(Reading time: 9 - 17 minutes)

ஹேய்.. சூப்பர்.. அப்படியே கூப்பிடு.. “ என்றவன் சற்று நேரம் தங்கள் நேசம் மலர்ந்த விதத்தை பேசி மகிழ்ந்தார்கள்.

அப்போது “ரகு , உங்களை பத்தி எதுவும் சொல்லலேயே.? உங்க வீட்லே நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்களா?”

“ஹேய்.. எங்கள் வீட்டில் நான் ஒரே பையன்தான். அப்பா , அம்மா ரெண்டு பேரும் professor.. அப்பா ஊரில் கொஞ்சம் செல்வாக்கான குடும்பம்.. அதுனாலே கொஞ்சம் சொத்துக்கள் உண்டு.. மத்தபடி ரெண்டு பேரும் என்னோட விருப்பத்துக்குதான் சம்மதிப்பாங்க.. அதுனாலே நம்ம வீட்டில் எந்த பிரச்சினையும் வராது.. உங்க வீட்டில் எப்படி..?”

“எனக்கு தெரிஞ்சு எங்க வீட்டிலேயும் அப்பா என் விருப்பத்துக்கு நிச்சயம் மதிப்பு கொடுப்பாங்க.. அதுனாலே எந்த கவலையும் இல்ல.. ஆனால் என்னன்னா கல்யாணம் சீக்கிரம் வைக்கனும்னு சொல்வாங்களோன்னு தோணுது..”

“ஹேய்.. நிஷு டார்லிங்.. இந்த ஒரு விஷயம் மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகோடா.. நான் இந்த மூணு வருஷம் பார்டர் சர்வீஸ் நிச்சயம் நல்லபடியா முடிச்சுட்டு வருவேன்னு நம்பிக்கை இருக்கு.. அது வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுடா..”

“கண்டிப்பா ரகு.. உங்களுக்காக வெயிட் பண்ணுவேன்.. அதே சமயம் உங்கள் force பண்ணவும் மாட்டேன்.. நீங்க கவலைபடாதீங்க..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“தேங்க்ஸ் டா செல்லம்.. இது போதும் “ என்றவன், “நான் அங்கே டுட்டி join பண்ண பிறகு என்னோட position பார்த்துட்டு உனக்கு அப்போ அப்போ பேசுறேன்... முடிஞ்சவரை மெசேஜ் அனுப்புறேன் .. இங்கே ஊருக்கு போற வரைக்கும் டெய்லி பேசுவேன்.. நீ பேசணும் ..சரியா?” என,

நிஷாவும் “சரி ரகு “ என்றாள்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, அர்ஜுன், சுறா இருவரும் வந்தனர். கொஞ்சநேரம் நிஷா, ராகுல் ஐ ஒட்டியபடி அவர்களுக்காக வாங்கி வந்து இருந்த breakfast நால்வரும் சாப்பிட்டனர்.

பின் நாலு பேரும் கதை பேசியபடி சென்னையை எதிர்நோக்கி காத்து இருந்தனர்.

மழை பொழியும்

Episode 19

Episode 21

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.