(Reading time: 49 - 98 minutes)

தை நினைத்தெல்லாம் அழவென்று தெரியவில்லை பவிஷ்யாவிற்கு…..அத்தனைக்காகவும் அழ தொடங்கினாள் அவள்….

ஆனால் எந்த நிலையிலும் அப்பாவை மீறி எதை செய்யும் எண்ணமும் அவளுக்கு வரவில்லை….அதை அந்த பாசத்தை விசுவாசத்தை அவள் பெற்றோர் சட்டை செய்ததாக கூட தோன்றவில்லை……

அடுத்து  கடந்தன  இரு தினங்கள்.…. வீட்டில் என்ன நடக்கிறது என இவளிடம் சொல்லவும் யாருமில்லை……அதை அறிய இவளுமே முனையவில்லை…… எப்போதும் வீட்டில் எங்கோ தனியாய் ஓரிடத்தில் இவள்…....இதில் தான்  வந்து சேர்ந்தது அது…. அந்த தூது

அதுவும் எப்படி….?

 இவள் தன் வீட்டு தோட்டத்தில் அமர்ந்து மொட்டை வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது……..பின் பக்க சுவரிலிருந்து குதித்தாள் ரெஜினா…..

தலை முடி எல்லாம் கலைந்து முகத்தின் இருபக்கமுமாய் தொங்க…..என்னைக்கு சீவின தலையோ….. மெலிந்து …முகம் ஒடிங்கி…..கருமை படர்ந்து…. காய்ந்து இப்படியாய் ஒரு பவியை  ரெஜினா எதிர் பார்த்திறுக்கவில்லை…

“என்னாச்சு பவி….?” ஆறுதல் கோபம் அழுகை எல்லாம் இருந்தது ரெஜியின் குரலில்…..

அவள் வந்த வகையில்தான் தன்னைப் பார்க்க யாருமே இதுவரை வரவில்லை என்பதன் அடுத்த கோணம் புரிகின்றது பவிக்கு…… அப்பா விடுறதா இல்லை போல….

“சசிபால் சார் கூடதான் வந்தேன்…..நியாபகம் இருக்கா சசிபால் உன் பெரியத்தான் அதிபனோட போலீஃஸ் ஃப்ரெண்ட்….”

பவிக்கு எல்லாம் தாண்டி அந்த பெரியத்தான் பதம் வலித்தது…..

“ரெஜி அளந்து பேசு….பழசெல்லாம் முடிஞ்சு போச்சு….அதை பேசி என்ன கொல்லாத….”

“என்னடி சொல்ற லூசு மாதிரி….?”

“அப்பா கண்டிப்பா முடியாதுன்னு சொல்லிட்டாங்க……நான் காலை பிடிச்சு கெஞ்சிட்டேன்…..எதுக்கும் அசையுறதா இல்லை அவங்க….அடுத்து என்ன செய்ய முடியும்….? “ வெறுமை குரலில் அத்தனை வேதனை சுமந்து இவள்… நடந்தவைகளை சுருக்கமாய் சொல்லி வைத்தாள் ரெஜினாவிடம்.

“ஏன்டி அப்பாவ தாண்டி யோசிக்க மாட்டியா…? உங்க அம்மா அப்பா முக்கியம்தான்….அதுக்காக எவ்ளவு எஃபெர்ட் எடுத்து எல்லாம் செய்தீங்க…..நீயும் சரி அபை அண்ணாவும் சரி….. அத அவங்க யோசிக்க மாட்டாங்களாமா? ஆனா அதுக்கப்புறமும் தான் பிடிச்ச முயலுக்கு மூனே கால்னு நின்னா என்னடி செய்ய முடியும்? சரி அபை அண்ணா பக்கம் எதுவும் பழக்கம் சரி இல்ல…. குறை இருக்கு….குணம் பத்தாது…..சம்பாதிக்கலை…… நாளைக்கு உன் சம்பாத்யத்துல உட்காந்து சாப்டுகிட்டு…..உன்னையவே திமிருன்னு கொத்தி பிடுங்குவாங்க…..வெட்டியா சுத்றாங்க….லைஃப்ல சின்சியரா இல்ல…அப்ப உன்ட்டயும் சின்சியரா இருக்க மாட்டாங்க…..இப்டி எதாவது சொல்லட்டும்…..அது பெத்த பாசத்துல சொல்றது….இது என்ன மொட்ட ஈகோ… அதுக்கு நீ வேற சிங்க் சா அடிச்சுகிட்டு….

உங்க ரெண்டு பேருக்கும் யோசிச்சு முடிவு செய்ற வயசு இருக்கு….படிச்சிறுக்கீங்க… உங்களை பார்த்துகிற அளவு இயர்ன் செய்றீங்க…. அப்றம் நீங்க ஒரு முடிவுக்கு வர வேண்டியதான….?

அம்மா அப்பாவ மதிக்கனும்தான் பவி….ஆனா அதுக்கு அர்த்தம் அவங்க ஈகோகாக நாம சாகுறதுல இல்ல….. நாலு அடி அடிச்சாங்கன்னா கூட வாங்கிகலாம் தப்பில்ல… எவ்ளவோ தியாகம் பண்ணி  நம்மள வளத்துறுக்காங்களே…...ஆனா அதுக்காக அடி நெஞ்சுல   கத்தியால குத்தினா அடுத்த குத்துக்கு இடம் காமிச்சுட்டு நிக்கனுமா? அந்த மிடில் லைன் நமக்குதான் தெரியனும் பவி….

திருப்பி குத்த வேண்டாம்….தப்பிச்சாவது ஓடனுமில்லையா….? இங்க இருந்து உன் மாமாவ கல்யாணம் செய்யப் போறியா? உன்னைய உன் தங்கச்சியன்னு யார் உணர்ச்சியையும் மதிக்காத அவரா உன் அம்மா அப்பாவ நாளைக்கு நல்லா பாத்துக்க போறாரு?

சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத பவி…..பெத்த பிள்ள கடைசி காலத்துல காப்பாத்தாது…..படச்ச கடவுள்.. செய்ற வேலை சேர்த்து வச்ச பணம் எதுவும் சோறு போடாது……வரப் போற மருமகன்தான் எல்லாம் செய்வான்… இல்ல செய்யாம போய்டுவான்னு இது என்ன நினைப்பு….?

அபை அண்ணா உன் அப்பாட்ட வந்து திரும்பவும் பேசினாங்கன்னாவது உனக்கு தெரியுமா? என் பொண்ணு இன்னைக்கு வரைக்கும் என் பேச்சை தாண்டி எதையும் செய்றது இல்ல….அவளை கைகுள்ள போட்டு ஆட்டி வைக்கலாம்னு நினைக்காதீங்க….உங்க நாடகம் ஒன்னும் வேண்டாம்…..நான் என் மச்சினனுக்கே அவள குடுக்கேன்னு முடிவு செய்துட்டேன்…. அவளும் சரின்னு சொல்லிட்டான்னு சொல்லி அனுப்பிட்டாங்க உங்க அப்பா….”

பவி வலியோடு நிமிர்ந்து மட்டும் பார்த்தாள்…. “அப்பாக்கு லவ் மேரேஜ்னா சுத்தமா பிடிக்காது……லவ் பண்றோம்ன்ற ஒரு காரணத்துக்காகவே கட்டாயம் ஒத்துக்க மாட்டாங்க…”

“அதுக்கு பேருதான்டி ஈகோ…நான் சொல்றேன் கேளு,…..பேசாம இப்டியே கிளம்பு…சசி இங்க பக்கத்துல தான் வெயிட் பண்றாங்க….நேர அபை அண்ணாட்ட போய்டலாம்…..அப்றம் ஆக வேண்டியத…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.