(Reading time: 20 - 39 minutes)

ண நேரத்தில் நிலை உணர்ந்த வரதுங்கன்தான் அடுத்து சேனாதிபதிக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தான். உதிர இழப்பு பெரிதாய் எதுவுமில்லை என்றாலும்…காயம் சற்று கணத்திருந்ததால் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது மானகவசனுக்கு…..

மானகவசனின் படைவீரர்களும் வரதுங்கனுமே கூட ருயம்மாவிற்கென மானகவசன் ஒதுக்கிய அறையை மானகவசனுக்கு கொடுக்க விரும்புவது ருயம்மாவிற்கு புரிந்தது…..  காயத்தின் வேதனை காரணமாக சின்ன அசைவு கூட அவனது சயனத்தை கலைக்க கூடும் என்பதால் தனி அறையை மானகவசனுக்கு கொடுப்பது உசிதம் என அவர்கள் எண்ண…

ருயம்மாவுக்கும் அதில் மாற்று கருத்து இல்லை என்றாலும்….. அடுத்து அவள் எங்கு தங்க என தெரியாத ஒரு தவிப்பும் உள்ளே இருக்கின்றது…..ஆக சற்று நேரம் அதைக் குறித்து சிந்தித்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக மற்றவர்களோடு சேர்ந்து தானும் மானகவசனை வற்புறுத்தி அவளுக்கு அளிக்கப்பட்ட விஷேஷித்த அறையில்  பாண்டிய சேனாதிபதியை தங்க வைத்துவிட்டு…

பிறர் அடுத்திருந்த பொது சயன அறையில் படுக்க முயல்கையில்……சற்று நேரத்தில் வருவதாக சொல்லி கலத்தின் மேல் தளத்திற்கு காற்று வாங்கவென வந்தாள்.

இரவை அங்கு கழித்துவிடலாம் என்பது அவளது திட்டம்…..

நீல வானில் சிதறி இருந்த விண்மீன்களையும்….மேலைக் காற்றில் பருத்திருந்த பாய் மரங்களையும் பார்த்தபடி அங்கிருந்த ஒரு பாய்மர தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் சில நேரம்….

அப்போழுது அருகில் அரவம் கேட்க சற்று அவசரமும்….கவனமுமாய் எழுந்து நின்றால் வந்திருந்தது மானகவசன்.

“தாங்கள் ஓய்வெடுக்க வேண்டும் தளபதியாரே…” இவள் தான்.

“ம்…” சற்றாய் தன் மீசையை தடவிய வண்ணம் அவன் சுற்றிலும் பார்வையை  ஓட்ட….

“இங்கு யாருமில்லை….” என ஒரு விளக்கம் இவளிடமிருந்து.

தன் இரு விரல்களால் தன் நெற்றியை ஆழ்ந்த சிந்தனையின் அடையாளமாய் ஒரு கணம் தடவிக்கொண்டவன்…

“உம்மிடத்தில் ஒரு காரியம் தெரிவிக்க வந்தேன் ருயமரே….” எதையோ சொல்ல முயன்றான்.

“இத்தனை ஜாமத்தில்…..இவ்வாறான உடல் நிலையில் அவசியமாய் தேடி வந்து சொல்ல வேண்டுமா பிரபு..?”

“விஷயத்தை சொல்கிறேன்….அதன் அவசியம் உமக்கே புரியும்….”

அவன் விடையில் இது ஒன்றும் சிறு காரியமாய் இராது என ருயம்மாவிற்கு தெள்ளத் தெளிவாகவே புரிய……

ஒருவித ஆழ்ந்த அச்சம் வந்து பீடிக்கிறது அவள் இதயத்தில்…. எத்தகைய புயல் வரப் போகிறதாம்? அல்லது பூகம்பமோ?

வருவதை வாழ்ந்து தான் ஆக வேண்டும் அது தானே இப்போதைய இவள் நிலை….. திடும் என தான் இங்கு முழு அனாதை என்பது பலவந்தமாய் தாக்குகிறது அவள் சிந்தையை….

இம் மானகவசர் இவளுக்கு எதிராய் எதையாவது சொன்னால்….அதை இவளோடு சேர்ந்து தாங்க யாரிருக்கிறாராம் இவளுக்கு???!!!

மூச்சை ஆழ்ந்து இழுத்துவிட்டுக் கொண்டவள்….. அவனின் வார்த்தைகளுக்கு ஆயத்தமாக….

அவன் சொன்ன விஷயத்தில் ஜீவன் செத்து மீண்டது இவளுக்கு.

“மானகவசனாகிய நான்…..பாண்டிய சேனாதிபதி மட்டுமல்ல….பராக்கிரமன் என்ற பட்டத்துடன் பாண்டிய நாட்டை ஆள்வதும்  நான்தான்……”

திக் ப்ரமித்துப் போய் நின்றாள் ருயம்மா….

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1063}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.