(Reading time: 18 - 35 minutes)

வ்வளவு தான்… தனக்கும் இந்த விபத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாதவளைப் போல் பேசினாள் சரயூ..

“ரூபின் ஆர் யூ ஓகே!” என்றவள் மிகவும் வருந்துபவள் போல் முகத்தை வைத்து கொண்டு விழுந்தவனருகே ஓடியவள்… அவன் கையைப் பிடித்து எழுவதற்கு உதவினாள்… ஜெய்யை பார்த்து

“என்ன மச்சா! இவ்வளவு வேகமா கேம்பஸ்ல வண்டி ஓட்டக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா?  போதாததுக்கு நான் வேற சொன்னேனே.. எத்தனை சொல்லி என்ன பயன்… இப்படி பண்ணிட்டியே மச்சா… பாவம் ரூபின்” என்றவள் ரூபின் கவனிக்காத சமயமாக சஞ்சயைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

சரயூ, பைக்கின் வேகத்தை கூட்ட சொல்லி வர்புறுத்தியும் இவன் கேட்காததால் அதிரடியாக ஆக்சலேடரை திருப்பி இப்படியொரு விபத்து நடந்ததில் வருத்தமுற்றிருந்த ஜெய்,

‘ரூபின் திடீரென வந்திருந்தாலும் கூட அவனை குறை சொல்ல முடியாது.  இந்த சரூ பண்ண வேலையால ரூபினுக்கு அடிப் பட்டிருச்சு’ என்று ஜெய் யோசித்து கொண்டிருக்கையில் சரயூ ஜெய்யின் மீதே பழியையும் போட்டு, இப்போது அவனைப் பார்த்து கண் சிமிட்டவும் அவன் தடுமாறிப் போனான்.

‘ரூபினுக்கு என்னவானாதோ?’ என்ற கவலையையும் தாண்டி ஜெய்யால் அவளின் குறும்பை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.  மறுநொடியே தன்னை சமாளித்தவனாக வண்டியிலிருந்து இறங்கினான்.

“சாரி ரூபின்! தெரியாம இப்படி நடந்துபோச்சு..” என்று மிகவும் வருந்தினான் ஜெய்.

“என்ன தெரியாம நடந்து போச்சா? இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா?” உரக்க புலம்பினான் ரூபின்.

“ஐ அண்டர்ஸ்டாண்ட் ஹௌ யூ ஃபீல் நௌ… தயவு செய்து புரிஞ்சுக்க ரூபின் நான் வேணும்னே பண்ணலை” என்று ஜெய் ரூபின் கையைப் பிடித்து அவனை சமதானப் படுத்த முயன்றான்.

“நல்லா புரியுதே… சரயூ ரொம்ப நல்லவ… அவள் அத்தனை முறை சொல்லியும் கேட்காம நீ வேகமா வண்டிய ஓட்டியிருக்க… பின்னாடி பொண்ணு உட்கார்ந்தவுடனே நீ உலகத்தை மறந்து போனயோ.. இல்லை.. ஃபிலிம் காமிச்சியோ… ஒட்டுமொத்தத்துல என்னை இப்படி டேமேஜ் பண்ணியிருக்க.. தேங்க் காட்! சரயூக்கு ஒன்னுமில்லை” ஆதங்கத்துடன் பேசிய ரூபின் சரயூவைப் பார்த்து புன்னைகைத்தான்.  

“போதும் நிறுத்து ரூபின்! சஞ்சய் தான் சாரி சொல்லிட்டானில்லை.. அப்புறமும் நீ அவனைப் பற்றி தப்பா பேசறத பார்த்திட்டு என்னால சும்மாயிருக்க முடியாது…” என்று கோபத்தில் முகம் சிவக்க ரூபினின் முகத்தை கூர்ந்து பார்த்தபடி சீறினாள் சரயூ

இவளுக்கும் சேர்த்து தானே நான் பேசினேன்… இவள் ஏன் இப்படி என் மேலேயே கோப படுறா என்று குழம்பினான் ரூபின்.

“சஞ்சய் நிதானமா வண்டிய ஓட்டிகிட்டு இருந்தான்… நான் தான் த்ரில்லுக்காக ஆக்சலேட்டரை திருப்பி வேகத்தை ஏத்துனேன்… அவன் மேல தப்பே இல்லனாலும் ஜெய் உங்கிட்ட சாரி சொன்னான்… ஆனா.. நீ அவனை சீப்பா பேசுற” என்றவள் திரும்பி சுற்றும் முற்றும் எதையோ தேடினாள்.

அவள் சொன்னதை கேட்ட ரூபின் இப்போதோ இன்னும் குழம்பியவனாய் சஞ்சயைப் பார்த்தான்.

“உனக்கு தேவைதான்.. அய்யோ.. உன்மேல மோதிட்டோமேன்னு உனக்கும் மதிப்பு கொடுத்து சாரி சொன்னா.. எவ்வளவு பேசின… அவள் பேச்சு தான் உனக்கு சரிப்படும்” என்ற சஞ்சய் மெல்லிய குரலில் விசிலடித்தான்.

“என்ன தேடுற சரூ?”

“யாரை தேடுறேன்னு கேளு…” என்றபடி ரூபினைப் பார்த்தபடி ஜெய்யிடம், “சௌம்யாவை தேடுறேன்” என்றவள் தேடுதலை தொடர்ந்தாள்.

அய்யய்யோ! இவளெப்படி கண்டுபிடிச்சா? “சரயூ அவளை எதுக்கு நீ தேடுற? நான் வேணும்னா அவளைத் தேட உனக்கு ஹெல்ப் பண்ணவா? எனக்கு அடியெதுவும் படலை.. ஐ கேன் வாக்” என்று ரூபின் எழுந்து நின்று தன் கைகளை தூக்கி சுற்றியபடி இரண்டடி நடந்து “ஸீ ஐ ஆம் ஃபைன்” அசடு வழிந்தான் ரூபின்.

அப்படி வா வழிக்கு…இத்தோட நிறுத்தினா…என்னோட கெத்து குறைந்திடுமே, “நோ ரூபின்! நீயே வண்டி வேகமா உன் மேல மோதினதால ரொம்ப டையர்டாயிருப்ப… உனக்கெதுக்கு சௌம்யாவை தேடுற வேலை… நானே பார்த்துக்கிறேன்”

“ஹாய் சௌம்யா” தன் வலக்கையை உயர்த்தி ஆட்டினாள் சரயூ.

“சஞ்சய்….தப்பு என் மேல தான்! தயவு பண்ணி சரயூவை சௌம்யாகிட்ட எதுவும் சொல்ல வேணாம்னு சொல்லு” கெஞ்சினான் ரூபின்.

ஜெய் பதிலேதும் சொல்லாமல் எதையோ தீவிரமாய் யோசிப்பவன் போல் பாவனை செய்யவும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.