(Reading time: 23 - 46 minutes)

"ன்ன இருந்தாலும் நம்ம அக்காவைக் கட்டி கொடுத்திருக்கிற இடம், அவங்க வீட்டு விசேஷத்துக்கு நாம கலந்துக் கொள்ளணும். எங்களுக்கு தான் வயசான காலத்துல அலையமுடியலை நீயாவது போயிட்டு வாம்மா என்றுச் சொன்னதாக சாண் , முழம் பாராமல் அளந்து விட்டுக் கோண்டு இருந்தாள். அவர் விழாவிற்கு வரவில்லை என்பதை விழாவில் கலந்துக்கொண்டிருந்த தன்னுடைய பெற்றோர் சொல்லக் கேட்டிருந்ததால் பயமே இல்லாமல் அவள் கதை தொடர்ந்தது.

அவருக்கு அதையெல்லாம் கருத்தாய் கேட்க நேரமில்லை, மகளை ஒரு முறைப் பார்த்து விட்டு சென்று மீதி வேலைகளை முடிக்க வேண்டும். எனவே விரைந்தார்.

“ஏன் அங்கிள் ரெண்டுப் பசங்களோட உங்க பொண்ணு இங்க வரதும் போறதுமா இருந்தா யாரும் தப்பா பேசமாட்டாங்களே?” என்று அவர் மனதைக் குழப்பும் வேலையில் சரியாகஈடுபட்டாள்.

ஏற்கெனவே அவளது கேள்வியால் மனதில் சஞ்சலம் சூழ்ந்திருந்தது, அவளோ மேலும் மேலும் கேள்விகள் கேட்டு அவரை சோதித்த விதத்தில் மகளை வேலையிலிருந்து நிறுத்திவிடலாம என்னும் எண்ணம் அவருக்கு வந்து விட்டிருந்தது. ஆஃபீஸின் வாசலைத் திறந்து உள்ளே வந்தவருக்கு பேசிக் கொண்டே வேலையில் ஈடுபட்டிருந்த ஓரிருவர் தெரிந்தனர்.அவர்கள் இப்போது தான் லஞ்சுக்கு சென்று வந்திருப்பார்கள் போலும், பையில் டிஃபன்களை வைத்துக் கொண்டிருந்தார்கள். நேற்று திறப்பு விழா நடந்து முடிந்ததினின்று பல்வேறுநபர்கள் வருவதும் சந்திப்பதுமாக இருக்கவே இவரும் தங்கள் பாஸின் உறவினர் போலும் என்று நினைத்துக் கொண்டனர்.

"ரூபன் கேபின் எது?" என்றார் அவசரமாக , உடனே அவருக்கு கேபினைக் கைக் காட்டினர்.

"அனிக்கா எங்கே இருக்கிறாள் எனத் தெரியுமா?" எனக் கேட்க புதிதாக வந்திருக்கும் பெண்ணைப் பற்றித்தான் என்று அனுமானித்தவறாக ஒரு நபர் ,

"மேடம் கேபின்ல தான் இருக்காங்க சர்" என்றார்.

ஷைனி அவசரமாக,”சொந்தக் காரங்களாகவே இருந்தாலும் உங்க பொண்ணு கூட அந்த பையன் இவங்க ரெண்டு பேரும் ஒரே கேபின்ல இப்படி இருந்தா யாரும் தப்பா நினைக்கமாட்டாங்களா சர்?” என்று மறுபடி போட்டுக் கொடுக்க,

மனக்கிலேசத்தோடே இருந்த அவர் முறையாக கேபினைத் தட்டி விட்டு திறக்க எண்ணாமல், எதையோ அறிந்துக் கொள்ம்ளும் விதமாகவோ, தன்னுடன் வளவளத்துக் கொண்டுஇருப்பவளுக்கு பதில் சொல்லும் விதமாகவோ சட்டென்று கதவை உள்ளே தள்ளி முழுவதுமாக திறந்தார்.

உள்ளே வேறு யாரையும் காணவில்லை. பாஸின் நாற்காலியில் அமர்ந்து டெஸ்க்டாப்பைக் கூர்மையாக ஆராய்ந்தவளாக உட்கார்ந்திருந்தாள் அவர் மகள் அனிக்கா, சட்டென்றுதன்னுடைய கவனம் சிதற கதவை நோக்கிப் பார்த்தவள்,

"அப்பா" வென்று ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டாள்.

இன்னும் ஷைனிக்கான கேள்விகளுக்கான பதில்கள் நிறைவு பெறாததால்"ரூபன் , ஜீவன் ரெண்டு பேரும் எங்கேம்மா? என கேட்டார்,

"ஜீவனும் அத்தானும் ஃபேக்டரில தாம்பா இருப்பாங்க , இருங்க பார்ப்போம் என்றவளாக ஆஃபீஸையும் ஃபேக்டரியையும் பிரித்த அந்தக் கதவின் கண்ணாடிப் பகுதியில் பார்த்து அதோ?என தகப்பனுக்கு காட்டினாள். அங்கே ஜீவன் அருகிலிருக்க, ரூபன் ஏதோ ஒரு மெஷினின் அருகே குனிந்து எதையோ சரி பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தான்.

நான் உன்னைக்

காதலிப்பதால்

நீ எனக்கு

குறைவானவள் அல்ல

உன் மரியாதை எனக்கு முக்கியம்.

 

நான் உன்னையே

நினைத்து மறுகுவதால்

உன்னை வற்புறுத்தும்

அதிகாரம் எனக்கு இல்லை.

உன் விருப்பம் எனக்கு முக்கியம்

 

நான் உன்னையே

எக்காலமும் நினைப்பதால்

நீயும் என்னைதான் நினைக்க வேண்டும்

என்றுக் கட்டுப் படுத்தும்

அகங்காரம் எனக்கு இல்லை

உன் மகிழ்ச்சி எனக்கு மிக முக்கியம்.

 

நான் உனக்காக

 இரா தூக்கம் தொலைப்பதால்

நீயும் துன்பத்தில்

உழல வேண்டும் என்பதல்ல

உன் சுதந்திரம் எனக்கு மிகவே முக்கியம்

 

நான் என்னாளும்

 இரவு பகல் உனையே சிந்திப்பதால்

உன் சிந்தனையில்

வலுகட்டாயமாக நான் திணிக்கப் பட

எனக்கு ஆசையில்லை

நீ நீயாகவே சுயத்தோடு இருப்பதே

 எனக்கு மிக முக்கியம்.

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.