(Reading time: 10 - 19 minutes)

"கீதா!அது வந்து!"

"எப்படி இரண்டு பேரும் லவ் பண்ணீங்க?2 பேருக்கும் ஒத்துப்போகாதே!"

"அதனால தான் லவ் ஆயிடுச்சு கீதா!"

"சரி இதை ஏன் என்னிடம் சொல்றீங்க?"

"நீ சொன்னாதான்கா எல்லாரும் கேட்பாங்க!"

"அடிப்பாவி...எப்படி கோர்த்துவிடுற?நான் பேச மாட்டேன்!"

"அக்காக்கா ப்ளீஸ்!"

"ப்ளீஸ் கீதா!என்னால இந்த ராட்சஸி இல்லாம வாழ முடியாது!"

"டேய்!நான் உனக்கு ராட்சஸியா?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"ஆமாம்டி!அதுக்கென்ன இப்போ?"

"உன்னை..."

"ஏ..ஏ...காப்பி ஷாப்!வீடில்லை!"-இருவரும் அமைதியாயினர்.

"வருண்!நான் சொன்னா கேட்பியா?""

"ம்..."

"முதல்ல நல்லா படித்து!ஒரு நல்ல நிலைமைக்கு வா!உன்னால உன் அப்பாக்கு அடையாளம் கிடைக்கிற நிலைமை வர வரைக்கும் வெயிட் பண்ணு!அப்பறம்,தைரியமா வந்து அப்பாக்கிட்ட பேசு!""

"ஆனா!"

"என்ன?"

"வீட்டில சம்மதிக்கலைன்னா?"

"சம்மதிக்க வைக்கிற திறமை உன்னுடையது!அதுவரைக்கும் பொறுத்திருங்க!"

"ம்...அதுவரைக்கும்!"

"லவ் பண்ணுங்க!"

"அக்கா?"

"என்ன?லவ் பண்ணுங்க!இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பற்றி நல்லா புரிந்துக்கோங்க!அட்ஜஸ்ட் பண்ணிக்க கற்றுக்கோங்க!அதுக்கு டைம் சரியா இருக்கும்!"

"நீ சொல்றதும் சரி தான்!தேங்க்யூ கீதா!"-அவள் புன்னகைத்தாள்.

"ஓ.கே.எனக்கு செமினார் இருக்கு!நான் போய் பிரிப்பேர் பண்ணணும்!வரேன்!ஏ..வரேன்டி!"

"சரிதான் போடா!"-அவன் புன்னகைத்தப்படி சென்றுவிட்டான்.

"அக்கா!நான் கூட லைப்ரரிக்கு கிளம்புறேன்!"

"ஓய்!"

"என்னக்கா?"

"எப்போ இருந்து இந்தப் பழக்கம்?"-தனது கைப்பேசியை ஆராய்ந்தப்படி கேட்டாள்.

"எந்த பழக்கம்?"

"ஊர் சுற்றுகிற பழக்கம்?"

"என்னக்கா?லைப்ரரிக்கு தானே போறேன்?"

"நான் இதை நம்பணும்?லைப்ரரிக்கு போற மூஞ்சியை பாரு!இங்கே பாரு...இது சரியான பழக்கம் இல்லை!நேரா வீட்டுக்கு கிளம்பு!"

"அக்கா!"

"போகலைன்னா,அப்பாக்கு போன் பண்ணிடுவேன்!'

"போறேன்கா!"

"ம்..."-அவள் முகத்தை தொங்கவிட்டப்படி சென்றாள்.நடந்தவற்றை கவனித்துக் கொண்டிருந்தவன்,தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளருகே வந்தமர்ந்தான்.

"ஹாய்!"

"ஹலோ!"-முதலில் அவள் அவனை கவனிக்கவில்லை.பின்,

"நீயா?"என்றாள்.

"ஓ..கோபம் போகலையா?அதான் என் கார் கண்ணாடியை உடைத்துவிட்டீங்களே!இன்னுமா கோபம்?"-அவள் தன் கன்னத்தில் கை வைத்தாள்.

"ப்ச்..அன்னிக்கு கொஞ்சம் ஓவரா பண்ணிட்டேன்ல!அது ஒண்ணுமில்லை!முதல்முறையா வாங்கின வண்டியா,சென்ட்டிமண்ட் அதான் டென்ஷன் ஆகிட்டேன்!"-அவளது பழகும் விதம் அவனை வெகுவாக ஈர்த்தது.

"உங்க வண்டி உயிரோட இருக்கா?"

"அதுக்கு என்னை மாதிரி எதையும் தாங்கும் இதயம்!நல்லாவே இருக்கு!"

"ஓ..தட்ஸ் கிரேட்!"

"ஸோ..2 முறை மீட் பண்ணிட்டோம்!பெயர் தெரியலையே!"

"ஆ..."

"என் பெயர் ருத்ரா!ருத்ர பரத்!"

"கீதா!"-இருவரும் கை குலுக்கினர்.

"சரிங்க!எனக்கு டைம் ஆயிடுச்சு!நான் கிளம்புறேன்!"

"ஓ.கே.!"-அவள் எழுந்தாள்.

"ம்..ஒரு சின்ன காம்ப்ளிமண்ட்!நான் எதையும் மனசுல வைத்துக் கொள்ள மாட்டேன் அதான்,தப்பா நினைக்காதீங்க!"

"பரவாயில்லை சொல்லுங்க!"

"உங்களுக்கு அந்த ருத்ராங்கிற பெயரை விட,பரத் என்ற பெயர் தான் பொருத்தமா இருக்கு!நான் இனி அப்படியே கூப்பிடுறேன்.பாய் பரத்!"-அவனது முகம் மலர்ந்தது!யாவரும் தன்னை சுற்றி ஒரு வட்டமிட்ட சமயத்தில்,அதை உடைத்தவள் அவள் தான்.

"அப்பா!"-அருகே தன் புதல்வனின் குரல் கேட்க,கண்ணீரை துடைத்துக் கொண்டான் அவன்.

"என்ன விஷ்வா?"

"தூக்கம் வருதுப்பா!"

"வா!தூங்கலாம்!"-தனது புதல்வனை வாரி அணைத்துக் கொண்டு சென்றான் ருத்ரா.இனி அவனது பரந்த உலகம் எல்லாம் அவன் ஒருவனாகி போனதில் ஐயம் ஏதுமில்லை.

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1070}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.