(Reading time: 18 - 36 minutes)

சின்னதாய் புன்னகைத்தான்..அந்த போட்டோ நல்லாயிருக்கு..எப்போ எடுத்தது??

அது நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு மாலுக்கு போயிருந்தப்போ எடுத்ததுடா..ரொம்ப நல்லாயிருந்தது அதான் ப்ரேம் பண்ணிட்டோம்..இது மாறி நிறைய இருக்கு நாளைக்கு காட்றேன்..இவ்வாறாக பேசி கொண்டிருக்கும் போதே மகியின் போனிற்கு அழைப்பு வர யாரென்று பார்த்தவள் அத்தம்மா என்றிருந்தவுடன் ராமை ஏறிட்டாள்..

அது என் அம்மா மகி..நீ அவங்கள அத்தம்மாநு தான் கூப்பிடுவ..குடு ஸ்பீக்கர்ல போட்றேன்..நா பேசினப்பறம் நீ பேசு..அக்ஸிடெண்ட் பத்தி சொல்ல வேண்டாம்டா..

ஹலோ சொல்லுங்கம்மா எப்படி இருக்கீங்க??

நல்லாயிருக்கேன் ராம்..இன்னுமா உங்க ட்ரெக்கிங் முடில..மகிகிட்ட பேசாம என்னவோ போலயிருக்குடா அதான் கால் பண்ணிணேண்..அவகிட்ட குடு போனை..

அய்யோ இப்படி ஒரு மாமியார் மருமகளை நா எங்கயும் பாத்ததில்லைமா..என்ன ஒரு பாசம்..தன்வி உங்ககூட சண்டைக்கு வராம இருந்தா சரி..இதோ கொடுக்குறேன் பேசுங்க..

..லோ..

மகிம்மா எப்படியிருக்க ரெண்டு நாள் பேசாததே ஏதோ ரொம்ப நாள் ஆனமாறியிருக்கு..

நல்..லாயிருக்கேன்..அத்தம்மா..

என்ன மகி என்னவோ போல பேசுற??உடம்பு எதுவும் சரியில்லயா??

அதெல்லாம் ஒண்ணுமில்லை..கொஞ்சம் டயர்டாயிருக்கு அவ்ளோதான்..அவள் சிரமப்படுவதை அறிந்தவன் தானே அடுத்து பேசினான்..அம்மா இப்போ தான் வந்தோம் செம டயர்டாயிருக்கு உங்க பாசமழைய அப்பறமா பொழிஞ்சுகோங்க ப்ளீஸ்..

சரி சரி ரொம்ப அலுத்தீக்காத நா வைக்குறேன்..பை..

விபத்து பற்றி அவர்களிடம் கூறாததற்கான காரணம் புரிந்தது மகிக்கு..என்ன அருமையான உறவுகள் என்னை சுற்றி ஆனால் அதையெல்லாம் அனுபவிக்கும் குடுப்பனையில்லாம இப்படி ஆய்டுச்சே..எனக்கு பழைய நினைவுகள் வருமா இல்ல இப்படியேயிருந்திரு வேணா..கடவுளே நீதான் நல்ல வழி காட்டனும்..என எண்ணியபடியே சாப்பிட்டு முடித்தாள் ராம் அவள் தூங்குவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு பால்கனியில் சென்று அமர்ந்தான்..ஏதேதோ எண்ணங்கள் அவனை அலைகழித்தன..ஒருபுறம் மகியை நினைத்து வருத்தம்,மறுபுறம் தனக்கு கொடுக்கப்பட்ட வேலை எல்லாம் நல்லபடியா முடியனும் என்ற குழப்பம் என  தனக்குள் கணக்கு போட்டு கொண்டிருக்க..நேரம் 12ஐ தாண்டியிருந்தது..எழுந்து சென்று கட்டிலில் மறுமுனையில் படுத்துக் கொண்டான்..

றுநாள் சூரியன் வழக்கம்போல் பிரகாசமான தன் கதிர்களால் உலகை வரவேற்க இரண்டு நாட்களின் தூக்கமின்மையோ,அல்லது மகி தன்னிடம் வந்துவிட்ட நிம்மதியோ ராம் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்..மகி தூக்கம் கலைந்து அருகில் கம்பீரமாய் உறங்கி கொண்டிருக்கும் கணவனை பார்த்தாள்..நல்ல தூக்கத்திலிருந்தவனை எழுப்ப மனமின்றி எழுந்து சென்று குளித்து அலமாரியிலிருந்த புடவையை எடுத்து கட்டி கொண்டாள்..கிச்சனிற்கு சென்று ஒவ்வொன்றையாய் தேடி தேடி காபியை போட்டு முடித்தவள்,கையில் காபி ட்ரேயுடன் அறைக்கு செல்ல அப்போதும் ராம் விழிப்பதாய் தெரியவில்லை..ட்ரேயை டேபிளில் வைத்துவிட்டு ராமை மெதுவாக அழைத்தாள்..

2 மினிட்ஸ்டா ப்ளீஸ்

5 நிமிடம் கழித்து லேசாய் அவனை தொட்டு மறுபடியும் எழுப்ப..அவளை கட்டிலில் அமரவைத்து வழக்கம்போல் மடியில் படுத்து கொண்டான்..

ப்ளீஸ் டீ பொண்டாட்டி கொஞ்ச நேரம் தூங்கிக்குறேன்..என்னனு தெரில ரொம்ப தூக்கம் வருது..

மகிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை..அவனை எழுப்பவும் முடியாமல் தான் நகரவும் முடியாமல் நெளிந்து கொண்டிருந்தாள்..என்ன தோன்றியதோ ராமே சட்டென எழுந்து விலகி அமர்ந்தான்..சாரிசாரி மகி..ஏதோ நியாபகத்துல..ஐ அம் சாரி..

பரவாயில்லங்க..நீங்க காபி சாப்டுங்க என நிற்காமல் வெளியே சென்றுவிட்டாள்..சமையலறைக்கு சென்றவளுக்கு ஏனோ அவன் படுத்திருந்த குறுகுறுப்பு இன்னும் இருப்பதாய் தோன்றியது..அவளையும் அறியாமல் முகத்தில் சிறு புன்னகை எட்டி பார்த்தது..குளித்து ரெடி ஆகி வந்தவன்,டயர்ட்ல தூங்கிட்டேன்டா..நீயே காபி போட்டியா..தள்ளு நா ப்ரேக்பாஸ்ட் எதாவது பண்றேன்..நீ ரெஸ்ட் எடு..

இல்லங்க..நா நல்லாதான் இருக்கேன்,ரெஸ்ட் எடுத்து எனக்கு போர் அடிக்குது தேவையானத எடுத்து குடுங்கநானே பண்றேன் ப்ளீஸ்

அரைகுறையாய் சம்மதித்து வேண்டியவற்றை எடுத்து கொடுத்து அடுப்பு மேடையின் எதிர்புற மேடையில் அமர்ந்தான்..மகி நிதானமாய் வேலை செய்ய தொடங்கினாள்..அவள் அமைதியாய் வேலையை கவனிக்க ராம் சிறிது நேரம் தன்னவளையே கவனித்து கொண்டிருந்தான்..மற்ற நாளாய் இருந்திருந்தால் வீடு இவ்வளவு அமைதியாகவா இருந்திருக்கும்..ராமே அமைதியாய் இருந்தாலும் மகி எதாவது பேச்சு கொடுத்து கொண்டேயிருப்பாள்..ராமே போதும் எனுமளவிற்கு பேசுவாள்..

ஏன்டீ கொஞ்ச நேரம் அமைதியாதான் வேலை பாரேன்..எனர்ஜிய வேஸ்ட் பண்ணாத..எப்படிதான் பேசிட்டே வேலை செய்ய முடியுதோ உன்னால..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.