(Reading time: 18 - 36 minutes)

ண்ணீர் மட்டுமே பதில் அவளிடம்..முகத்தை கைகளுக்குள் புதைத்து அழுதாள்..ராமிற்கோ என்ன செய்வதென்று புரியவில்லை நெருங்கி பழகவும் பயமாயிருந்தது..அதன் விளைவு எப்படி இருக்குமோ தெரியாது..இப்படியே விடவும் முடியாது..அவளின் அழுகையை தாங்கமாட்டாமல் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் அவள் கைகளை வேகமாய் இழுத்தவனின் கோப வார்த்தைகள் மகியின் கண்ணீரை தானாக நிறுத்தியது

இப்போ எதுக்கு இப்படி அழுத்துட்டு இருக்க மகி..கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி காய்ச்சல்ல எப்படி கிடந்தநு தெரியுமா..மதியம் முழுக்க இப்படி அழுதுதான் காய்ச்சல வர வச்சுருக்க..மறுபடியும் அதையே பண்ணிணா என்ன அர்த்தம்…உன் மேல உயிரையே வச்சுருக்கேன்டீ..ஏன் புரிஞ்சுக்க மாட்ற..உன் பிரச்சனை என்னனு சொன்னாதான எனக்கு தெரியும்..நிஜமா உன்ன எப்படி ஹண்டில் பண்ணணு தெரியாம தவிச்சுட்டு இருக்கேன் இதுல நீ இப்படியிருந்தா நா என்ன பண்ணட்டும்??என சுவற்றில் கையை குத்தியவாறு திரும்பி நின்றான்..

அதனால தான் அழறேன் ராம்..என்ன சுத்தி நடக்குற ஒவ்வொரு விஷயமும் நீங்க என் மேல வச்சுருக்குற அன்ப எனக்கு காட்டிட்டேதான் இருக்கு ஆனா அதுக்கும் மேல ஏதோ ஒரு தயக்கம் என்ன நார்மலா இருக்க விடாம தடுக்குது..அதையும் தாண்டி இன்னைக்கு நம்ம கல்யாண வீடியோ பார்த்த அப்பறம் அட்லீஸ்ட் கொஞ்சமாவது நார்மலா பழகனும் உங்ககிட்டநு நெனைச்சேன்..பட் அந்த வீடியோவ பாத்துட்டு நீங்க ரொம்ப எமோஷ்னல் ஆய்ட்டு அத வெளிப்படுத்தவும் முடியாம கன்ட்ரோல் பண்ணவும் முடியாம தவிச்ச தவிப்பு என்ன கொன்னுடுச்சு..என்னமாறி எல்லா மறந்து போய்டுச்சுனா பிரச்சனையேயில்ல ஆனா எனக்காக நீங்க உண்மையாகவும் இருக்க முடியாம நினைக்குறத கூட வெளிகாட்டமுடியாம இருக்கிறது ரொம்ப கொடுமை…நீங்க என்ன லவ் பண்ணத தவர எந்த தப்பும் பண்ணல..ஆனா அதுக்காக உங்களுக்கு இந்த தண்டனைலா வேண்டாம்..ஒரு வேளை எனக்கு பழைய நியாபகங்கள் வராமயே போயிடுச்சுனா…வேண்டாம் நெனைக்கவே பயமாயிருக்கு..விடுருங்க ராம் மகினு ஒருத்தி உங்க லைவ்ல இல்லனு நினைச்சுகோங்க..நா எங்கேயாவது போய்ட்றேன்,நீங்க உங்களுக்குநு ஒரு வாழ்க்கைய அமைச்சு சந்தோஷமா…

கூறி முடிப்பதற்குள் ராமின் கரம் அவள் கன்னத்தை பதம் பார்த்திருந்தது..அடி வாங்கிய வேகத்தில் கண்கள் தானாக சிவந்தது மகிக்கு..

என்னடீ பேசுற..என்ன நினைச்சுட்ட என்னபத்தி??எனக்கு வருத்தம் இருக்குதான் என் மகிக்கு இப்படி ஆய்டுச்சேநு அதுக்காக..வேற வாழ்க்கை அமைச்சுக்கனுமா என் வாழ்க்கையே நீ தான்டீ..நீ இல்லாத நா உயிரில்லாத உடம்புக்கு சமம் அப்படிபட்ட வெறும் உடம்புக்கு என்ன வாழ்க்கையிருக்கும்..இதோ பாரு இதுக்கு மேல இப்படி எதாவது பேசுன என்ன உயிரோட பாக்க முடியாது சொல்லிட்டேன்..ஒரு வேளை எனக்கு இப்படி ஆயிருந்தா நீ என்னவிட்டுட்டு போய்ருப்பியா..பேச வந்துட்டா..பொம்பளைங்கள அடிக்குறவன் ஆம்பளையே இல்லநு நெனைக்குறவன்டீ நா என்னையே கை ஓங்க வச்சுட்டியே…ச்சச்ச.. ஒழுங்கா சாப்ட்டு போய் படு..என்றவாறு வெளியே சென்றுவிட்டான்..

மகிக்கு கன்னத்தில் எரிச்சல் இன்னும் இருந்தது..அப்படியே அமர்ந்திருந்தாள்..என்ன நடக்கிறது என்று அறியும் முன் ஏதேதோ நடந்து முடிந்துவிட்டது…ஓரளவு தன்னை நிதான படுத்திக்கொண்டவள் ராமிற்காக அவன் கொண்டுவந்த பாலை குடித்துவிட்டு மாத்திரைகளை உண்டுவிட்டு படுத்தாள்..வெளியே வந்தவனுக்கோ கொதிப்பு இன்னும் அடங்கவில்லை என்ன காரியம் செய்துட்டேன்..என் குட்டிமா மேல கை ஓங்கிட்டனே..அப்படி என்னடா உனக்கு கோபம் அவ தான் உடம்பு முடியாம ஏதோ பேசுறானா நீ என்ன பண்ணி வச்சுருக்க..கடவுளே கூடிய சீக்கிரம் எல்லாம் ஒரு முடிவுக்கு வரனும் என்று எண்ணியபடி உறங்கியும் போனான்..

காலை பொழுது உற்சாகமாய் ஆரம்பிக்க காபி கோப்பையோடு பக்கத்து அறைக்கு சென்றவள் தரையில் குழந்தையாய் உறங்கி கொண்டிருந்தவனின் அருகில் சென்று அமர்ந்தாள்..அவனை மெதுவாக அசைத்து எழுப்பினாள்..லேசாக கண்திறந்தவன் தன் முன்னிருந்தவளை பார்த்தவுடன் வேகமாய் எழுந்து அமர்ந்தான்..அடர்நீல நிற புடவையில் தளர பின்னிய முடியோடு பூஜை முடித்ததற்கான அடையாளமாய் நெற்றியில் விபூதியும் நெற்றி வகிடில் குங்குமத்துடன் அழகாய் சிரித்தவளை பார்க்க பழைய மகியே அவன் முன் இருப்பதாய் தோன்றியது..குட் மார்னிங் ராம்…

அவள் குரலில் சிந்தனை கலைந்தவன் குட்மார்னிங் மகி என்றவாறு அவள் நீட்டிய காபியை வாங்கிக் கொண்டான்..அவள் கன்னத்தை கவனித்தவனுக்கு விரல்களின் அச்சு தெரிய மென்மையாய் வருடினான் சாரிடா..

பரவால்லை ராம் தப்பு என் மேலதான்..ஏதேதோ பேசி உங்கள கோப படுத்திட்டேன்..இனி நா அப்படி எதுவும் பேச மாட்டேன்..எனக்கு பழைய நினைவு வருதோ வரலையோ இன்னைலயிருந்து ஒரு புது லைவ்வ ஸஸ்டார்ட் பண்ணுவோம்..ப்ரெண்ட்ஸ்…என குழந்தையாய் அவள் கைநீட்ட..அதை ரசித்தவனின் மனதில் நிம்மதி நிறைய அதே புன்னகையோடு கை குலுக்கினான்..

ஹாய் ப்ரெண்ட்ஸ்..மகியோட நிலைமை புரியும்நு நம்புறேன்..என்னதான் மகி பழசை மறந்திருந்தாலும் கணவன் மனைவி உறவை ஓரளவு எதார்த்தமா எடுத்துட்டு போலாம்நு நினைச்சுதான் எழுதிருக்கேன்..முரண்பாடுகள் இருந்தால் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க;)…படிச்சுட்டு கருத்துக்களை கண்டிப்பா பதிவு பண்ணுங்க..

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:952}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.