(Reading time: 10 - 19 minutes)

"வன் மாறிட்டான் தாத்தா!அவன் என் பரத் இல்லை.அவன்..."

"ஹனி!அவன் ஜென்மத்துல உன் பரத் ஆக முடியாது!"

"..............."

"கடந்த காலத்துல இருந்து வெளியே வா!அவன் போயிட்டான்.அவனைப் பற்றி யோசிக்காதே!"

"இல்லை தாத்தா!நான் எப்படி சொல்வேன்?"-அவள் தன் மன விருப்பத்தை கூறினாள்.

"என்ன வேணும்னாலும் இருக்கட்டும் செல்லம்!அவன் இனி உன் வாழ்க்கையில திரும்ப முடியாது!நான் விடவும் மாட்டேன்!"

"தாத்தா?"

"நீ இப்படி யோசிக்கிறது எனக்கு அதிசயமா இருக்கு!நீ உன் சுய மரியாதையை இழந்து உன் செத்துப் போன காதலை வாழ வைக்கப் போறீயா?"

"............"

"அவன் போயிட்டான்!உன் பரத் செத்துட்டான்!"-அவள் அதிர்ந்துப் போனாள்.

என்ன பேசுகிறார்கள் இவர்கள்??இது என்ன புதிய கசப்பான கடந்தக்காலம்?யார் இந்த பரத்???என்ன தவறிழைத்தான் அவன்???அவனிடமே கேட்கலாம்!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

னிமையில் ஏதோ சிந்தித்தப்படி அமர்ந்திருந்தான் ருத்ரா.மனம் தனது கடந்தக் காலத்தை அசைப்போட்டு கொண்டிருந்தது.

"ஓடாதே நில்லு!"

"முடிந்தால் பிடித்துக்கோ!"

"என்னால ஓட முடியலை!"

"அச்சசோ!அதுக்குள்ளே கிழவி ஆயிட்டியா?"

"உன்னை..டேய் பரத்!ஓடாதே!நில்லு!"-அவன் தன் கண்களை இறுக மூடினான்.அதிலிருந்து நீர் திவலைகள் அவன் கன்னத்தை நனைத்தன.

பரத்...ஆம்...!அவள் மட்டும் தான் அவ்வாறு அழைப்பாள்.அவளது முழு நாமம் ருத்ர பரத்!!அவனது அடங்காத கர்வத்தை முதன்முறையாக தன் காதலின் மூலம் அடக்கி மண்டியிட வைத்த கன்னிகை அவள் தான்!!

முதன்முதலில் அவளை சந்தித்த இடம்,சாலை தான்!!

6 வருடங்களுக்கு முன்,கைப்பேசியில் உரையாடியப்படி தன் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தவன்,அறியாமல் எதிரில் இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி அதை கீழே தள்ளினாள்.

அப்போது சண்டைப்பிடிக்க வந்தவள் தான் அவள்.சற்றும் இடை விடாமல் அவளது ஏசல்கள் அனைத்தும் ஒரு செவி வழியாக ஒரு பக்கம் செல்ல,மறுபக்கம் மற்றொரு செவி அதனை காற்றில் பறக்கவிட்டு கொண்டிருந்தது.இதுவரை எவரும் அவன் முன் குரல் உயர்த்தியதில்லை.உயர்த்த எண்ணினாலும் அவன் அதற்கு அனுமதித்து இல்லை.அன்று காற்றில் அலைந்துக் கொண்டிருந்த அவளது கேசம் அவனது கவனத்தை வெகுவாக ஈர்த்தது.அதன் ராகத்திற்கு தாளமிடுவதாக அமைந்தது அவளது காதணியின் நர்த்தனம்!கோபம் தலைக்கேற அவளது கூர்மையான நாசி சிவந்துப் போனது.அழகிய விழிகள் தீக்கனலை கக்கி கொண்டிருப்பதை கண்டவன்,மெல்லியதாக புன்னகை பூத்தான்.

"ஏன்யா!நான் உன்னிடம் தான் பேசுறேன்!பேசக்கூட இல்லை,திட்டி தீர்க்கிறேன்!ஆனா,நீ சிரிக்கிற?"-அவளது ஆக்ரோஷத்தில் கலைந்தவன்,

"ஐ...ஐ ஆம் ஸாரி மிஸ்!நான் கவனிக்கலை!நான் வேணும்னா அதுக்கு ப்பே பண்ணிடுறேன்!"-அதைக் கேட்டவள்,இன்னும் கொலைவெறி ஆனாள்.

"அது உன் காரா?"

"ம்..."

"நீயே வாங்கினதா?"

"ஆமா!ஏன்?"-கீழே குனிந்து எதையோ தேடியவள்,ஒரு கட்டையை எடுத்து,அதன் கண்ணாடியை உடைத்து சுக்கலாக்கினாள்.

"ஏ...என்ன பண்ற நீ?"

"நான் வேணும்னா அதுக்கு ப்பே பண்ணிடுறேன் மிஸ்டர்!"-அவன் அவளை உற்றுப் பார்த்தான்.

"உயிரில்லைனாலும் சில விஷயங்களுக்கு விலை நிர்ணயிக்க முடியாது மிஸ்டர்!பணத்தால எதையும் வாங்கலாம்னு நினைக்காதே!ஸாரி..எனக்கு உன் மேலே கோபம்!உன் காருக்கும்,எனக்கும் எந்தப் பகையும் இல்லை!"-என்றவள் தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

அவள் செல்வதையே அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தவன் தன் காரை திரும்பி பார்த்தான்.

"உன்னை நான் தான் வாங்கினேன்ல!அதுவும் முதல்முறையா நானா வாங்கினேன்!இத்தனை நாள் ஏன் உன்னை கவனிக்கலை!"-என்றான்.

"ஷி இஸ் சம்திங் டிப்ரண்ட்!"-என்றவன் புன்னகைத்தப்படி அங்கிருந்து கிளம்பினான்.

தன் பின்,அவர்களின் அடுத்த சந்திப்பு காப்பி ஷாப்பில் அமைந்தது.

"என்னடி?என்ன உனக்கு பிரச்சனை?"-வெறுப்பாக கேட்டாள் கீதா.

ஆராத்யா நிமிர்ந்து அவனை பார்த்தாள்.அவன்...வருண்!!அனு மற்றும் கௌதம் தம்பதியரின் புதல்வன்!!

"உனக்கென்னடா பிரச்சனை?"-(வருண் கீதாவை விடவும் சில மாதங்கள் வயதில் சிறியவன்)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.