(Reading time: 29 - 58 minutes)

ற்றவர்களும் பயந்து அவனைத் தாக்க வராமல் பின்னால் ஒதுங்க...

இப்பொழுது தான் அந்த பப் மேனேஜர் வேக வேகமாக காட்சிக்கு வந்தான்...

“என்ன ரவுடித்தனம் பண்றீங்களா? அவரை விட்டுட்டு வெளியே போங்க! அனாவசியமா போலீஸ்சை கூப்பிட வைச்சிடாதீங்க!”, அவன் கையில் இருந்த ஆயுதத்தை கண்டு பவ்யமாக மரியாதையுடன் மிரட்ட...

அவனை ஏற இறங்க... அலட்சியமாக பார்த்த ஆர்யமன்..

“என்னது போலீஸ்சை கூப்பிடுவீங்களா!!!! எங்களை பார்த்தா எப்படி தெரியுது???”, என்று குரலை உயர்த்தி கர்ஜிக்க....

அந்த சர்வாதிகாரத்தனத்தில் அவன் போலீஸ் என்று சர்வ நிச்சயமாக நம்பி விட  அந்த பப் மானேஜர்.....

“நீ போலீஸ்சா? பொறுக்கி மாதிரி பியர் பாட்டில் சுத்திகிட்டு இருக்கே?”, என்று நக்கல் ஒலிக்க கேட்ட படி நெருங்க முயன்றான்  அந்த சினிமா வாரிசு!! நன்றாக குடித்திருந்தான்...

அப்பொழுது சரியாக வாசு தன்னுடன் சில கான்ஸ்டபிள்களை அழைத்து வருவதை கண்டு கொண்ட ஆர்யமன்..

“கொஞ்சம் திரும்பி பாரு! ”, என்று வாசுவின்  மாஸ் என்ட்ரியை கண்களால்  காட்ட...

அந்த கூட்டத்தை தள்ளிக் கொண்டு...  “நாங்க ரெய்டு செய்ய வந்திருக்கோம்”, என்று அதிரடியாக தன் ஐ. டி. கார்ட்டை லாங் ஷாட்டில் (பின்ன  கான்ஸ்டபிள்ன்னு தெரியக் கூடாதுல்ல ;) ) பொதுவாக காண்பித்த படி அங்கே  வர..

அனைவர் கவனமும் அவன் மீது செல்ல..

ஆர்யமன், “இது மட்டுமில்லை! இன்னும் வருவாங்க! எவனாவது போலீஸ்காரன் மேல கையை வைக்கணும் நினைச்சா உயிரோடே இருக்க மாட்டீங்க!”, என்று மொத்த கூட்டத்தையும் மிரள வைத்து தன் கைக்குள் பிணைக்  கைதியாகி இருந்தவனை ஒரு தள்ளு தள்ளி விடுவித்தவன்..

 வாசுவைப் பார்த்து..

“அத்தனை பேர் மேலேயும் கேஸ்  ஃபைல்  பண்ணி அரெஸ்ட் பண்ணுங்க! ஒருத்தன் செல்போன்  கூட மிஸ் ஆகக் கூடாது!!!! கமிஷினர் டைரக்டரா டீல் பண்ற விஷயம்!”, என்று வாசுவின் மேலதிகாரி போல கட்டளைகளை பிறப்பித்து விட்டு அஞ்சனாவை விறுவிறுவென்று  அழைத்துக் கொண்டு  வெளியேற....

அப்பொழுது அங்கு வந்து நின்றது  போலீஸ் ஜீப்! அதிலிருந்து இறங்கி அந்த பப்பிற்குள் வேக நடையிட்டு வந்த போலீஸ் அதிகாரி ஸ்ரீவாசன், ஆர்யமனுடன் அழுது கொண்டே வந்த அஞ்சனாவைப் பார்த்ததும் திகைத்து அப்படியே நின்று விட.. அவர் பார்வையைப் புரிந்தவனாய்.....

“அஞ்சனா விஷயமா கமிஷனர்க்கு ஃபோன் செய்தது நான் தான்! நான் வர்றதுக்குள்ளே பிரச்சனையாகிடுச்சு! இப்போதைக்கு என் ஃப்ரண்ட்  ஹெட் கான்ஸ்டபிள் வாசு சமாளிக்கிறான்! சீக்கிரமா போங்க!”, என்று அவசர கதியில் ஆர்யமன் சொல்லவும்...  அதை உணர்ந்தவராக..

“சரி! சரி! நான் பார்த்துக்கிறேன்! நீங்களும் ப்ரஸ் மீடியாக்கு நியூஸ் போறதுக்குள்ளே முதல்ல இங்கிருந்து கிளம்புங்க”, என்று  அவர்களை கிளம்ப சொல்லி விட்டு.. கன்னத்தில் கை வைத்த படி தாரை தாரையாக கண்ணீர் வடித்த படி நின்ற அஞ்சனாவைப் பார்த்து,

அவளை நோக்கி, “ஒன்னும் வருத்தப் படாதேம்மா! அவனுங்களை முட்டிக்கு முட்டி தட்டிடுறேன்!” என்று ஆறுதல் சொல்லி விட்டு விறு விறுவென உள்ளே நுழைந்தார்..

‘ஓகே  வாசு அவங்ககிட்ட பேசிக்குவான்’, என்று எண்ணிக் கொண்டே  அஞ்சனாவை அழைத்து கொண்டு  வெளியே வந்த ஆர்யமனுக்கு அவள் அழுவது தெரியாமல் இல்லை!

அந்த ஹரிபிரசாத்திற்கு  ஓடி உதவ முயன்ற காட்சி இன்னும் மனதிலே நிற்க அவள் மண்டை உடையும் வரை  கொட்டி தீர்க்க வேண்டும்  என்ற ஆத்திரம்  தான் மேலோங்கியது! அவளைப் பார்க்கக் கூட பிடிக்காமல்..

“அழாதே!”, என்று மட்டும் சலிப்புடன் அதட்டி விட்டு… ஆட்டோவில் கூட்டி கொண்டு  போய் விட்டு விடலாம் என்று அங்கிருந்த ஆட்டோவை அழைத்தவன்...

அஞ்சனாவிடம், “அழாம அட்ரஸ்சை மட்டும் அவர்கிட்ட சொல்லு..”, என்றதும்...

கோபத்தில் தன்னை தனியே ஆட்டோவில் அனுப்பி விடுகிறான் என்று நினைத்துக் கொண்டவளுக்கு  மேலும் அழுகை வந்தது!

இதைக் கண்ட ஆட்டோக்காரன்.. அவள் அழுவதையும்.. போர்வை போல எதையோ இழுத்து மூடியிருப்பதையும் பார்த்து ஏதேதோ கற்பனை செய்து...

“ஸார்! நீங்க  ஏதாவது  செய்து  அனுப்பி விட்டுடுவீங்க.. பின்னாலே போலீஸ் கேஸ்ன்னு எங்க தலையை உருட்டுவாங்க! தொழிலுக்கு புதுசு வம்புலே  மாட்டி விட்டுடாதீங்க”, என்று  ஆர்யமனை மேலே பேச விடாது ஆட்டோவை கிளப்பி போய் விட்டான்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.