(Reading time: 17 - 33 minutes)

ரவாயில்லை ராகுல்! இப்போ தெரிஞ்சிக்கோ….இவள் என் ஃப்ரெண்ட், மைத்ரீ.  இவன் என் அண்ணன் ராகுல்” என்று இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள் சரயூ.

நாகரீகம் கருதி “ஹலோ!” என்றாள் மைத்ரீ.  அவளின் கோபம் இன்னும் குறைந்திருக்கவில்லை என்பதை அவளின் ‘ஹலோ’ தெளிவாக பிரதிபலித்தது.

“இன்னும் கோபம் போகலயா? சாரி மைத்ரீ! சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி பேசினேன்” என்றான் ராகுல் வருந்தும் தொனியில்.

“ம்..” என்றதோடு நிறுத்தி கொண்டாள் மைத்ரீ.

மைத்ரீயின் பதிலினால் ராகுலின் முகம் சற்று வாடியது.  தோழியின் கோபத்தை அறிந்தவன் நிலைமையை சமாளிக்க ஜெய்…

“எப்படியிருக்கீங்க பாஸ்?” என்று ராகுலின் கையைக் குலுக்கினான்.

“நல்லாயிருக்கேன் சஞ்சய்… நீ எப்படியிருக்கன்னு நான் கேட்கமாட்டேன்.. சரயூ உன்னை பற்றி பேசாத நாளே கிடையாது.. இன்னைக்கும் அப்படி தான் காலேஜ் லூட்டி, காலையில உங்க மூன்று பேரோட ஷாப்பிங்க் பற்றி சொல்லிட்டிருந்தா.. அதுக்குள்ள…” என்று பேச்சை நிறுத்தியவன் மைத்ரீயை கண்களால் சுட்டிக் காட்டினான்.

“நான் பார்த்துக்கிறேன்” மைத்ரீக்கு எட்டாதபடி மெல்லிய குரலில் சொன்னான் சஞ்சய்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

மைத்ரீக்கு இங்கு நடப்பது எதுவுமே பிடிக்கவில்லை.  ‘என்னை சும்மாவே வம்பிழுத்துட்டு இப்போ சாரி சொல்லிட்டா அவன் செய்ததெல்லாம் சரியாகிடுமா? சரயூவோட ஃப்ரெண்டுன்னு தெரியாம எங்கிட்ட பிரச்சனை செய்தானாமே! தங்கையோட ஃப்ரெண்டில்லைனா இவன் செய்ததெல்லாம் சரின்னு சொல்வானாமா? வர வர ஜெய்க்கு அறிவேயில்லாம போச்சு.. இந்த ராகுலை நாலு கேள்வி கேட்காமா, அவங்கூட சேர்ந்து சிரிச்சிட்டு நிக்கிறான்.  எத்தனை பொண்ணுங்களை எப்படியெல்லாம் காய்ச்சினானோ? சரயூ முன்னாடி மாட்டிக்கவும் சமாளிக்கிறான்.  ஹேண்ட்சம்மா இருக்க திமிரு.  பொண்ணுங்களையெல்லாம் டீஸ் பண்ணிட்டிருக்கான்.  இவனை அடிச்சு தொவைக்க ஒரே ஒரு சான்ஸ் கொடு கடவுளே!’ என்று இன்ஸ்டண்டாய் கடவுளிடத்தில் வரம் வேண்டினாள் மைத்ரீ.

அவளை மேலும் தொடரவிடாது குறுக்கிட்டாள் சரயூ, “ராகுலோட ஷாப்பிங்க் நானில்லாமல் நடக்காது.. சோ நான் அவனோட வந்தேன்.  நீங்க ரெண்டு பேரும் ஏதாவது காலையில வாங்க மறந்திட்டீங்களா என்ன? மறுபடியும் வந்திருக்கீங்க?”

ராகுலின் மேல் இருந்த கோபம் சற்றும் குறையாமல் இருந்தவளிடம் சரயூவின் இந்த கேள்வி மைத்ரீ ஏன் அங்கு வந்தாள் என்பதை நினைவூட்டவும்

“ஆமா சரயூ! ஜெய் தான் நந்தி வாங்க என்னை கூப்பிட்டு வந்தான்”

“என்னது! நந்தியா?”

“ம்… அவனையே கேளு”

“சஞ்சு! இங்கே நந்தி எங்கே கிடைக்கும்? எதுக்காக அதை வாங்குற?” என்றவளின் குரல் அவள் ஒரு ஆர்வக்கோளாரு என்பதை சொல்லாமல் சொன்னது.

“மைதி சொல்லலையா?!”

“ப்ச்ச்ச்…இல்லை! உன்னைதான் கேட்க சொன்னா”

“அதை பத்தி சொல்லாமலா? அது ஒரு பெரிய கதை சரூ! எல்லாரும் வாங்க ஃபூட் கோர்ட்டில் ஆராமர நந்தி கதையை சொல்லுறேன்” என்றான் ஜெய், மைத்ரீயை ஓரக் காண்ணால் பார்த்தபடி.

மைத்ரீயின் கோபம் சற்றும் குறையவில்லை என்பது அவனுக்கு புரிந்ததால் ‘நீதான் நந்தின்னு சொல்லிடுவேன்’ என்று மறைமுகமாக மைத்ரீக்கு தெரியபடுத்தினான்.  அவளோ இவனின் மிரட்டலுக்கு அசைந்து கொடுக்கவில்லை.

அவரருக்கு வேண்டியவைகளை வாங்கி கொண்டு ஃபூட் கோர்ட்டிலிருந்த டேபள்களில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.  மைத்ரீயின் கோபம் சற்றும் குறையாததால் தனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம் என்று விட்டு அவளுடைய ஃபோனை குடைந்து கொண்டிருந்தாள். 

“சஞ்சு! நந்தி பற்றி சொல்லுறன்னு சொன்னையே…” ஆர்வத்தை அடக்க முடியாதவளாய் சரயூ கேட்கவும்.. சட்டென நிமிர்ந்து ஜெய்யை முறைத்தாள் மைத்ரீ.

அவளின் செயலை கவனித்த ஜெய் பதிலேதும் சொல்லாமல் அமைதியாய் சாப்பிடுவதை தொடர்ந்தான்.

“சஞ்சு….” என்றாள் பொறுமையிழந்த சரயூ.

“சரூ! நந்தியை பற்றி முழுசா மைத்ரீக்கு தான் தெரியும்.  அதுமில்லாம நந்தியை பற்றி நான் பேசனும்னா… அது மைதி அனுமதிச்சா தான் நடக்கும்” மைத்ரீயின் முகத்தை ஆராய்ந்தான்.

அவளின் முகத்திலிருந்த கோவம் சற்று குறைந்தது.  ‘ஹப்பா…என்னோட மானத்தை வாங்காம விட்டானே.. சரயூ மட்டும்னா கூட சொல்லியிருக்கலாம்.. அவளோட அண்ண நொண்ணன்னு ஒருத்த இருக்கானே… அவனை….’ என்று மறுபடியும் ராகுலை மனதினில் முடிந்தளவு அர்ச்சித்தாள் மைத்ரீ.

“நந்தி பற்றி இப்போ தெரியலைனா என்னோட தலையே வெடிச்சிடும்… அது என்னன்னு சொல்லு மைதி ப்ளீஸ்” என்றபடி மைத்ரீயின் கையை பிடித்து கெஞ்சினாள் சரயூ.

மைத்ரீ என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தபடி ஜெய்யை பார்க்கவும் அவனோ ‘நான் செய்ய எதுவுமில்லை.. நீயாச்சு.. அவளாச்சு’ என்று சைகை செய்தான். மைத்ரீ அவனை முறைக்கவும், சரயூ அதை கவனித்துவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.