(Reading time: 21 - 42 minutes)

"ன்ன கொரங்கு " -மது

"ஹய்ய யாரைடி கொரங்குனு சொன்ன ... நீதாண்டி வளர்ந்த கொரங்கு ஏதோ கொஞ்ச நாள் வலை சுருட்டி வெச்சுருந்த இனி திரும்பவும் வாலு வெளிய வந்துரும். என்ன மதி தான் பாவம் " -என்று ரகு சொல்ல மதியின் முகம் பூவை மலர்ந்தது. எல்லோரும் இப்படி சிறிது நேரம் அரட்டை அடிக்க நேரம் பதினொன்றை கடந்து விட்டிருந்தது.

"சரி மது தூங்கு. ஹாஸ்ப்பிட்டல் இருந்து தூங்கியிருக்க மாட்ட. நாளைக்கு பேசுவோம் குட் நைட் " என்று சொல்லி சரணும் ரகுவும் கிளம்ப திவ்யா ஒரு பத்து நிமிடத்தில் வந்து விடுவதாக கூறி மீண்டும் மதுவின் அறைக்கு வந்தாள்.

"என்ன திவி " -என்றவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்தாள் திவ்யா.

"என்னடி " -மது

"அவங்க ஆம்பளைங்க அவங்களுக்கு கண்டுபிடிக்க முடியாம இருக்கலாம். ஆனா எனக்கும் தெரியாம போகாது. மனசுக்கு பிடிச்சவரோட அதுவும் பல போராட்டத்துக்கு அப்பறம் கல்யாணம்நடக்க போகுதுன்னா ஒரு பெண்ணோட மனசு எந்த அளவுக்கு சந்தோசப்படும்னு எனக்கு தெரியும். ஆனா உன் முகத்துல அந்த சந்தோஷம் இல்லையே. என்னாச்சு மது" -திவ்யா

"திவ்யா இந்த நாலு நாளா ஹாஸ்ப்பிட்டலில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எனக்குன்னு எல்லோருக்கும் பார்த்து பார்த்து செஞ்சாருடி. ஆனா என்கிட்டே ஒரு வார்த்தை கூட பேசலை. " என்று அழுதவளை பார்த்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"என்னடி சொல்ற பேசலையா " -திவ்யா

ஆமாம் என்று தலையை அசைத்தவள் "நானே பேசுனேன் திவி , ஆனா அவரு பேசமாட்டேன்னுட்டாரு " என்றாள்.

"என்னடி சொல்ற நீயே பேசினாயா .. அப்படியும் அவர் பேசலையா ? " -திவ்யா

"ஆமாம் " என்றவள் அன்று ஹாஸ்ப்பிட்டலில் நடந்ததை சொன்னாள்.

"ஒரு வேளை என்னை வேண்டாம்னு விலகி போறாரோ " என்று கேட்ட மதுவின் முகத்திலப்படி எல்லாம் இருக்காது என்று சொல் என்பதை போல ஏக்கம் நிறைந்திருந்தது. திவ்யாவிற்கு எதுவோ புரிந்ததை போல இருந்தது.

"மது அவங்க வீட்டுல இருந்து வந்து பேசிட்டு போயி கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆச்சு. ஆனா நீ இதுவரைக்கும் மதிக்கு பேசுனாயா? இல்லை அவரு பேசணும்னு எதிர்பார்க்கிறயா? " திவ்யா

"இல்லை திவி எனக்கு எப்படி பேசறதுனு தயக்கமா இருந்துச்சு." மது

"முட்டாள் மாதிரி பேசாதே. முதல்ல அவருகிட்ட பேசு. முடிஞ்சா அவரு சட்டையை பிடிச்சு ஏன் என்கிட்டே பேசலைன்னு கேளு அதா விட்டுட்டு இன்கனின்னு கூகூனு அழுதுட்டு இருக்க. போ போயி பேசு " என்று கூறியவள் அவளின் பதிலுக்கு நிற்காமல் கதவை சாத்திவிட்டு வெளியே சென்றாள்.

தன் போனை எடுத்து மதியின் என்னை டயல் செய்து மதி அழைப்பை ஏற்பதற்க்காக காத்திருந்தாள் மது.

பிரெண்ட்ஸ் அடுத்த எப்பி கல்யாணம் பிளஸ் சில கலாட்டாக்களோடு நிறைவடையும்.

தொடரும்

Episode 14

Episode 16

{kunena_discuss:945}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.