(Reading time: 13 - 26 minutes)

08. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

ஸ்கேரி ஹௌஸ் போகும் உறுதியோடு மைத்ரீயை வந்தடைந்தாள் சரயூ. 

“மைதி, அவங்க இன்னும் வரலையா?”

“ம்ஹீம்… இன்னுமில்லை!” என்றபடி ஜெய் எங்காவது தென்படுகிறானா என சுற்றிப் பார்த்தாள்.  அவளை தொடர்ந்து சரயூவும் கண்களை சுழல விடவும் சிறிது நேரமாக அவளை பின்தொடர்ந்தவன் அவசரமாக அங்கிருந்த ஒரு தூணின் பின்னால் மறைந்து கொண்டான்.

மைத்ரீ, ஜெய்யை அழைத்து, “எங்க இருக்க? எவ்வளவு நேரம் காத்திட்டிருக்கறது?” என்று பொரிந்தாள்.

அதற்குள் அந்த தளத்திற்கு வந்திருந்த ஜெய், “கூல் மைதி…கூல்… நாங்க வந்திட்டோம்”

நம்பிக்கையின்மையை தன் பெருமூச்சின் மூலம் வெளிபடுத்தினாள்.

“மைதி, நீ என்னை நம்பலாம்! கொஞ்சம் உன் பின்னாடி திரும்பி பாரேன்”

ராகுலும் ஜெய்யும் அங்கு வந்துகொண்டிருந்தனர். 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

ராகுல் அவளைப் பார்த்ததும் மெலிதாக நகைத்தான்.  ‘இவன் எதுக்கு சிரிக்கிறான்? எவ்வளவு தைரியம் இவனுக்கு? நீ மட்டும் தனியா எங்கிட்ட மாட்டின…உன்னை என்ன பண்ணுவேன்னே தெரியாது’ சிறிது நேரம் மறைந்திருந்த மைத்ரீயின் கோபம் மறுபடியும் தலையெடுத்தது.  ராகுலை மனதினுள் திட்டியபடி தன் கற்பனையில் அவனை துவைத்தெடுத்தாள்.  துணியை சலவை கல்லின் மீது அடித்து துவைப்பது போல் ராகுலின் இரு கால்களையும் பிடித்து துவைத்து மகிழ்ச்சியடைந்தாள்.  அது அவளின் முகத்தில் பிரதிபலித்தது.

“என்ன ரகசியமா சிரிக்கிற, மைதி?” என்று ஜெய் அவளுக்கு வெகு அருகில் வந்து கேட்கவும் அதிர்ந்த மைத்ரீ ‘அய்யோ! ஜெய் பார்த்துட்டானே! என்ன நினைச்சன்னு கேட்ப்பானே…’ ஜெய்யைப் பார்த்து திரு திருவென முழித்தாள்.

“இப்போ எதுக்கு இந்த திருட்டு முழி முழிக்கிற? ராகுலை தானே ஏதோ பண்ணின?” ‘உன்னை எனக்கு தெரியாதா?’ என்ற செய்தியை தாங்கிய புன்னகையை சிந்தினான் ஜெய்.

ராகுலும் சரயூவும் ஏதோ பேசிக்கொண்டிருப்பதை கவனித்த மைத்ரீ, தலையை மேலும் கீழுமாக அசைத்து அவனை ஆமோதித்தாள்.  இப்போது அவள் முகத்தில் குறும்பு சிரிப்பு குடியேறியிருந்தது.

அவளின் சிரிப்பை ரசித்த ஜெய், “ராகுலை என்ன பண்ணின மைதி?” ஆர்வமாக கேட்கவும்

ராகுலை பார்த்தபடி “அவனோட கால் ரெண்டையும் பிடிச்சு சலவை கல்லு மேல அடிச்சு துவைச்சி புழிஞ்சிட்டல்ல” என்று மிகவும் பெருமையாக கூறிச் சிரித்தாள்.

அவள் சொன்னதை கற்பனை செய்த ஜெய்யும் அடக்க முடியாமல் வெடித்து சிரித்தான்.

ஜெய்யின் சிரிப்பு சத்தம் ராகுல் மற்றும் சரயூவின் கவனத்தை ஈர்த்தது.  மைத்ரீ பதட்டமானாள்… ரகசிய குரலில் “எரும! எதுக்குடா இப்படி சத்தமா சிரிச்சு தொலையற? போச்சு எல்லா போச்சு… சரயூ, இப்ப வந்து என்னன்னு கேட்கப்போறா….” அவள் முகம் போன போக்கில் ஜெய் சிரிப்பை நிறுத்த முடியாமல் கஷ்டபட்டான்.

பாவம் ஜெய்! விதி அவனைப் பார்த்து சிரிப்பதை அறியாது சிரித்துகொண்டிருந்தான்.  இந்த சிரிப்பினால் தன் வாழ்வில் ஏற்பட போகும் விளைவுகளும் வலிகளும் தெரிந்திருந்தால் அவன் நிச்சயமாக சிரித்திருக்கமாட்டான். 

‘இந்த லூசு ஏன் இப்படி சிரிக்கிறான்? இப்படியே போனா இவனை தான் முதலில் துவைக்கனும்’ என்று நினைத்தவள் அதை கற்பனை கண்டவள் சிரிக்க ஆரம்பித்தாள்.

மைத்ரீயின் சிரிப்பை கேட்ட ஜெய் சிரிப்பினூடே “நீ எதுக்கு சிரிக்கிற மைதி?”

“மறுபடியும் துவைச்சனே” முகத்தில் குறும்பு கொப்பளிக்க சிரிப்பை தொடர்ந்தாள்.

“போதும் மைதி! எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது…ராகுலும் பாவம்”

“ராகுலுக்கு ஏன் பாவபடற ஜெய்? உன்னை நான் துவைச்சா… ராகுல் தான் உன்னை பார்த்து பாவபடனும்”

“இது முதலுக்கே மோசம்…. போதும் நிறுத்திரு மைதி… நான் ரொம்ப பாவம்”

“நான் நிறுத்தனும்னா…. இப்போ சரயூ, எதுக்கு சிரிச்சீங்கன்னு கேட்டாள்னா எதையாவது சொல்லி சமாளி இல்லைனா வீட்டுக்கு போனதும் உன்னை நிஜத்துல துவைச்சிடுவேன்… எப்படி வசதி?” தீவிரமான முகத்தோடு மைத்ரீ சொல்லவும்

“என்னடா இது… வம்பா போச்சு…. சரி! நான் சமாளிக்கிறேன்”

மைத்ரீ நினைத்ததை உண்மையாக்கும்படி சரயூ இவர்களின் அருகில் வந்து, “எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க? என்னன்னு சொன்னா.. நாங்களும் கூட சேர்ந்து சிரிப்போமே”

அது தெரிஞ்சா… நீ சிரிக்கமாட்ட சரூ! கடைசில நீதான் எங்களை துவைச்சறுவ என்று நினைத்தபடி மைத்ரீயும் ஜெய்யும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

பதிலேதும் சொல்லாமல் இருவரும் அமைதியாக சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருக்கவும்… சரயூ அவர்களை முறைத்தாள்…

மைதியை பார்த்தபடி, “காம் டௌன் சரூ! அது ஒன்னுமில்லை…. நாங்க அந்த நந்தி விஷயத்தை பற்றி பேசிட்டிருந்தோம்” என்றான் ஜெய்.

மைத்ரீயின் முகத்திலிருந்த சிரிப்பு காணாமல் போனது.  ‘குரங்கே! என்னையா நந்தின்னு ஓட்டுற நீ… எனக்கு சான்ஸ் கிடைக்கும் போது உன் கதி அதோ கதி தான்’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.