(Reading time: 38 - 76 minutes)

வளை அப்படி சுலபமாக வழி அனுப்பிவிட்டு இவனால் வந்திட முடியுமா..?? அந்த பதினைந்து வயதிலேயே இவனால் அது முடியவில்லை... இப்போது எப்படி முடியும்..?? அதனாலேயே போகக் கூடாது என்று முடிவு செய்திருந்தான்... ஆனால் தேவாவிடம் அதை சொல்ல முடியுமா..??

"பிரியனும்னு முடிவானதுக்கு அப்புறம் நான் வந்து ஏன் வழி அனுப்பனும் தேவா..??"

"அதுவும் சரிதான்... நீ எதுக்கு வரனும்... அப்புறம் பிருத்வி உன்கிட்ட சில விஷயம் பேசனும்.. பேசலாமா..??"

"என்ன தேவா.. இப்படியெல்லாம் கேட்டுக்கிட்டு.. என்ன பேசனும்...??"

"நீயும் யுக்தாவும் பிரிஞ்சதும்.... நீ வேற கல்யாணம் செஞ்சுப்பியா..??"

அதற்கு என்ன பதில் சொல்வது..?? ஆம் என்று இவனால் எப்போதும் சொல்ல முடியாது... இல்லை என்று சொன்னால்.. ஏன் என்ற கேள்வி வரும்... அதனால் அமைதியாக இருந்தான்...

"யுக்தா வேற கல்யாணம் செஞ்சுப்பான்னு நீ நினைக்கிறியா..??"

ஒருநாள் உங்கக் கூட வாழ்ந்தா அதுவே போதும் என்று சொன்னவள்... வேறு திருமணம் செய்துக் கொள்வாள்.. என்று இவனால் சொல்ல முடியுமா..?? அமைதியாக இருந்தான்...

இரண்டுக்குமே பதில் வராததால் சிரித்தான் தேவா... " பிருத்வி அப்புறம் எதுக்கு நீங்க பிரியனும்...??"

"......."

"நீ மாமாக்காக இந்த முடிவை எடுத்தியா..?? இல்லை நீயே எடுத்தியான்னு தெரியல... ஆனா யுக்தா இந்த முடிவெடுத்ததுக்கு காரணம்... நீ மட்டும் தான் பிருத்வி... கட்டாயத்தால கல்யாணம் செஞ்சுக்கிட்டதால... உன்னை கட்டாயப்படுத்தி உன்னோட அவ வாழ விரும்பல... அதான் உன்னை விட்டுப் பிரிய முடிவெடுத்துட்டா... அவ முடிவுக்கு முழுக்க முழுக்க காரணம் நீ சந்தோஷமா இருக்கனும் என்பது தான்... அது தெரியாம மாமா உன்கிட்ட என்னன்னவோ பேசிட்டாரு...

அவ உன்னை விட்டு பிரிஞ்சாலும்... மனசளவுல உன்னை விட்டு அவளால பிரியவே முடியாது பிருத்வி... உனக்கு ஒன்னு தெரியுமா பிருத்வி...?? "

தேவா அப்படி கேட்டதும் என்ன என்று பார்த்தான் பிருத்வி...

"நீ சின்ன வயசுல கொடுத்த பொம்மையை இன்னும் அவ வச்சிருக்கா பிருத்வி... அதை நீயா நினைச்சு அதுக்கிட்ட பேசிகிட்டு இருக்கா... தாத்தா, பாட்டி வீட்ல அவ இருந்த போது அதை நான் பார்த்திருக்கேன்... என்னன்னு நான் கேட்டப்போ அவ வாயால அவளே இந்த விஷயத்தை சொன்னா.. அந்த அளவுக்கு உன்னை யுக்தா லவ் பண்றா பிருத்வி...

நீங்க ரெண்டுப்பேரும் பேசினாலே எல்லாம் சரியாயிடும்னு நினைச்சேன்... ஆனா அது நடக்கல... இப்போ மாமா செஞ்ச காரியத்தால எல்லாம் வேற மாதிரி ஆயிடுச்சு... யுக்தாவும் எதுவும் பேசாம அமைதியா போக முடிவெடுத்திட்டா... அவ உன்மேல கோபத்துல போறதா நீ தப்பா புரிஞ்சிக்க கூடாது... அதான் இதைப்பத்தி உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன்...

நான் உன்னை பார்த்த வரைக்கும் நீ எப்படிப்பட்ட கேரக்டர்ன்னு கொஞ்சம் புரிஞ்சு வச்சிருக்கேன் பிருத்வி... நீ சப்னாவை கல்யாணம் செஞ்சுப்பன்னெல்லாம் எனக்கு தோனல... என்னோட யூகம் சரின்னா... நீ மாமா சொன்னதுக்காக யுக்தாவை பிரிய முடிவெடுத்துட்டதா தோனுது...

இப்படி ரெண்டுப்பேரும் அடுத்தவங்களுக்காக பிரியறதுக்கு பதிலா... ஏன் ஒன்னு சேர்ந்து வாழக் கூடாது... இது நீங்க மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமில்லை பிருத்வி...

சின்ன வயசுல இருந்து உங்கம்மாவும் சுஜாதா அத்தையும் ஃப்ரண்ட்ஸ்... இவ்வளவு நடந்ததுக்குப் பிறகும் அவங்க ஒத்துமையா தான் இருக்காங்க... இனியும் அவங்களால அப்படி இருக்க முடியுமா..?? இனியும் இந்த ரெண்டுக் குடும்பமும் நட்பா இருக்குமா..?? அதை யோசிச்சுப் பார்த்தீயா..??

உங்களுக்காக கல்யாணத்தை தள்ளிப் போட்டிருக்கும் வரூனும், பிரணதியும்.. நம்மால தான அவங்க ரெண்டுப்பேரும் பிரிஞ்சிட்டாங்கன்னு திரும்பவும் வருத்தப்படமாட்டாங்களா..?? அவங்க அப்படியே கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும் குற்ற உணர்வோட இருக்கமாட்டாங்களா..??

ஏன் நானும், சங்கவியும் கூட காதலிக்கிறோம் ஆனா உங்க லைஃப் சரியாகனும்னு வெய்ட் பண்றோம்... இப்படி நீங்க ரெண்டுப்பேர் சேர்றதுல எவ்வளவு நல்லது இருக்குன்னு யோசி பிருத்வி...

யுக்தா மனசுல என்ன இருக்குன்னு எல்லோருக்கும் தெரியும் பிருத்வி... ஆனா உன்னோட மனசுல என்ன இருக்குன்னுதான் யாருக்கும் தெரியல... ஒருவேளை மாமாவுக்காக நீ யோசிச்சா... அவர் ஒரு பிரச்சனையே இல்லை... தன் பொண்ணு மேல இருக்க பாசத்துல ஏதோ பேசிட்டாரு.. அவளும் நீயும் சேர்ந்து வாழப் போற முடிவை எடுத்தா.. முதலில் அவர் தான் சந்தோஷப்படுவாரு...

எதையும் யுக்தா நியூயார்க் போகறதுக்குள்ள முடிவெடுக்கனும்னு இல்லை... மெதுவா நீ யோசிச்சே எடுக்கலாம்... ஆனா அவ நியூயார்க் போகறதுகுள்ள ஒருதடவை அவளை பார்த்துட்டுப்போ... அது அவளுக்கு சந்தோஷமா இருக்கும்... இது என்னோட ரெக்வெஸ்ட் தான்... ஆனா நீ என்ன நினைக்கிறியோ அதையே செய்... அப்போ நான் வரேன்..." என்று பேசிவிட்டு தேவா கிளம்பிவிட்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.