(Reading time: 11 - 22 minutes)

சுந்தரம், ரஞ்சனாவை பார்த்து,’ நீ பாட் இன்ப்லுயன்ஸ்,’ என்றார்

அவள், ‘வாட்? மீ பாட் இன்ப்லுயன்ஸ்?’ என்றாள்

‘ஆமாம், ஆமாம் ‘என்றார் சுந்தரம்

‘இத பார் உன், புருஷனுக்கு வயசாறது பெருஸ் சொன்னா உனக்கு கோபம் வருது, சரி எதனாலே சொன்னீங்க அப்படி?’ என்று கேட்டாள்

‘பாரு உங்க அக்கா உன்னை மாதிரியே முறைச்சுகிட்டு வரா’

என்று சொல்லி பொண்டாட்டிய கட்டிக் கொண்டார்

‘இத பார்ரா , ஆனாலும் இந்த பெருசுக்கு ரொம்பத்தான் ஏத்தோம், அ ஆ …’

என்று அவள் சொல்லவும்,

ஆனந்தன் கேட்டான், ‘அம்மாகிட்ட கேக்கணும், ரஞ்சிய மட்டும், வேற இடத்துலேர்ந்து தூக்கி வந்தாங்களான்னு’ என்றான்

‘வந்துட்டாங்கப்பா, அப்பாவை போலவே பிள்ளை, ‘என்று அவள் முனு முனுத்தாள்,

இப்படியே நாட்கள் ஓடியது ,

ராஜெந்த்ரனை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தார்கள், அவருக்கு ஆபேரஷன் அன்றுதான். சுந்தரத்துக்கு முக்கியமான மீட்டிங், இருந்தது,

அதனால் ராதா, ஆனந்தன், ரம்யா, ரஞ்சனா இருந்தார்கள், அவர்கள் அம்மாவுடன், ‘சுந்தரம் அப்புறம் வரேன்’ என்றார்

சீனுவும் மீட்டிங்கில் இருக்கவேண்டியிருந்ததால் வரமுடிய வில்லை, சிவா சுந்தரம் போனை வைத்துக் கொண்டிருந்தான்,

சீனுவுக்கு மூன்று மாத ட்ரைனிங், ஒரு மாதம் பாக்டரியில், ஒரு மாதம் அட்மினிஸ்ட்ரேஷன், கடைசி ஒரு மாதம் டாப் லெவல் ட்ரைனிங் அதனால் ரொம்ப பிஸி, அவனால் வர முடியாது ஆனாலும் சுந்தரத்திற்கு தெரியும் அவனை ரஞ்சனா எதிர்பார்ப்பாள், மீட்டிங் முடிந்ததும்,’ சீனு, நீ வெயிட் பண்ணு’ என்றார் சுந்தரம்

எல்லோரும் போனவுடன், ‘வா, என்று சிவா நீ இருந்து இவர்களை அனுப்பிவிட்டு பார்த்துக் கொள்,’

‘கான்செல் ஆல் தி மீடிங்க்ஸ் பார் தி டே ‘, என்று சொல்லிக் கொண்டே சீனுவுடன் வெளியே வந்தார்.

எலிவடரில் இறங்கினார்கள், அவர் நடக்கும் அழகையே பார்த்து ரசித்தான் சீனு , அவர் ஆபிசில் இருக்கும்போது அவருடைய பாடி லேன்குவஜே ஒரு அழகு, வீட்டில் இருக்கும்போது பொண்டாட்டியிடம் கொஞ்சும் அழகே தனி, இவர் இந்த வயதில் இப்படி இருக்கிறாரே, சின்ன வயதில் எப்படி இருந்திருப்பாரோ, என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும்போது

‘என்ன சீனு நினைவெல்லாம் ரஞ்சனாவா?’ என்று கேட்டார் சுந்தரம்

‘இல்லை சார், அது வந்து.....’

‘கவலைப் படாதே அங்கே தான் போறோம், நீ இன்னிக்கு முழுக்க உன் ஆளோடு இரு,’ என்று கண்ணடித்தார், அவன் வெட்கப் பட்டான்,’ ரொம்ப அருமையான பெண்கள், உன்னைப் பார்த்து ரொம்ப பெருமையா இருக்கப்பா, நீ ஒரு அருமையான பையன், எனக்கு மருமகனா வரப் போகிறாய், என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்

‘இல்லை சார் நான் தான் இன்னும் ஒரு வருடம் போகட்டும் என்று நினைக்கிறேன்’ என்றான்

‘ஏன்?’ என்று கேட்டார், ‘இப்பவே நல்ல சம்பளம் தானே, அப்புறம் என்ன?’

‘இல்லை சார் அவளுக்கு இன்னும் இரண்டு வருட படிப்பு இருக்கு, அப்புறம் அவள் இன்னும் சின்னப் பெண் அதான் என்றான், நான் இன்னும் இரண்டு வருடமென்று சொல்கிறேன் அவள் தான் வெயிட் ஒரு வருடம் என்றிருக்கிறாள்,’ அதான் என்றான்

‘அவர் யோசித்து, நீ முடிவெடுத்தால் சரியாகத்தான் இருக்கும், நீ பொறுப்புள்ளவன் எனக்குத் தெரியும்’ என்றார்

இப்பவே அவனுக்கு மூன்று மாதத்துக்கு முப்பத்தைந்தாயிரம், பிறகு அவனுக்கு அறுபதாயிரம் என்று சொல்லிவிட்டார் ,

அவனுக்கும் அவன் பெற்றோர்களுக்கும் ரொம்ப சந்தோஷம்

அவர்கள் ஹாஸ்பிடல் வந்தார்கள், ஹாஸ்பிடல் ஓனர் என்பதனால், அவருக்கு நல்ல மரியாதை, அதுவும் அவள்தான் அதற்கு முதலாளி என்று சொல்லிவிட்டார் அது மட்டுமில்லை அவளது போட்டோ வேறு அங்கிருப்பதால் எல்லோருக்கும் தெரியும். இவர்கள் ரூம் ஒன்று அங்கு இருப்பதால் இவர்களுக்கு ஒரு அபார்ட்மெண்ட் போல எல்லா சௌகிரியங்களும், அவர்களுக்கு இருந்தது, சுந்தரம் ஒரு சமையல் ஆளை அங்கு வரச் சொல்லியிருந்தார், இன்னும் ஒரு மாதத்திற்கு ராதாவின் அப்பா, அம்மா அங்கு இருக்க எல்லா ஏற்பாடும் செய்திருந்தார் .

அவர்களை, அங்கு வேலை செய்த புவனா அவரை கூட்டிக் கொண்டு அவர்கள் ரூமுக்கு போனாள், ஆபேரஷன் முடிந்ததா என்று கேட்டார் ‘இன்னும் இல்லை சார்,’ என்றாள் அவள்

ரூமில் எல்லாரும் பேசிக் கொண்டிருந்தார்கள் ராதாவின் அம்மா பிரே பண்ணின்டிருந்தாள், சுந்தரம் உள்ளே நுழைந்தவுடன் அவர் எழுந்துவிட்டார், ‘என்னம்மா இப்படி எழுந்துக்கக் கூடாது என்று உங்களுக்கு சொல்றது,’ என்று அவர் தோளைத் தொட்டு அவரை உட்கார வைத்தார், சாந்திக்கு கூச்சமாக இருந்தது, அவர் தோளை சுற்றி கையை போட்டு எப்படியிருக்கிறீர்கள் என்று கேட்டார் சுந்தரம், ‘அதான் கடவுளிடம் பிரார்த்தனை பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்றார், கவலைப் படாதீங்க, இந்த டாக்டர் பெரிய டாக்டர் நல்ல கைராசியானவர் கவலைப் படாதீர்கள்,’ என்று கூறி தன் மனைவியிடம் சென்றார்,' ஹாய் பொண்டாட்டி, எப்படியிருக்க?’ என்றார்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.