(Reading time: 13 - 26 minutes)

ந்தி என்றதும் அவளின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை ராகுல் கவனித்துவிட்டான்.  ஜெய்யும் அதை கவனிக்க தவறவில்லை.

உடனடியாக பேச்சை மாற்றிய ஜெய், “ஸ்கேரி ஹௌஸ் போயிட்டு வந்து அதை பற்றி நீயே தெரிஞ்சுக்கப் போறயே சரூ! வாங்க எல்லாரும் உள்ளே போகலாம்” என்றபடி அவன் பெண்களிடமிருந்து தப்பித்து முன்னேறி ராகுலிடம் மாட்டினான்.

சற்று தள்ளி நின்று நடப்பதை கவனித்து கொண்டிருந்த ராகுல், ஜெய்யின் அருகில் வந்து மென்மையான குரலில், “உங்க ஃப்ரெண்டு என்னை பற்றி தானே ஏதோ சொல்லி சிரிச்சாங்க?” ஜெய்யின் முகத்தை தீவிரமாக ஆராய்ந்தான்.

‘எப்படி தெரிஞ்சது?’ என்ற ஆச்சரியத்தை ஜெய்யின் முகம் ஒரு நொடிக்கும் குறைவாக பிரதிபலித்து சட்டென்று மாறியது. 

ராகுல் தன் முகத்தை ஆராய்வதை உண்ர்ந்தவனாக, “என்ன பாஸ் நீங்க! இப்படியெல்லாம் கற்பனை பண்ணிக்கிட்டு… நாங்க நந்தி பற்றி பேசிட்டிருந்தோம்”

“அப்போ… உன் ஃப்ரெண்டை விட்டு கொடுக்கமாட்ட… அப்படிதானே சஞ்சய்?”

‘உண்மையை சொல்லமுடியாதே… சமாளி ஜெய்…’

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்..

“மூளைக்கு ரொம்ப வேலை கொடுக்காத சஞ்சய்.  புதுசா எதையாவது சொல்லி என்னை சமாளிக்கலாம்னு நினைக்காதே” ஊடுருவும் பார்வையை ஜெய்யின் மீது செலுத்தினான் ராகுல்.

“அது… அது வந்து….”

“பரவாயில்லை! நீ உண்மையை சொல்ல வேண்டாம்.  நானே கண்டுபிடிக்கிறேன்”

‘ஹப்பாடா… தப்பிச்சோம்’ என்று ஜெய் நினைக்கவும் அவனின் மனம், என்னத்தை தப்பிச்ச? மைத்ரீயும் நீயும் சிரிச்சதையே இப்படி தோன்டி துருவுனா… நீ சரூவை பார்க்கற பார்வை இவன் கண்ணுல பட்டுச்சு, உன்னோட சொல்லாத காதல்… சொல்லாமலே மறைஞ்சிடும் என்றது.  ஒரு காலமும் அப்படி நடக்க நான் விட மாட்டேன்.  என்னை பற்றி தெரிஞ்சிருந்தும் நீ பேசறது சரியில்லை என்று மனதுக்கு பதிலளித்தவன் தனக்குள் எழுந்த கோபத்தை அடக்கினான்.  சரூ மேல் எனக்கிருக்கும் காதல் என்னைக்கும் மறையாது என்று மனதிற்கு தன் காதலின் தீவிரத்தை நினைவூட்டினான்.

நால்வரும் சேர்ந்து ஸ்கேரி ஹௌஸ் நோக்கி நடந்தனர்.

ஜெய் மற்றும் மைத்ரீ, ஆதர்ஷை காஃபி ஷாப்பில் விட்டு சென்ற சிறிது நேரத்திலியே வந்து சேர்ந்தாள் ப்ரியா. 

பார்வையை சுற்றும் முற்றும் சுழலவிட்டபடி தயக்க நடையோடு வந்த பெண்ணைப் பார்த்ததும் ஆதர்ஷ் ‘அவளா?’ என்று நினைத்தபடி வடிவு சொன்ன அடையாளங்களை அவளோடு ஒப்பிட்டான்.

அவளையே கவனித்தபடி இவன் அமர்ந்திருக்க அவள் இவனை நோக்கி வந்து சற்று தயக்கத்தோடு, “எக்ஸ்க்யூஸ் மீ! ஆர் யூ ஆதர்ஷ்?”

“யெஸ் ப்ரியா! ஐ ம் ஆதர்ஷ்” சிறு புன்னகையோடு அவன் சொன்னான்.

சட்டென்று முகம் மலந்தவளாக அவனுக்கு எதிர்புறம் இருந்த நாற்காலில் உட்கார்ந்தாள் ப்ரியா.

“நான் தான் ப்ரியான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?”

“அம்மா சொன்ன அடையாளங்களோடு யாரையோ தேடிக்கிட்டு உள்ள வரவும் நீங்க தான் ப்ரியான்னு நினைச்சேன்”

‘நான் இவனை தான் தேடுறேன்னு தெரிஞ்சிருந்தும் சும்மா உட்கார்ந்துட்டு இருந்தானா?’ அவள் நினைப்பதை அவளின் முகம் பிரதிபலித்தது.

“நீங்க ப்ரியாவா இருக்கலாம்னு கெஸ் பண்ணினேன்.  ஆனால் நீங்க வேற யாராவதா இருந்தா? அப்படின்னு ஒரு யோசனை.  உங்களை எதிர்பார்த்திட்டு இருக்கும் போது வேற யாருக்கிட்டயாவது பேசி.. அவங்க ஏதாவது சொல்லி அதனால மூட் ஸ்பாயிலாக கூடாதுன்னு சும்மாயிருந்துட்டேன்”

‘போய் மீட் பண்ணுன்னு சொல்லி அனுப்பிச்சிட்டாங்க.  இப்போ என்ன பேசனும்? இவனை பற்றி எப்படி தெரிஞ்சிக்கறது?’

ப்ரியா வந்ததிலிருந்து அவளின் முகத்தையே கவனித்து கொண்டிருந்த ஆதர்ஷிற்கு அவள் நினைப்பதை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.  அவளை இயல்பாக்க ஏதாவது சாப்பிட வைக்கலாம் என்று நினைத்தவன்,

“என்ன சாப்பிடுறீங்க? ஏதாவது ஆர்டர் பண்ணலாம்.  நான் வந்ததிலிருந்து சும்மாவே உட்கார்ந்திட்டிருக்கேன்” புன்முறுவலோடு அவளின் பதிலை எதிர்நோக்கினான்.

“ரெட் வெல்வெட் லாட்டே (Red velvet latte)”

வெயிட்டரை அழைத்து ஆதர்ஷ் தனக்கொரு வேகன் ஷேக்கும் (Vegan shake) ப்ரியாவிற்கு ரெட் வெல்வெட் லாட்டேயும் ஆர்டர் செய்து கொண்டிருக்கையில்

அவனை தலை முதல் கால் வரை ஆராய்ந்தாள் ப்ரியா.  ‘ஹேண்ட்சம்மா இருக்கான், ஸென்ஸிபிலா யோசிக்கிறான், எங்கிட்ட நல்லா பேசுறான், வெயிட்டரை மரியாதையா நடத்துறான்…’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.