(Reading time: 10 - 20 minutes)

ன்னம்மா, கோபத்தோடு பேசுகிறாய், இந்தக் கோபத்தோடு நீ போகபோறாயா? என் மேல் அவ்வளவுதான் பாசமா உனக்கு?’ என்று கேட்டாள்

‘பின் என்ன, நீ தான் சொன்ன, ரம்யாவுக்கு ஆனந்தன் மேல் காதல் என்று, எப்படிம்மா அத ஒத்துக் கொள்ள முடியும்?’ என்றாள் அம்மா

ஏன்மா? அவனுக்கு என்ன குறைவு? அழகா, படிப்பா, இல்லை பணமா, அந்தஸ்தா, இல்லை குணமா? எல்லாத்திலையும் அவன் தங்கம்மா,’ என்றாள் ராதா உணர்ச்சியின் வேகத்தில்

‘எல்லாவற்றிட்கும் மேல் அவன் உன் மகன் ராதா' என்றாள் அம்மா

அம்மா....? என்றாள் ராதா

‘பின்ன என்ன, உறவு புரியலயா உனக்கு?’ என்று கேட்டாள் அம்மா

அம்மா, யாருக்கும் தெரியாவிட்டாலும், உனக்கு, அப்பாக்கு, எனக்கு தெரியும், நான் உங்க வயித்துல பொறக்கலன்னு,நான் இன்னும் இவர் கிட்ட கூட இந்த விஷயத்த சொல்லல '

‘அதுவுமில்லாம , அவன் என் புஷனோட முதல் மனைவியின் பையன் என்று நினைத்துக் கொள்,’ என்றாள் ராதா, அசிங்கமடி, இதப் பத்தி இனிமே பேசாதே, ‘என்று கூறி நாங்க கிளம்பறோம் , என்றாள் அம்மா

கண்ணில் கண்ணீருடன், ‘அம்மா ஒரு புறம் என் தங்கை, மறு புறம் என் மகன் ரெண்டு பேரோட வேதனையும் என்னால் பார்க்க முடியலைம்மா,’

‘நீ ஒன்னு செய் வேறு பெண்ணைப் பார்த்து ஆனந்துக்கு கல்யாணம் பண்ணிடு எல்லாம் சரியாகிவிடும்,’ என்றாள் அம்மா

‘அம்மா எனக்கு காதல்ன்னா என்னன்னு தெரியும், என் புருஷன் என்னை எப்படி காதலித்தார் என்று நல்லா தெரியும் அந்த காரணத்துனால நான் இன்னொரு ஜென்மம் எடுத்து வந்திருக்கேன், இந்த பசங்களுக்கும் அப்படி நடக்கணும்னு நினைகிறாயாம்மா?’ என்று கேட்டாள் ராதா

‘உன் விஷயத்தில அப்படி நடந்தால் எல்லார் விஷயத்திலும் அப்படி நடக்குமா என்ன?’ என்றாள் அம்மா

‘ஏன்மா? காதல் என்ன, எனக்கும் என் புருஷனுக்கு மட்டும்தான் சொந்தமா? அது எல்லோர்க்கும் பொது, அது எந்த அளவுக்கு அவர்கள் காதல் உண்மையும், நம்பிக்கயுமாய் இருக்கு என்பதை பொறுத்தது’

‘அதனால் நான் சொல்வதைக் கேளு, இந்த உறவு நமக்குத்தான் தெரியும் ரம்யாவுக்கும் , ரஞ்சனாவுக்கும் என் கழுத்தில் மாலை விழும்வரையில் தெரியாது,’ என்றாள் ராதா

‘அதுவுமில்லாமல் காதல் என்பது ஒரு உணர்வு, அதனால் இந்த உறவு முறை சொல்லி அவர்களை பிரிக்க வேண்டாம்மா , சின்ன வசிலேர்ந்தே இந்த உறவு முறை தெரிந்தால் கண்டிப்பாக காதல் என்ற உணர்வு வராது,அது மட்டுமில்லை அவர்கள் என் ரத்த உறவு இல்லை அதை நினைச்சு சந்தோஷப் படு, அவர்களை பிரிக்காத, பாவம்மா ரம்யா, அவள் ஒரு வாயிலில்லா பூச்சி , அவள் நாம யாரையும் கேக்கவே மாட்டா பாவம்மா அவ,’

முதல்ல உன் உறவையே அவர் சொன்னபோது எனக்கு என்னவோ போல் இருந்தது பிறகு நீ உன்னைப் பற்றி சொன்னவுடன் நீ எவ்வளவு வேதனைப் படுகிறாய், என்று அப்பாவிடம் சொல்லி ஒத்துக் கொள்ளச்சொன்னேன்,

இப்போது இந்த உறவு வெளியில் தெரிந்தால் என்னை என்ன சொல்லுவார்கள் தெரியுமா பணக்கார இடமென்று, உறவு முறை எல்லாம் மறந்து கல்யாணம் செய்துவிட்டேன் என்பார்கள்,

சரிம்மா, ஆனால் யார் என்னவேன்னாலும், சொல்லட்டும் ஆனால் உன் பெண்ணின் மனது உனக்கு முக்கியமில்லையா? அவள் பயிதிமாக திரிந்தால் பரவாயில்லையா, அவர்கள் மனதை கொன்னுட்டு அப்படி ஊர் உலகத்துக்காக ஏன் பார்க்க வேண்டும், இத்தனை நாளாக நாம் கஷ்டப்பட்டோம் அப்பாவின் கூட பிறந்தவர்களோ உன் கூடப் பிறந்தவரோ வரவில்லை, அப்படியிருக்க இந்த மாதிரி மனிதர்களுக்காக நம் குழந்தைகளின் மனத்தைக் கொல்லப் போகிறீர்களா? நல்லாயில்லை அம்மா, நம் குழந்தைகளை பாரும்மா, என்னால் தாங்கமுடியலைம்மா , என் தங்கை ஒரு புறம், என் மகன் ஒரு புறம் கஷ்டப் படுகிறார்கள் என் ஆனந்தின் முகத்தைப் பாரும்மா தொங்கி இருக்கிறது ப்ளீஸ் மா,

அம்மா நீ அப்பாவிடம் பேசும்மா, நான் ரம்யாவை நாம வந்ததுக்கு அப்புறம் பார்க்கவில்லை, நான் உன்னிடம் பேசிவிட்டு அவளைப் போய் பார்க்கப் போகிறேன். அவள் உன் பெண்ணம்மா அது ஞாபகத்தில் இருக்கட்டும்’

‘என்னோட முன் ஜென்மம் எனக்கு ஞாபகம் இருந்தது அதனால் எனக்கு என் புருஷனையும், பிள்ளையும் அடையாளம் காண முடிந்தது, அது நாங்கள் மூன்று பேரும் வாங்கி வந்த வரம். அது வேறு, இல்லைன்னா இவர்கள் யாரும் நமக்குத் தெரிந்திருக்காது, இப்போ என் ரத்தம் கூட வேற க்ரூப் தான்.’

‘என் பிள்ளையை, என் பிள்ளை என்று தெரியாமலே நம்ம ரம்யா ஆசை பட்டுவிட்டாள், அவனும் அதே மாதிரி தன் அம்மாவின் தங்கை என்று தெரியாமல் ஆசை பட்டு விட்டான் அதனால் இப்போது அவர்கள் மனதை மாற்றிக் கொள்ள முடியாதும்மா.அதனால் நீ உன் மனதை மாத்திக்கோ, அதான் நம் குழந்தைகளுக்கு நல்லது. நான் போய் ரம்யாவைப் பார்கிறேன்.

என்று கூறி அம்மாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து எழுந்து வெளியே போனாள்.’ அங்கே ஹாலில், சுந்தரம் இறுகிய முகத்தோடு உட்காந்திருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.