(Reading time: 7 - 13 minutes)

ப்படியோ அவர்களின் பொறுமையை வெகு நேரம் சோதித்தவள் ஒருவழியாக சாப்பாடு முடிந்து எல்லோரும் அவரவர் வேலைக்கு திரும்ப விடைப் பெற்றுக் கொண்டாள். ரூபன் சாப்பிடும் போதே ஒன்றன் பின்றாக ஒன்று ஃபோன் கால்கள் வந்துக் கொண்டிருக்க அவனுக்கு ஷைனியின் செயல்கள் கவனத்தை அதிகமாக கவரவில்லை.

நண்பர்கள் இருவரும் தான் ஒருவருக்கொருவர் பார்வை பரிமாறிக் கொண்டு தலைவிதியே என்று இருந்தனர். அங்கிருந்த மூன்றுப் பேரில் அவள் குறிப்பாக ரூபனிடம் மட்டும் பேசியது இருவருக்குமே ஏகத்துக்கு கோபத்தை ஏற்றிவிட்டிருந்தது. ஆனால், உட்கார்ந்து இதுக் குறித்துப் பேசுவதற்கு அவர்களுக்கு அப்போது நேரமில்லை.மதியம் சாப்பாட்டிற்கு பிறகு நிகழ்ந்த மீட்டிங்கில் இருவரையும் அறிமுகப் படுத்தினான்.

அவர்கள் இருவரும் தன் குடும்பத்தினர் என்று அவன் எங்குமே குறிப்பிடவில்லை. ஃபேக்டரி நிர்வாகம் இனி ஜீவன் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் ஆஃபீஸ் குறித்த வேலைகளை மேற்பார்வையிடப் போவது அனிக்கா என்றும் அறிவித்தான். அவ்ர்களுக்கு எப்போது எந்த உதவி, ஆலோசனை தேவையென்றாலும் அவர்களை முதலில் அணுகக் கேட்டுக் கொண்டான். சிறிய அறிமுகமும், உரையாடல்களும் நடைப் பெற்றன. இருவருக்கும் பலத்த வரவேற்பு அளிக்கப் பட்டது.

ஆஃபீஸில் புதிதாக சேர்ந்திருந்த இரண்டு பெண்களும் முதல் நாளின் பாதியில் ஃபேக்டரி வேலைகள் குறித்த அடிப்படை அறிமுகம் பெறுவதற்காக சென்றிருந்தனர். மீட்டிங்கிற்கு பின்னர் ஆஃபீஸிற்கு வருகை தந்தனர். மற்ற நால்வரும் இன்னும் வந்திருக்கவில்லை. பொதுவாக வம்பளந்துக் கொண்டிருந்தார்கள். அனிக்கா வரவும் அவர்கள் அவளைக் கண்டுக் கொள்ளவில்லை. தங்களைப் போல பணிப்புரிகின்றவள் தானே என்கின்ற அலட்சியமாக இருக்கலாம்.

அனிக்கா அங்கிருந்த வாட்டர் கூலரில் தண்ணீர் எடுத்து அருந்திக் கொண்டிருந்தாள். குசு குசுவென அவர்கள் பேசிக் கொண்டிருந்தது அதிக தொலைவில்லாததால் இவள் காதிலும் விழுந்து வைத்தது. 

“சின்னவர் விஷால் மாதிரி இல்ல….வெரி ஹாண்ட்சம் மேன்.”

கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு சிரிப்பாக இருந்தது. ஜீவா உனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்கடான்னு சொல்லணும் என்று எண்ணிக் கொண்டாள்.இருவருள் மற்றவளோ,

,

“ஹேய் பெரிய சார் தான் ரொம்ப ஹாண்ட்சம், அவரு மஸ்சல்ஸ பார்த்தியாடி?…… ஒருவேளை சிக்ஸ் பேக் ஆ வச்சிருப்பாரோ?”…..வாவ் …….

கேட்டும் கேளாதது போல கேபினிற்குள் நுழைந்தாள். மனமெல்லாம் திகு திகுவென எரிந்தது. இவளுங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? என மனதிற்குள் பொரிந்தவள், சற்று நேரத்தில் ஏதேச்சையாக ஏதோ ஒரு விபரம் தேடி கேபினுக்குள் நுழைந்தவனிடம் அவசரமாகச் சொன்னாள்.

“அத்தான் நீங்க அந்த ஷைனிக் கிட்ட எல்லாம் பேசாதீங்க, சொல்லிட்டேன்”…………..

தன்னவள் தன்னிடம் சொன்னது ஆணையா இல்லை அறிவுரையா? எனப் புரியாமல் வந்த வேலையை மறந்து அவளையேப் பார்த்தவாறு நின்றான் ரூபன். 

நீ சொன்னால்

மலையும் எனக்கு மடுவாகும்.

 

நீ சொன்னால்

மலரும் எனக்கு முள்ளாகும்.

 

நீ சொன்னால்

முரண்கள் யாவும் சீராகும்.

 

நீ சொன்னால்

வலிகள் கூட வரமாகும்.

 

நீ சொன்னால்

வாழ்க்கை என்றும் வரமாகும்.

 

நீ சொன்னால் மட்டும் போதும்

கண்ணே சொல்வாயா?

 

என் காதல் என்றும் வாழ

வழியைச் சொல்வாயா?

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.