(Reading time: 11 - 21 minutes)

பெரும்பாலும் அவன் அப்பாவை தான் ஓட்டுவார்கள். அவரும் அவர்களுக்கு ஈடு கொடுப்பார். ஆனால் இவன் ஆர்மி சென்ற பிறகு, அப்பாவின் வேலையும் நேர கணக்கில்லாத வேலை என்பதால் அவன் அம்மா பேச யாரும் இல்லாமல் தவிக்க ஆரம்பித்து விட்டார், இதை உணர்ந்து கொண்ட இருவரும் தாங்களாகவே அவ்வப்போது சண்டை இட்டுக் கொண்டு அவன் அம்மாவை சிரிக்க வைப்பார்கள்.

அதோடு அவனுக்கு ஆர்மி என்பதால், கட்டுப்பாடுகள் அதிகம் என்று சற்று யோசித்து பேசுவான். அது இயல்புக்கு வராமல் ரொம்ப கஷ்டப்பட்டவன். அதனாலே தான் சுபத்ராவின் குணமறிந்து அவ்வப்போது அவளை பேச விடுவான்.

இதை எல்லாம் யோசித்துக் கொண்டே வந்தவனின் நினைவுகள், அவனின் குட்டிம்மாவான சுராவிடம் சென்றது. அவள் இப்போது என்ன செய்து கொண்டு இருப்பாள்.?

இரு நாயகர்களின் நினைவுகளும், அவர்களின் நாயகிகளின் வசம் இருக்க, நாயகிகள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அங்கே சுராவின் வீட்டிற்கு முதலில் சென்றவர்கள், வாயிலில் காத்து இருந்த தன் அன்னையை கண்டவுடன்

“ஹாய். ருக்கு டார்லிங்.. உன்னை பார்க்காமல் ஏங்கி தவித்து போயிட்டேன்.. டியர்..” என்று வசனம் பேச ஆரம்பித்தாள்.

அவளை உள்ளே அழைத்து சென்ற ருக்மணி “ஹேய்.. நானும் உன்னை பார்க்காமல் ரொம்ப தவிச்சுட்டேன் சுபாம்மா.. எப்படி இருக்கிறாய்? “ அதற்குள் நிஷாவை கண்டவர் “வாம்மா நிஷா.. எப்படி இருக்க?” என்று அவளையும் விசாரித்தார்.

“நான் நல்லா இருக்கேன் ஆன்டி.. “ என்றவள் தன் அன்னையிடம் சென்று அமர்ந்து கொண்டாள்.

ருக்மணி “சுபா, நிஷா அம்மாவை வாங்கன்னு கூப்பிட்டியா? “ என்று கேட்க,

“அக்கா .. நமக்குள் என்ன.. ? சுபத்ரா எப்படிம்மா இருக்க?” என்று வினவினார்.

“சாரி ஆன்டி.. அம்மாவை பார்த்த சந்தோஷத்திலே உங்கள கவனிக்கல.. நீங்க எப்படி இருக்கீங்க..?” என்று முறைப்படி விசாரித்தாள்.

அதற்குள் வருண், மகிமா இருவரும் “அச்சோ.. மழை வரபோகுது.. ஆன்டி சொல்லி .. சுறா கேட்டுட்டா.. “ என்று இருவரும் hifi கொடுக்க, சுராவோ அவர்கள் இருவரையும் துரத்த ஆரம்பித்தாள்.

அவள் அம்மா “சுபா.. வந்தவுடன் ஆரம்பிச்சுட்டியா? போம்மா.. போய் முகம் கழுவிட்டு வா.. சூடா குடிக்க தரேன்.. நிஷா நீயும் போய் பிரெஷ் ஆகிட்டு வாம்மா” என்றவுடன்,

“அம்மா.. காலையில் என்ன டிபன்..?”

அவர் வேண்டுமென்றே “சப்பாத்தியும் டாலும் “ என,

“அம்மா.. வேண்டாம்.. ஒரு வருஷமா அத தின்னு நாக்கு செத்து போய் வந்துருக்கேன்.. நான் இங்கிருந்து கிளம்பற வரைக்கும் நோ சப்பாத்தி.. நோ ரொட்டி.. நோ நோ .. டால் சொல்ல்ட்டேன்.. “ என்று ஆர்டர் போட்டு விட்டு போனாள்.

அவள் பேச்சை கேட்டு சிரித்தவர்கள் , அவள் வந்து அமரவும் எல்லோரும் பேசிக் கொண்டு இருந்தனர்.

வெகு நேரம் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர்.. சுபத்ராவிற்கு கண்ணில் தூக்கம் வழிந்தாலும் , வெகு நாள் கழித்து எல்லோரையும் பார்த்தது அவளின் ஆர்வத்தை தூண்டிவிட்டது. ஆனால் அவளின் பேச்சு முழுதும் ஆர்மி ட்ரைனிங் கேம்ப் சுத்தியே இருந்தது. மற்ற யாரும் அதை பெரிய அளவில் கவனிக்கவில்லை , ஆனால் வருணுக்கு ஏதோ வித்தியாசமா தோன்றியது. அது என்ன என்று பிறகு யோசிக்கலாம் என்று எண்ணி விட்டு விட்டான்.

பிரேக் பாஸ்ட் நேரத்தில் சரியாக ஆஜர் ஆன சுறா, என்ன மெனு என்று பார்த்தவள், துள்ளிக் குதித்தாள். அவளுக்கு மிகவும் பிடித்த நிறைய முந்திரி பருப்பு போட்ட பொங்கல், சட்னி சாம்பார், அதோட ரவா தோசை சட்னி.. இதில் வடை வேறு தனி. அவள் அம்மாவை கட்டி பிடித்து முத்தமிட்டவள், எல்லாவற்றையும் ஒரு வெட்டு வெட்டினாள்.

சாப்பிட்டு முடித்து தூக்கம் வருவதாக சொல்லி தன் அறைக்கு சென்றாள். வருண், மகிமாவும் தங்கள் வீட்டிற்கு சென்று சாயங்காலம் வருவதாக கூறி விடை பெற்றனர்.

நிஷாவையும் தன்னோடு ரெஸ்ட் எடுக்க அழைத்து சென்றவள், தங்கள் அறைக்கு சென்ற பின்.

“நிஷா.. இந்நேரம் நம்ம கேப்டன் மட்டும் இருக்கணும்.. இப்படி சாப்பிட்டத பார்த்து இருந்தார்னா கிரௌண்ட் சுத்தி  பத்து தடவை ஓட விட்டு இருப்பார் இல்ல. “ என்று கேட்க,

நிஷாவோ எல்லோரிடமும் கலகலப்பாக பேசிக் கொண்டு இருந்தாலும், அதிலும் சுராவின் அமர்க்களம் பார்த்து சிரித்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் உள்ளூர ராகுல் பற்றிய சிந்தனையே ஓடியது..

இப்போ சுறா ஆர்மி கேம்ப் நினைவு படுத்தவும், அவள் கேப்டன் என்று சொன்னதை கவனிக்காமல்.

“ஹ்ம்ம். இல்லடி.. ரகு அப்படி எல்லாம் செய்ய மாட்டார் “ என,

நிஷாவை பிடித்து உலுக்கிய சுறா

“அடியேய்.. உனக்கு காதல் பைத்தியம் முத்தி போயட்டதுடி.. நான் கேப்டன் ன்னு சொன்னது நம்ம அர்ஜுன் சார்.. புரியுதா ?” என,

அப்போதுதான் சுதாரித்த நிஷா,

“ஹேய் .. ரொம்ப ஓட்டாதடி .. நான் என்னவோ அவர பத்தி நினைப்புலே ஏதோ பேசிட்டேன்.. “

“அது சரி.. நீ இனிமேல் ஒரு மார்க்கம்தான் சுத்துவே.. “ என்றபடி அவளை கேலி செய்ய, அவளை முறைத்த நிஷா, பிறகு சண்டையை கைவிட்டு இருவரும் பேசி சிரித்தபடி தூங்க சென்றனர்.

ஆனால் நிஷாவை கேலி செய்த சுறா, இப்போ எதுக்கு அவளுக்கு அர்ஜுன் பற்றிய சிந்தனை வந்தது .. என்பதை யோசிக்கவே இல்லை.. அவளுக்கு எப்போதுதான் பல்பு எரியுமோ..?

மழை பொழியும்

Episode 21

Episode 23

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.