(Reading time: 11 - 21 minutes)

ன்ன என்ன செய்ய வேண்டும், எப்படி எப்படி செய்ய வேண்டும் என எல்லா திட்டமிடலும் ஒரு முடிவுக்கு வந்த போது,

“ஷப்பாடா…………….” என ஓய்ந்து போனாள் சதி…

“என்னம்மா?... அசதியா இருக்கா?...”

மகளிடம் பரிவாக வினவினார் தட்சேஷ்வர்…

“ஆமாப்பா… இந்த அசதியைப் போக்குறதுக்கு எதாவது செய்யலாமாப்பா?...”

“என்னம்மா என்ன செய்யணும்??.. சொல்லு அப்பா செய்யுறேன்…”

“இஷான் கல்யாண ப்ளான் எல்லாம் போட்டாச்சு… சோ இந்த சந்தோஷத்தை கொண்டாடுறதுக்கு நாம எங்கயாவது போகலமாப்பா?...”

“எங்கடா போகணும்?... நீ எங்க போகணும்னு ஆசைப்படுற?... சொல்லு அப்பா கூட்டிட்டு போறேன்…”

“ம்ம்… அது தெரியலைப்பா… பட் எங்கயாவது ஃபேமிலி டூர் மாதிரி… நீங்க, நான், அம்மா, இஷான், தாத்தா, தைஜூ, காதம்பரி ஆன்ட்டி, சிதம்பரம் அங்கிள், சோமநாதன் மாமா… எல்லாரும் போகலாமாப்பா? உங்க எல்லாருக்கும் சம்மதம்னா…”

அவள் சொன்னதும், எல்லாருமேவா என அனைவருக்குமே தோன்றினாலும், இஷானையும் தைஜூவும் எண்ணி தயங்கினர்…

“அப்பா…… தைஜூ இப்போ எனக்கு ஃப்ரெண்ட்… பட் இன்னும் கொஞ்ச நாள்ல அவ எனக்கு அண்ணி ஆகிடுவாப்பா… அதனால போறதா இருந்தா ப்ளீஸ் இப்பவே போகலாம்ப்பா… இல்ல வேண்டாம்னாலும் எனக்கு சம்மதம் தான்ப்பா… உங்க விருப்பம் தான் என் விருப்பமும்…”

மகள் கேட்டு அவள் மறுத்தது தான் ஏது?.. மறுத்தது என்று சொல்வதை விட, அவள் கேட்கும் முன்பே அவளிடம் கொடுத்திடுவார் அவர்… பிறகு எங்கே அங்கே மறுப்பிற்கு இடமிருக்கும்?...

இன்னது வேண்டும் என்று அவள் தலையசைத்தாலே அதை நிறைவேத்தி வைக்க வேண்டும் என நினைப்பவர், ப்ளீஸ் என்று கெஞ்சும்போது சும்மாவா இருப்பார்?...

“எப்போ போகணும்னு சொல்லும்மா போகலாம்….”

அவ்வளவுதான்… இது தான் தட்சேஷ்வர்… மகளின் விருப்பம் ஒன்றே அவரின் குறிக்கோள்… ஆனால் இது ஏன் ஜெய்யின் விஷயத்தில் இல்லை என்று அவரிடம் கேட்டால் அவர் அதற்கான பதிலை கூறுவாரா என தெரியவில்லை…

அதைவிட மகளின் விருப்பம் ஜெய்தான் என மகள் இன்னமும் சொல்லிடாததும் அவருக்கு வசதியாய் போனது…

“அவ தான் சொல்லுறான்னா நீங்களும் அதுக்கு பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டுறீங்க?...”

பிரசுதி கணவரிடம் கோபமாக கேட்க,

“என்ன வேணா சொல்லிக்கோ… அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை… என் பொண்ணு சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்…. அவ என்ன போயே ஆகணும்னு அடமா பிடிச்சா… இல்லையே… நமக்கு சம்மதம்னா போகலாம்னு தான சொல்லுறா…”

“அவ ஆயிரம் சொல்லுவா… அதுக்காக எல்லாம் கிளம்பி போக முடியுமா?...”

“என் அப்பா… உன் மாமா சரின்னு சொன்னா கிளம்பிடுவதான மறுபேச்சு பேசாம?...”

தட்சேஷ்வரின் கேள்வியில் எதுவும் பேசாமல் அப்படியே நின்றார் பிரசுதி…

கணவர் சொல்வதும் உண்மைதானே… பிரம்மரிஷி சரி என்றால் உடனே அதை ஒப்புக்கொள்வார் பிரசுதி… அதை அறிந்து தான் அப்படி ஒரு கேள்வியை கேட்டார் தட்சேஷ்வரும்…

“அப்பா…. நீங்க என்ன சொல்லுறீங்கப்பா?... உங்களுக்கு சரின்னு பட்டா போயிட்டு வரலாம்ப்பா எல்லாரும்… இல்லன்னா வேண்டாம்ப்பா….”

“நான் ஏன் வேண்டாம்னு சொல்லப்போறேன் தட்சா… நானே உங்கிட்ட எங்கேயாவது போகலாம்னு சொல்லலாம்னு இருந்தேன்… அதை நம்ம சதியே சொல்லிட்டா… அவ்வளவுதான் வித்தியாசம்…”

தகப்பனின் பதிலில் நிறைந்து போனவராய் மனைவியைப் பார்க்க, அவரின் முகத்திலும் சம்மதத்திற்கான அறிகுறி புன்னகை வடிவில்..

“காதம்பரி… உனக்கு இதுல சம்மதம் தான?.. ஒன்னும் பிரச்சினை இல்லையே… எனக்கும் தைஜூவையும், இஷானையும் நினைச்சு தயக்கமாதான் இருந்துச்சு… மாமா சரின்னு சொன்னபிறகு எனக்கும் போயிட்டு வரலாம்னு தான் தோணுது… நீ என்ன சொல்லுறடி?...”

தோழி கேட்டதும், காதம்பரி தன் கணவரைப் பார்க்க, சிதம்பரமோ சரி என தலை அசைத்தார்…

அதன் பின் சந்தோஷ சாரல்கள் அனைவரின் முகத்திலும் படர்ந்திருக்க, சோமநாதன் மட்டும் யோசனையில் ஆழ்ந்தார்…

“என்னடா சோமு… என்ன யோசனை?... லீவை போட்டுட்டு வரப்பாரு… புரியுதா?...”

“இல்லடா ஈஸ்வர்… ஜெய்யை விட்டுட்டு நான் மட்டும் எப்படி வரமுடியும்?...”

“என்ன அண்ணா இப்படி சொல்லுறீங்க?... ஜெய்யை எதுக்கு விட்டுட்டு வரணும்?... அவனும் நம்மகூட வரத்தான் போறான்…”

தங்கையின் அழுத்தமான பதிலில் நிமிர்ந்தவர்,

“இல்லம்மா அவன் வரமாட்டான்… அவனைப் பத்தி எனக்கு தெரியாதா என்ன?...”

சற்றே விரக்தியுடன் அவர் சொல்ல, இஷான் அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டான்…

“நான் பேசுறேன் அங்கிள் அவங்கிட்ட….”

இஷான் பேசிக்கொண்டிருக்கும்போதே, சோமநாதனின் அருகே வந்த தைஜூ,

“அண்ணா வருவார் அங்கிள்… நானும் பேசுறேன்… அண்ணாவ வர வைக்குறது எங்க ரெண்டு பேர் பொறுப்பு…” என சொல்ல, சோமநாதன் லேசாக புன்னகைத்தார்…

ஜெய்யின் பெயர் எடுத்ததும், முகத்தை தூக்கி வைத்துக்கொண்ட தட்சேஷ்வர், தன் நண்பனின் கவலை கண்டு வருத்தமும் பட்டவர், அவரின் புன்னகை கண்டு சந்தோஷம் கொண்டார்…

ஜெய் தான் அவருக்கு பிடிக்காதே தவிர, தன் நண்பன் என்றால் அவருக்கு உயிர்…

“சரி பெரிய பொறுப்பை பொண்ணும் மாப்பிள்ளையும் எடுத்துக்கிட்டாங்க… ஆனா எந்த ஊருன்னு யாரும் சொல்லலையே… அத தான முதல்ல இப்போ நாம முடிவு பண்ணனும்?...”

காதம்பரி கேட்பது சரி என்பது போல் அனைவரும் ஒருவரின் ஒருவர் முகம் பார்க்க,

“ஊட்டி…” என்றனர் சதியும் இஷானும் ஓரே நேரத்தில்…

பின் அனைவரும் அங்கேயே போக சம்மதம் சொல்ல,

“சிவா கண்டிப்பா வருவான் சோமு… நீ கவலைப்படாத…” என்றார் பிரம்மரிஷியும் நடக்கப்போகும் நிகழ்வினை அறிந்தவராய்….

Episode 19

Episode 21

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.