(Reading time: 20 - 40 minutes)

தெல்லாம் என் பொண்ணு பொறுப்பா நல்ல பேரு எடுப்பா பாரு” என்று தன் மகளின் தலையை வருடினார் சேகர்.

“அப்படி சொல்லுங்கபா” என்று கூறி தன் தாய்க்கு பே காட்டினாள் அனு. அவள் அப்படிச் செய்வதை பார்த்துச் சிரிப்பு வர “ நல்ல பொண்ணு நல்ல அப்பா” என்று கூறி தன் கணவனின் ஆபிஸ் பிரிப் கேஸ்யை எடுப்பதற்காக உள்ளே சென்றார்.

அனைவரிடமும் கூறிவிட்டு ராஜ சேகர் ஆபிஸ் செல்ல, பார்வதி சமையல் அறைக்குச் சென்றார்.

விஷ்ணு டேபிளில் அமர எதிரில் வந்து அமர்ந்தாள் அனு. அமர்ந்தவளின் கண்ணில் வெட்கம், நாணம், காதல் என எல்லாம் ஒன்று சேர்ந்து மின்னியது.

அதை விஷ்ணுவும் கவனிக்காமல் இல்லை. ஒரு நொடி அனுவிடம் ஏதோ மாற்றம் தெரிகிறது என்று தோன்றினாலும், அடுத்த நொடியே, “டேய் விஷ்ணு அவங்க நார்மலாதான் இருக்காங்க உன் புத்தியை அலை பாய விடாதே. அவங்க வேறு ஒருத்தருக்குச் சொந்தமாக போறவங்க” என்று அந்த எண்ணத்திற்காகத் தன்னை தானே நொந்துக் கொண்டான்.

இதற்கு மேல் அங்கே இருந்தால் சரி வராது என்று வேளைக்குக் கிளம்புவதாக கூறிக் கிளம்பிய விஷ்ணுவை “ஒரு நிமிஷம் விஷ்ணு. இன்னைக்கு நீ பிஸியா” என்றாள் அனு.

“ஒரு 2 ஹவர்ஸ் வேளை இருக்கும் அனு அதுக்கு அப்பறம் ஃப்ரி தான்” என்று அவளுக்குப் பதில் கூறினான் விஷ்ணு.

“அப்போ இன்னைக்கு எங்கயாவது வெளியே போலாமா விஷ்ணு. இஃப் யு டோண்ட் மைண்ட்” என்று கேட்டு விட்டு அவன் என்ன சொல்வானோ என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“போலாம் அனு. எங்க போகனும். அம்மா எதுவும் சொல்லமாட்டாங்களா?”என்றான் விஷ்ணு.

“அம்மாக்கிட்ட நான் சொல்லிகிறேன் விஷ்ணு.” என்று அனு பதில் அளித்தாள்.

“சரி அனு அப்போ நான் வர்க் முடிந்ததும் கால் பண்றேன், ரெடியா இருங்க.” என்று கூறிவிட்டு கிளம்பினான் விஷ்ணு.

வேளைக்குச் சென்றவன் வேளையில் கவனம் செலுத்தினாலும் முலையின் ஒரு ஓரத்தில், அனு இன்று தன்னை பார்த்த பார்வையிலும் பேச்சிலும் ஏதோ மாற்றம் தெரிகிறது, எதனால் அந்த மாற்றம். உண்மையிலே அது மாற்றமா? இல்ல நமக்கு அப்படித் தோனுதா? என்றெல்லாம் எண்ண அலைகள் ஓடிக் கொண்டிருந்தது.

தன் தாயை ஒரு வழியாகச் சம்மதிக்க வைத்த அனுவின் மனம் முழுமையாக மகிழ்ச்சியே நிறைந்திருந்தது. அவளை அறியாமலே அவள் உதடுகள் காதல் பாடல்களாய் முனு முனுக்க, குளித்து முடித்து வந்தவள், துணி தேர்வு செய்வதற்காக அலமாரியைத் திறந்தவளின் கண்களில் பட்டது அவளுக்கு மிகவும் பிடித்தமான கிளிப் பச்சை நிற புடவை. குறைந்த வேளைப்பாடுகள் கொண்டிருந்தாலும் பார்ப்பவர் கண்ணையும் மனதையும் பறிக்கு அளவுக்கு வசிகரமான சேலை அது. அதை எடுத்து உடுத்தி, லைட்டாக ஒரு மேக்கப்பை அணிந்து தன்னை கண்ணாடியில் கண்டவளுக்கு மனதில் தோன்றிய ஒரே எண்ணம் “இப்போ விஷ்ணுப் பார்த்தா என்ன சொல்லுவான்” என்பதுதான். அந்த எண்ணம் தோன்றியவுடனே ஒருவகை நானம் அவளை ஆட் கொண்டது.

கீழே இறங்கி வந்தவள் தன் தாய் எதிரே போய் நிற்க, பார்வதிக்கோ தன் மகளின் அழகை வர்ணிக்க வார்த்தையில்லை.

“என் ராசாத்தி, தங்கச் சிலை மாதிரி இருக்க” என்று அனுவிற்கு கைகளால் திர்ஸ்டி சுற்றி தன் கண்ணில் அணிந்திருந்த மையை தொட்டு அனுவின் கண்ணத்தில் வைத்தார் பார்வதி.

தன் தாயை சிறிது நேரம் கொஞ்சி விட்டு வந்து ஹாலில் அமர்ந்தவள், தன் அருகில் இருந்த ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தாள். டிவி மேல் கண் இருந்தாலும் அவள் சிந்தனை முழுவதும் விஷ்ணுவின் மேல்தான் இருந்தது. “வேளை முடிந்ததும் போன் செய்கிறேன் என்று சொன்னவன் இன்னும் கால் செய்யவில்லையே” என்று ஏக்கத்தோடு மறு கையில் வைத்திருந்த தன் கை பேசியை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எதிரில் இருக்கும் டிவியோ “எதாவது ஒரு சேனல வச்சி பாருடி, ஏன் இப்படி என்ன சாகடிக்கிற” என்று அவளை பார்த்துக் கெஞ்சியது.

சிறிது நேரம் கடிகாரத்தையும் போனையும் மாறி மாறிப் பார்த்தவள் அதற்கு மேல் தாங்காமல் “அம்மா விஷ்ணு போன் பண்ணிடாருமா. நான் கிளம்புறேன்” என்று தன் தாயிடம் பொய் கூறிவிட்டுக் கிளம்பினாள்.

காதலும் பொய்யும் ஒட்டிப் பிறந்த உடன் பிறப்புகள் போலும், காதல் வந்தாலே பொய்யும் தானாக வந்து விடுகிறது.

வீட்டிலிருந்து காரை எடுத்தவள் நேராக விஷ்ணுவின் பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்தாள்.

அங்கே வேளைச் செய்து கொண்டிருந்த விஷ்ணுவிடம் ஆறுமுகம் வந்து “உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்காங்க, ரிஷப்ஷன்ல வெய்ட் பண்றாங்க” என்றான்.

“என்னைப் பார்க்கவா? லேடியா?” ஆச்சரியமாகக் கேட்டுவிட்டு “சரி நான்ப் பார்த்துக்கிறேன் நீ போ” என்று ஆறுமுகத்தை அனுப்பிவிட்டு வித்யாவிடம் சொல்லிவிட்டு ரிஷப்ஷன்க்குச் சென்றான் விஷ்ணு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.