(Reading time: 18 - 35 minutes)

06. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

ப்ரெண்ட்ஸ்க்கு ஒரே டேஸ்டிருக்கும்… அவங்க ஒரே மாதிரி யோசிக்கக் கூட செய்வாங்கங்கறது உண்மையான்னு என்னை யாரவது இப்போ கேட்டா, அது நிஜம் தான்னு சொல்வேன்; நாங்களே இதுக்கொரு சாட்சின்னும் சேர்த்து சொல்வேன்”

நட்பைத் தாண்டி தனக்கு அவள் மேலிருக்கும் காதலை புரியவைக்க வேண்டுமென முடிவு செய்தான் ஜெய்.  அவளைக் காணாமல் எத்தனை மெஸ்ஸெஜ் அனுப்பியிருந்தான்… அவளை நேசிப்பதால் தான் அவளை சிறிது நேரம் கூட பிரிந்திருக்க முடியவில்லை என்பதை உணர்த்திவிட வேண்டுமென

“ஸோ வண்டி கிடைச்ச சந்தோஷத்தில நீ உன்னோட ஃபோன் செக் பண்ணவே இல்லை…”

“அட ஆமா! என்ன சஞ்சு இன்னைக்கு நான் நினைக்கிறதையே நீயும் நினைக்கிற… நான் என்னோட ஃபோன் பார்க்கலைங்கிறதையும் சரியா சொல்லுற” என்று விழி விரிந்தாள்

அவளின் விழியின் அழகை ரசித்தபடியே, “போகட்டும்… இப்பவாவது ஃபோன் செக் பண்ணறியா?”

அவன் சொன்னதை செய்தவளோ,

“என்ன மச்சா! இத்தனை மெஸ்ஸெஜ் அனுப்பியிருக்க?!”

அவளை உற்றுப் பார்த்தான் ஜெய் பதிலேதும் சொல்லாமல்…

அன்றைக்கும் பஸ் ஸ்டாப்பில் இவளுக்காக காத்திருந்து… இவள் வராமலிருக்கவும்… இவளின் பாதுகாப்பைப் பற்றி பயந்து காலேஜுக்கு ஓடி வந்தான்.  இன்றைக்கும் இத்தனை மெஸ்ஸெஜ் அனுப்பியிருக்கவும்… ஒரு தோழியான தன்னிடமே இப்படி அக்கறையாய் இருக்கும் சஞ்சயின் மேலிருந்த மதிப்பு கூடியது அவள் மனதில்.

“ஃப்ரெண்டான எங்கிட்டயே இத்தனை அக்கறையாயிருக்க நீ… அப்போ உன்னோட லைஃப் பார்ட்னர்கிட்ட எத்தனை அக்கறையாயிருப்ப… ஷி இஸ் லக்கி டூ ஹாவ் யூ, சஞ்சு!” என்று புன்னகைத்தாள் சரயூ.

அவன் கண்கள் பளிச்சிட்டன…

நீ.. உன்னையே லக்கின்னு சொல்லிக்கிற! இப்போ உனக்கு அது தெரியலைன்னாலும் என்னோட லைஃப் பார்ட்னர் பற்றி நீ யோசித்தே எனக்கு வெற்றி தான்… என்னை கூடிய சீக்கிரம் நீ புரிஞ்சிப்ப…

“தேங்க் யூ சரூ!” என்றான் சிறு புன்னகையுடன்.

“ச்சே.. இதை எப்படி மறந்தேன்!”

‘என்ன’ என்பது போல் ஜெய் அவளைப் பார்க்கவும்

“இந்த உலகத்தோட என்னோட சந்தோஷத்தை பகிர்ந்துகிறது தான்” என்றபடி தன் ஃபோனில் பல ஸெல்ஃபிகளை எடுக்க துவங்கினாள்.  அவளும் வண்டியும் மட்டுமிருக்கும் சில பிக்ஸ், அவனையும் சேர்த்து சில பிக்ஸ் எடுத்துவிட்டு அவனைப் பார்த்தவள்

“மச்சா, சும்மா இப்படியிருந்தா என்ன அர்த்தம்! இந்தா பிடி” என்று அவனிடம் வண்டியின் சாவியை நீட்டினாள்.

“உன்னோட புது வண்டி சரூ! நான் நாளைக்கு…” அவன் முடிக்கும்முன் குறுக்கிட்டவள்

“டோன் பி ஃபார்மல் சஞ்சு! ஒரு ரைட் ட்ரை பண்ணு” சாவியை அவன் கையில் திணித்தவள் உலகத்தோடு தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஈடுபட்டாள். (சோஷியல் மீடியால ஸ்டேட்டஸ் அப்டேட் செய்து ஃபோட்டோஸ் ஷேர் செய்றதுதாங்க உலகத்தோட சந்தோஷத்தைப் பகிர்வது)

புன்னகையோடு சாவியை வாங்கியவன் வண்டியில் உட்கார்ந்து அதை ஸ்டார்ட் பண்ணவும் அவன் பின்னே அவளும் ஏறிக்கொண்டாள்.  இதை சற்றும் எதிர்ப்பார்த்திராத ஜெய்யின் மனம் ஆனந்த கூத்தாடியது. 

“எங்கே போகலாம் சரூ?” குரலில் உற்சாகம் கரைபுரண்டது.

“கேம்பஸ்ஸை ஒரு ரவுண்டு போட்டாலே போதும்னு நினைக்கிறேன் சஞ்சு”

வண்டியை கிளப்பியவன் 40/km வேகத்தில் அதை செலுத்திக்கொண்டிருந்தான்.

“மச்சா, மாட்டு வண்டியா ஓட்டுற! இப்படி ஆமை வேகத்தில் போற?” என்று சலித்தாள் சரயூ.

“சரூ, இந்த வேகம் போதும்… இது காலேஜ் கேம்பஸ்ங்கிறத மறந்துடாத” என்றான் கண்டிப்பான குரலில்.

“போ… போ… நாம் யானை மேல உட்கார்ந்து ஊர்வலம் வர ராஜ குடும்பம்… நம்மளைப் பார்க்க மக்களெல்லாம் நின்றிட்டு இருக்காங்கல்ல.. இப்படி தான் போகனும்.. அப்போ தானே அவங்களுக்கு கை அசைத்திட்டே போக முடியும்”

அவளின் பேச்சினால் எழுந்த சிரிப்பை மறைத்தவனாய், “நீ நினைக்கிற வேகத்துல போக முடியாது சரூ… சொன்னா புரிஞ்சுக்க”

எனக்கு எல்லா புரியுது.. உனக்கு தான் எதுவுமே புரியல… இதோ வரேன் இரு! அதை இப்போ புரிய வைக்கிறேன்..

கொஞ்சம் முன்சறிந்து தன் கையால் அவன் வலது கையை அழுத்தி பிடித்து ஆக்சலேட்டரை திருப்பினாள்… வண்டி வேகமெடுத்தது..

திடீரென ஒருவன் குறுக்கே வரவும்… ஜெய் ப்ரேக்கை அழுத்தியும் சட்டென்று நிற்காத வண்டி அவன் மீது மோதி நின்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.