(Reading time: 6 - 12 minutes)

"ம்மா"

"ம்ம்"

"சென்னைக்கு கிளம்பறேன்"

"எதுக்கு?"

"பிசினஸ்..."

"நீ பண்ணி கிழிச்ச வரைக்கும் போதும்.. இதுக்கு மேல ஏதாவது செஞ்சு என் உயிரை மொத்தமா வாங்க பிளான் இருந்த போ"

"அம்மா ப்ளீஸ்"

"நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்"

இவர்களுக்குள் நடக்கும் இந்தஉரையாடலை வேடிக்கை பார்க்க என்னவோ போல இருந்தது அபிக்கு. நித்திலா சாரதாவின் அறைக்குள் நுழைவதை பார்த்து விட்டு சிவநேசன் அங்கு வந்தார்.

"அம்மா"

"சாரதாம்மா" , சிவநேசன்.

"அப்பா",சாரதா.

"என்னம்மா என்ன பிரச்சனை?"

"தாத்தா நான்.. சென்னைக்கு"

"அவளை போக வேண்டாம்னு சொல்லுங்க..போன நேத்ர மட்டும் தான் இனி எனக்கு மக"

"என்னம்மா இதெல்லாம்.. நீயா இப்படி எல்லாம் பேசற.. ஏதோ சின்ன புல்லை தப்பு பண்ணிட்ட அதும் தெரிஞ்ச பண்ணா அதான் இனி பண்ணா மாட்டேன்னு சொல்லிட்டாளேமா"

"இருந்தாலும் அவ பண்ணின விஷயம்??"

"அது தான் அந்த வைஷ்ணவ் தம்பியும் சரி பண்ணிடுச்சே மா, இனி என்ன?"

"அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க அப்பா"

"விடும்மா.. நம்ம வீட்டு பொண்ணை நாமளே புரிஞ்சுக்கலைன்னா எப்புடி?"

"ஆனால் அப்பா"

"விடு ராஜாத்தி அப்பா சொல்றேன்ல அவளுக்கு நான் பொறுப்பு"

"என்னமோ பண்ணுங்க"

இவ்வளவு நேரம் தாத்தாவும் அம்மாவும் உரையாடுவதை கேட்டுக் கொண்டிருந்தவள் கண்கள் கலங்க பிடிவாதமாய் உள்ளிழுத்து கொண்டாள்.

"போய் கிளம்பு நித்தி"

"ம்ம்ம் சரி தாத்தா"

"நானே கொண்டு போய் ட்ரெயின் ஏத்தி விடறேன்"

"ம்ம்ம்ம்ம்"

நடந்ததை பார்த்த அபி வைஷ்ணவிடம் கூற வேண்டியவற்றை மனதுக்குள் குறித்து கொண்டாள்!!

எதுவும் பேசாமல் அறைக்கு வந்தவள் தான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த பேக்கை மீண்டும் ஒரு முறை சரி பார்த்து விட்டு உடை மாற்றி வந்தாள். மெத்தையின் மேல் அமர்ந்தவள் அதற்கு அடியில் இருந்த அந்த துப்பட்டாவை எடுத்தாள்.

நினைவுகள் பின்னோக்கி சுழல, அந்த வார்த்தைகள் தெளிவாய் காதில் விழுந்தன. அன்று நிகழ்ந்தவை கண்முன் வந்தது.

"இவளை மாதிரி பொம்பள பிள்ளைங்க எல்லாம் பணம் பதவி புகழுக்காக நல்ல வாழ்க்கைக்காக படுக்கைக்கு போக கூட தயங்க மாட்டாளுக வெளில தான் உத்தமி வேஷம் எல்லாம்"

திடுக்கிட்டு நிகழ்வுக்கு வந்தவள் கையிலிருந்த அந்த துப்படாவில் இருந்து மெல்லிய 'லேவண்டர்' மனம் வந்து கொண்டிருந்தது. வழக்கம் போல நவிரனின் நினைவில் அதை நுகர போனவள் ஆத்திரத்துடன் அதை எடுத்துக் கொண்டு கொல்லைப்புறத்திற்கு ஓடி அங்கே தண்ணீர் காயவைப்பத்திற்காக வைத்திருந்த அடுப்பில் போட்டு அருகில் இருந்த தீப்பெட்டியால் அதை பற்ற வைத்தாள்.

எறிந்த அக்னியின் ஒளி கண்களிலும் கோபத்தின் வலி நெஞ்சிலும் கனன்று கொண்டிருக்க, மனதுக்குள் இன்னம் ஒரு முறை சூளுரைத்து கொண்டாள்.

'உன்னையும் இதே மாதிரி அலையை விட்டு அழவைப்பேன் வைஷ்ணவ்'!!!!!!

அங்கே தன் காரை சென்னைக்கு செலுத்தி கொண்டிருந்தவன் காரில் தான் வைத்திருக்கும் லேவண்டர் நறுமணம் கொண்ட செண்ட் பாட்டிலில் இருந்து வந்த மனதில் நித்திலாவின் நினைவை கொண்டான்.

அவள் வரிகளில் அந்த படங்களில் அந்த பெயரில் அவள் அவனிடம் வந்து பேசிய அந்த நாளில் அவள் இவன் மீது கொண்ட காதல் தெளிவாக தெரிந்தது. மீண்டும் ஒரு முறை இந்த டைரி  அவன் கைக்கு அந்த நாள் நினைவு வந்தது தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும்.

மெல்ல அவன் மனம் அறியாமல் நித்திலாவை நினைக்க தொடங்கியது. அந்த மாலை பொழுதும் அவனுக்கு பிடித்த நீண்ட தூர பயணமும் கூடவே வரும் நிலவும் அந்த லேவண்டர் மனமும் அவனை மயக்க, அவனை அறியாமலே வாய் விட்டு சொல்லி கொண்டான்.

"உன்னை ரொம்ப பிடிச்சுருக்கு நித்திலா"

உயிர் தேடல் தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1037}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.