(Reading time: 20 - 39 minutes)

ப்பவே இங்க வந்து உட்கார்ந்திருக்க….மஹிய எங்க? காஃபி சாப்டீங்களா ரெண்டு பேரும்…? “ என தங்கையிடம்  விசாரித்தான்.”

“ஓ அதெல்லாம் ஆச்சே…. அவங்கள தெரியுமே உனக்கு,  ஏர்லிமார்னிங்க் எழுந்து காஃபி சாப்டுட்டு…. ஹை இன்னைக்கும் லீவுன்னு சொல்லி  திரும்ப படுத்து தூங்குறாங்க….” இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

“என்ன என்னையவிட்டுட்டு மார்னிங் மாநாடு? “ என்றபடி அங்கு வந்தது மஹி….

“கனு….அம்மா call செய்றாங்க…..நாம கிளம்பனும்…” கண்மணியிடம் சொன்னவன்

 “இன்னைக்கு உங்களுக்கு எங்க வீட்ல விருந்துமா….” என ரியாவைப் பார்த்து தொடங்கி…  “இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு லன்ச்குள்ள ரெண்டு பேரும் வந்துடுங்க” என விவனை பார்த்து விருந்துக்கு அழைத்தான்..

சற்று முன் வரை மனம் இலகுவாய் இருந்திருக்கிறது என்பதே இந்த கண்மணியின் மாமியார் நினைவில் மனம் விழுந்து போன போதுதான் ரியாவுக்கு புரிகிறது.

 அடுத்து கண்மணி மஹியுடன் விடைபெற……வீட்டில் இவளும் விவனும் மட்டும்தான் என்ற நிலை….

‘ஓ இங்கல்லாம் இப்படித்தான் போல….வெட்டிங் முடிஞ்சதுமே எல்லோரும் போய்டுவாங்க போல….’  என கண்மணியின் திருமணம் அன்று மாலையே விவன் இவளோட வர முடிந்த காரணத்தை இன்றைய நிலையை வைத்து மனதில் உணர்ந்து கொண்டிருந்தவளின் அருகில் வந்த விவன்.

“ரியு….. இந்தா ப்ரவ்ஸ் பண்ணி  நீ  கேட்டபடி ஒரு டாக்டர கண்டுபிடிச்சு அப்பாய்ண்ட்மென்ட் வாங்கு..” என்றபடி தனது லேப்டாப்பை நீட்டினான்.

இவள் இப்போது அவனை நிமிர்ந்து பார்க்க…

“எனக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு டாக்டரை கண்டுபிடி….அப்பதான் சரியா வரும்…”

லேப்டாப்பை அருகிலிருந்த டேபிள் மேல் வைத்து ஆன் செய்து கூகிளில் என்டர் ஆனான்.

இதோட உள்குத்து என்ன என்பது போல் ரியா அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்….

“எனக்கு  உன் ட்ரீம்ஸ் பத்தி ஒரு அன்டர்ஸ்டாண்டிங் இருக்குது…..ஆனா நான் சொன்னா நீ ஒத்துக்க மாட்ட…. அத எனக்கு சம்பந்தம் இல்லாத டாக்டர் சொன்னா உனக்கு நம்ப தோணுமில்லையா….?” இவளைப் பாராமலே லேப்டாப் மானிடர் பார்த்து அவன் பேசிக் கொண்டு போக…

“ஏன் நீங்கதான் பாண்டிய சேனாதிபதின்னு சொல்லப் போறீங்களா?”

இப்பொழுது இவளைத் திரும்பிப் பார்த்தான் விவன்…  அவன் முகத்தில் ஒரு வித மைன்ட் ப்ளோயிங் மகிழ்ச்சியும் கழுவி வைத்த கலப்படமற்ற ரசனையும்….

“அவ்ளவுதான் வந்திருக்கா….. ? நான் என்னமோ நினச்சேன்” கேட்டான்.

“என்ன ட்ரீம் வருதுன்னே தெரியலையாம்…..அப்றம் அது ஏன் வருதுன்னு  மட்டும் உங்களுக்கு ரொம்ப தெரிஞ்சுட்டாமோ….? “

சின்னதாய் உதடுக்குள் சிரித்துக் கொண்டாலும் அவன் லேப்டாபை இவள் பயன் படுத்தும் வண்ணம் விலக…

அங்கிருந்த சேரில் அமர்ந்து இவள் சைக்கியாட்ரிஸ்ட் தேடும் படலத்தை தொடங்கினாள்… அடுத்த இரண்டாம் மணி நேரம் இவள்  சைக்கியாட்ரிஸ்ட்டிடம் பேசிக் கொண்டிருந்தாள்….

அன்றைய செஷனில் இவள் ப்ராப்ளத்தின் சம்மரியை  கேட்டு குறித்துக் கொண்ட டாக்டர் அவளுக்கு  அசைன்மென்ட்  ஒன்றை கொடுத்தார்.

“இதை எழுதி முடிக்க ஒரு 2 டூ 3 ஹவர்ஸ் ஆகும்மா…. எல்லாம் உங்க பெர்சனல் டீடெய்ல்ஸ்….யோசிச்சு நிதானமா எழுதிட்டு வாங்க….அதைப் படிச்சு பார்த்து தான் எனக்கு உங்களைப் பத்தி அன்டர்ஸ்டாண்டிங் வரும்…தென் நம்ம ப்ராப்ளத்துக்கான ரூட்டை டெசிபர் செய்ய முடியும்……. தென் எல்லாம் சால்வ் ஆகிடும்….  ” என அனுப்பி வைத்தார்.

ஏனோ சீக்கிரம் ப்ராப்ளம் சால்வ் ஆகிவிடும் என தோன்றத் தொடங்கியது ரியாவுக்கு…..

அடுத்து அன்று கண்மணி வீட்டிற்கும் இவர்கள் சென்று வர…….இரவு வீடு வரும் போது மற்ற நாட்களை விட இலகு மன நிலையில் இருந்தாள் இவள்….

“வீட்ல நைட் சர்வென்ட்ஸ் எப்பவுமே கிடையாது…..இப்ப ஒரு  ஒன் மந்த் டே டைம்லயும் சர்வென்ட் யாரு வேண்டாம்னு சொல்லி இருக்கேன்…. நீ தாராளமா தனியா தங்கலாம்…எதுவும் இஷ்யூ ஆகாது…..நெக்‌ஸ்ட் மந்த் நிம்முட்ட குழந்தை விஷயத்தை சொல்லிட்டா அடுத்து டே டைம்ல மெய்ட் வரது கூட எந்த வகையிலும் ப்ராப்ளம் ஆகாதுன்னு நினைக்கிறேன்…… உனக்கு வேற எதாவது ஐடியா இருந்தாலும் சொல்லு…” என்றதோடு விவனும் அன்று இவளை வேறு அறையில் தங்க சொல்ல இன்னுமே பெட்டர் ஃபீல்.

அப்படித்தான் அன்று தூங்கப் போனாள்…. கனவில் மரக்கலமும் காயம்பட்ட படைத்தலைவனும் காட்சி தந்தனர்.

மரக்கலத்தில் பாண்டிய சேனதிபதியின் காயத்தை நோக்கி குனிந்திருந்தவள்…..அந்த வினாடியில் செவியில் விழுந்த அரவத்தில் அத்திசை நோக்கி திரும்ப…அங்கு வந்து நின்றது பாண்டிய வரதுங்கன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.