள் குதூகலிக்க, அவன் சிரித்தான்..

பின், “பொய் சொல்லாத, இந்நேரம் விழுந்து விழுந்து சிரிச்சிருப்பல்ல நீ… எனக்குத் தெரியும்…” என சொன்னதும்,

“இல்லன்னு சொன்னாலும் நம்பவா போறீங்க,,, விடுங்க….” என்றாள் அவளும்…

“போடி போடி… சும்மா மழுப்பாத…”

“அய்யோடா நான் எதுக்கு மழுப்பணுமாம்?...”

“எதுக்கும் இல்ல… போ போய் தூங்கு குட்நைட்…”

“ம்ம்… குட்நைட் கார்த்தி….” என்றவள், உடனேயே,

“ரொம்ப சந்தோஷமா இருந்தேன் இன்னைக்கு… உங்களால… ம்ம் பிடிச்சிருக்கு கார்த்தி உங்களை ரொம்பவே… யெஸ்… ரொம்ப பிடிச்சிருக்கு…” என அனுப்பிவிட்டு உடனேயே போனை ஆஃப் செய்து தூக்கி ஓரமாக வைத்து மெத்தையில் கண் மூடி படுத்துக்கொண்டு தானாக வெட்கப்பட்டுக்கொண்டே சிரிக்க ஆரம்பித்தாள் ஜானவி…

அதே நேரம் அர்னவின் முகத்திலும் இதமான புன்னகை ஒன்று படர்ந்திருந்தது அழகாய்…. அவளுடன் பேசிய அனைத்தையும் திரும்ப ஒருமுறை படிக்க ஆரம்பித்தான் அவன்…

படித்து முடித்தவனுக்குள் பல உணர்ச்சிகள் மாறி மாறி வெளிப்பட, அவன் செய்வதறியாது தலையைப்பிடித்துக்கொண்டான்…

“எதுக்குடி இப்படி என்னை ஆட்டிவச்சு வேடிக்கைப் பார்க்குற?... போட்டு வைச்சிருந்த பூட்டை எல்லாம் சத்தமில்லாம இன்னைக்கு உடைச்சு உள்ள வந்துட்டியேடி… பாவி… வேண்டாம் சகி… என்னை விட்டுடு… இவ்வளவு காதல் என் மேல வேண்டாம்டி… ப்ளீஸ்… நான் தாங்க மாட்டேண்டி…” என அவள் கட்டிலில் படுத்துக்கொண்டு புலம்ப, நித்திரா தேவி அவனை மெல்ல தன் உலகத்திற்குள் எடுத்துக்கொள்ள முனைந்தாள் நெடுநாள் கழித்து…

ஹாய்… ப்ரெண்ட்ஸ்… எப்படி இருக்கு இந்த வீக் அப்டேட்…

படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க… மறக்காம…

பை… பை… நெக்ஸ் வீக் அகெய்ன் மீட் பண்ணலாம்…

 

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.