(Reading time: 11 - 22 minutes)

20. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

ப்போது ஆனந்தனும், ரம்யாவும் உள்ளே நுழைந்தனர், அவனும் சிரித்துக் கொண்டே, ‘இது ரொம்ப அநியாயம் டாடி, அதுக்குள்ளே ரெண்டு பொண்ணுங்களை உங்கபக்கம் சாய்ச்சுட்டீங்களே’ என்றான்

மறுபடியும் ஒரே சிரிப்பலை.

‘என்னம்மா ரம்யா உன் மாமனாரை பாத்தாயா?’ என்றான் ஆனந்தன்

அவளையும், இங்கே வா என்று கூப்பிட்டார் சுந்தரம்

‘டாடி அவள் என் லவர்’ என்றான் ஆனந்தன்

‘இருக்காடும்டா அவள் என் பெண், என் மருமகள்,’

எவ்வளவு சந்தோஷமான நாள் இது. என் மனைவி, என் மகன், மருமகள், மகள்,மருமகன், என்று எல்லோரையும் தன் பக்கம் அழைத்தார்

எல்லோருக்கும் முத்தம் கொடுத்து, மனைவியிடம் 'ஹே நமக்கு இன்னிக்கு முதலிரவு, வா சீக்கிரம் போ சாப்பிட்டு விட்டு நம்ம ரூமுக்கு போவோம்' என்றார் சுந்தரம் ராதாவிடம் கன்னடித்துகொண்டே,

ராதா வெட்கத்தில் முகம் சிவந்தாள்

எல்லோரும் கிளம்பினர் கேழே சாப்பிட போனார்கள், ராதா அவள் பெற்றோர்களை பார்க்க உள்ளே போனாள்

அங்கே, அவள் அம்மா மட்டும் யோசித்துக் கொண்டிருந்தாள், என்னம்மா சாப்பிட்டீங்களா நீயும் அப்பாவும் என்று கேட்டாள், ‘ஆச்சும்மா’ என்றாள் அவள் அம்மா,அப்பா என்ன ‘சொன்னார்ம்மா?’ என்று கேட்டாள்

ஒரு பெரு மூச்சு விட்டு, ‘அப்பா என்ன சொன்னார், பசங்கல்லாம் பெரியவங்க ஆய்டாங்க, அவங்க இஷ்டம் எதுவோ நிவர்த்தி பண்ணனும், மாப்பிள்ளை பார்த்து செய்யக்கூட எங்களால் முடியாது, அதுவும் நீ சொன்னா மாதிரி குழந்தைகள் ஒருவரை மனசுல ஒருத்தரை நினைத்து வேறு ஒருவருடன் வாழ முடியாது, நம்ம ராதுவோட கதையை கேட்டே இன்னும் நடை பிணமாத்தான் இருக்கேன் அதனாலே அவர்கள் என்ன செய்யணுமோ, ராதாவே ஒத்துண்டா அவதானே அம்மா அவளுக்குத் தெரியாதா தன் மகன் வாழ்க்கையை பற்றி அதனால் அவள் இஷ்டம்தான்,’ என்று சொல்லிட்டார்.

‘எங்க இஷ்டத்தத்தை விட குழந்தைகள் சந்தோஷம்தான் முக்கியம் , அப்பா சொல்லிவிட்டார் ஊர், உலகத்தை பற்றி கவலை இல்லை, தனக்கு தன் குழந்தைகளின் எதிர்காலம், சந்தோசம் தான் முக்கியம் என்று சொல்லிவிட்டார்.’

‘சரிம்மா நாங்கள் போய் சாப்பிட்டுவிட்டு தூங்கபோறோம் நீங்கலும் தூங்குங்கள்’ என்று நகர போனாள், ராதா என்று கூட்டாள்,

‘என்னம்மா? என்று திரும்பி வந்தாள், கண்ணா உன் கல்யாணத்துக்காக நாங்க ஒன்னுமே பன்னல, எங்களுக்கு அது வருத்தமாகவே இருக்கு, எல்லாமே, மாப்பிள்ளையே செய்து விட்டார், எங்களை மன்னிச்சுக்கோம்மா’ என்றார் அவள் அம்மா

‘ஏம்மா? இப்படி பேசறே, என் மேல் ஏதாவது கோபமா?’

‘சீ, சீ , இல்லம்மா மனசுல இருக்கிறத சொன்னேன் , அவ்வளவுதான் ‘

‘அம்மா நீ அப்படியெல்லாம் நினைக்காதே, நீ என்னை எடுத்து வளர்கலேன்னா, இவரையும், என் பிள்ளையையும், நான் பார்த்திருக்க முடியாது, என் வாழ்வும் இவங்களோட சேர்ந்திருக்க முடியாது, இது எல்லாம் கடவுள் செயல்,அதனால் இதெல்லாம் மனசுல போட்டு வருத்தப்படாதே, நினைச்சுப் பார் எங்களக்கு இந்த நல்ல வாழ்வு கிடைத்திருக்குது,’

‘ரம்யாவுக்கு ஆனந்த், ராஞ்சிக்கு சீனு, இவங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கப் போகிறது, கவலைப் பட்டு உன் உடம்பைக் கெடுத்துக்காதே, இப்போ நமக்கு எல்லாம் இருக்கு, நாமெல்லாம் ஒன்றாக இதே வீட்டில்தான் இருக்கப் போறோம், அதனாலே நிம்மதியா இருங்க , நீயும் அப்பாவும்.

சரி நான் சாப்பிடப் போறேன் அவங்களெல்லாம் வெயிட் பண்ணுவாங்க ’ என்றாள்

‘இல்லைம்மா ராதா, இன்னிக்கு உனக்கு முதலிரவு ஒரு அம்மாவா உனக்கு, ஒன்றுமே நான் ஏற்ப்பாடு பன்னல’ என்றாள் சாந்தி

அம்மா என்னம்மா என்னென்னவோ வேண்டாததெல்லாம் நினக்கறே,

அந்த காலத்திலேயே அவர் இதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றவர்

‘அதுவும் அவர் புதுசு இல்லை அவருக்கு நானும் புதுசு இல்லை, என்ன கோபப் பட்டு பிறந்த வீட்டுக்கு போனாள் போல் நடுல கொஞ்சநாள் நான் அவர் வாழ்க்கைல இல்லை அவ்வளவுதான்

அதனால உன் மண்டை கொடசல தூக்கி வை

குட் நைட்,’ என்று சொல்லி போய்விட்டாள்

‘எங்கே போய்ட்ட நீ,’ என்று வேகமாய் வந்தார்

‘என்ன மனசுக்குள்ள மதியம் மாதிரி ஏதாவது பிளான் வச்சிருக்கீங்களா அப்படி ஏதாவது இருந்தால் மறந்துடுங்க’

என்று விடு விடு ன்னு டைணிங் ரூமுக்கு வந்தாள்

எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள், அவர்களுக்கு ‘சாரி ‘சொன்னாள்

சுந்தரம் வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தார்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.