(Reading time: 40 - 79 minutes)

டுத்த பத்து நிமிடங்கள் அத்தனை சிரிப்பும் மகிழ்ச்சியும் துள்ளலுமாய் கழிந்தது ரியாவுக்கும்….. எல்லோருக்கும்….”ஆன்டி அங்கிள் உங்க பின்னால….“ அடிக்கடி குட்டீஸ் கைடன்ஸ் இவளுக்கு…. வேற எதுக்காம்? அவன் காலை மிதிக்கத்தான்…..அதானே கேம்….

குழந்தைகளுக்கு விட்டு கொடுத்தது போல் இவளுக்கும் கொடுத்தானோ…. “ஆத்துக்காரன் காலை மிதிக்க என்ன ஒரு அழகான வழி ரியு” விளையாட்டின் இடையில் அவன் இவள் காதுக்குள் சொன்ன இந்த வார்த்தைகள் கேம் முடிந்துமே அடிக்கடி நியாபகம் வந்தன இவளுக்கு…..எப்படி உணர்ந்தாள் என சொல்ல தேவையில்லை……..

டைம் முடிய குட்டீஸெல்லாம் குதித்தோடிப் போக….

இருந்த மகிழ்ச்சியில் எம்பி எழுந்து  ஏனோ அவன் கன்னத்தில் இதழ் ஒற்ற தோன்றுகிறது இவளுக்கு…..அதில் காமமில்லை…..மோகமில்லை…. தன்னவன் மீது வரும் உச்சகட்ட மகிழ்ச்சி அவ்வளவே….

“ டூ மினிட்ஸ் ரியு….” என்ற அவன் வார்த்தையில்தான் தன் நினைவு எங்கு ஓடுகிறது என்பதை உணர்ந்து அவசரமாய் தலையை உலுக்கிக் கொண்டவள் கண்ணில் படுகிறது, விளையாடிய சுட்டியில் எதோ சிலர் க்ரவ்ண்டில் விட்டுப் போயிருந்த பால்…. விவன் என்ன செய்தான் என சொல்ல வேண்டுமா என்ன…?

போய் கொஞ்சம் புட் பால் விளையாடிப் பார்த்தார் சார்…. முன்பே அவன் விளையாடுவதைப் பார்க்கப் பிடிக்கும் ரியாவுக்கு….இப்போது கேட்க வேண்டுமா…?  அவன் கால்களுக்கும் பாலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரியை ரசித்துக் கொண்டிருந்தவள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“சரி வா போகலாம்..” என அவன் கிளம்ப சொன்ன போது…. “இன்னும் ஒன்னு பாக்கி இருக்கே ஆல்ரவ்ண்டர் சார்…”  என கிண்டலாய் சொன்னாள்……”அதை மட்டும் ஏன் விடுறீங்களாம்?”

 ஹோம் வொர்க் செய்யாம வந்து க்ரவ்ண்டில் சுற்றி சுற்றி ஓடுவதைத்தான் அவள் சொன்னது…… கொஞ்சமாவது  ஷையா எம்பரசிங்கா ஃபீல் பண்ணுவான் என இவள் நினைக்க….

ஆனால் அவனோ…“அதானே…” என்றவன்…. “இரு ஒரு ஃப்யூ ரவ்ன்ட்ஸ் போய்ட்டு வந்துடுறேன்” என ஓடத் துவங்கவும்….

இப்பொழுது இவள் நிலமை டொன் டொ டொய்ங்…. ‘இன்னும் கூட அந்த பனிஷ்மென்ட் இருக்கும்தானே ஸ்கூல்ல…..யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்களாம்’ என என்னவெல்லாமோ மனதுக்குள் ராட்டினம் ஆடுகிறது…..

இதில் ‘ரியா எப்பவாவது கற்பனை செய்துறுக்கியா நீ..…உன் ஹஸ்பண்ட் இப்டி இங்க ஓடுவான்னு…. ஷேம் ஷேம்….’  என மைன்ட் வாய்ஸ் வேறு மார்க்கமாய் கடமை ஆத்தியது….

இவள் முகம் பிசஞ்ச புளி ரேஞ்சில் கசங்க….

‘இதுக்கே ஏன்டி ஊளையிடுற இன்னும் கொஞ்ச நாள்ள உன் குடும்பமே ஓடும்….’ அதே மைன்ட் வாய்ஸ்தான் இப்போது எதிர்காலத்தை எக்குதப்பாய் ஃபோக்கஸ் செய்து காண்பிக்கிறது… அங்கு ஸ்கூல் க்ரவ்ண்டில் இவளையும் விவனையும் போல சாயலில் ஒரு நாலஞ்சு குட்டீஸ் சும்மா சுத்தி சுத்தி ஓடுது…..…..

ஹான்ன்ன்!!!!! நாலஞ்சு பிள்ளைங்களா??!!! என அதுக்கு டென்ஷ்னாவாளா….. இல்ல ‘அடுத்தவங்க ஓடுறத பார்க்கவே அவமானமா இருக்குமே…. என் பிள்ளைங்களே ஓடினான்னு….’ அத நினைச்சு மண்டகாய்வாளா……

‘ஐயோ நோ நோ….’ மனதுக்குள் விரியும் கற்பனையை கடகடவென அழித்து சரி செய்ய இவள் முயல….

‘ஏன் என்னைப் போல எம்பிள்ளைங்க’ என்றபடி இப்போ இவ மனக்ரவ்ண்டில் இவள் வாரிசு கூட்டத்துக்கு மத்தியில் ஓடியது திருவாளர் விவன் சக்கரவர்த்திகள்…. அதுக்கும் மேல கொடுமை என்னனா சார் அவர் ட்ரேட் மார்க் முடிகோதலை இப்ப செய்ய……கூடவே இவளது வம்சமும் செய்ய…..

ஒரு பக்கம் ‘டேய்ய்ய்ய்ய்ய்ய் நிறுத்துங்கடா’ என்ற எஃபெக்டும்….. இன்னொரு பக்கம் இவளுக்கே சிரிப்பாகவும் வருகிறது…..மனதில் ஓடின காட்சிக்கு நிஜமாகவே தலையில் அடித்துக் கொண்டாள் ப்ரியா…..

இதில் நிஜத்தில்  இவள் முன்னால் கிரவ்ண்டில் ஓடிக் கொண்டிருந்த விவன், சரியாய் இந்த நேரம் பார்த்து அவன் முடியை கோதிவிட்டுக் கொண்டு ஓட….

வந்துச்சே ஒரு ஃபீல் இவளுக்கு…..‘என் பிள்ளைங்க மட்டும்  ஹோம்வொர்க் செய்ய மாட்டேன்னு சொல்லட்டும்டா அப்றம் உனக்கு மொட்டைதான்.….’ என ரியாம்மா சபதம் ரேஞ்சில் ஒரு வரலாற்று புகழ்மிக்க சபதம் ஏற்க போனவள்…. ’ஐயோ….உன் முடியவும் எனக்கு பிடிக்குமே…..!!!” என்ற இன்ஸ்டெண்ட் ரியலைசேஷனின் விளைவால்…. அதை ட்ராப் செய்ய…

அந்த நேரம் ஓடி முடித்து இவளிடமாக வருகிறான் விவன்…. இருந்த மனநிலையில் அவன் முகத்தை விட அவன் முடி மீதே செல்கிறது இவள் பர்வை..…

அவள் பார்வையை தொடர்ந்து அவன் கை அதாக தன் முடிக்கு போக…..

“இல்ல ஓடுறப்ப எலெக்ட்ரிசிட்டி எதுவும் தலைல இருந்து எடுத்துட்டு ஓடுறீங்களோன்னு ஒரு டவ்ட்….” என சிச்சுவேஷனுக்கு ஏற்றபடி நக்கலடித்தாள் இவள்…….

இப்பொழுது சின்னதாய் சிரித்துக் கொண்ட விவன்….. “அப்போல்லாம் ஸ்கூல் முடியவும் நான் எங்க கடைல இருப்பேன் ரியு…… நைட் வரைக்குமே உட்கார்ந்தே வேலை செய்ய வேண்டி இருக்கும்…. சோ ஓடுறப்ப ரொம்ப ஃப்ரீயா ஃபீலாகும்…. அப்ப இப்டி முடிய கோதிவிடுறது என்னமோ அம்மாவே என்ன தொடுற மாதிரி தோணும்…..“ இதழ் தவிர எல்லா இடத்திலும் விரவி இருக்கும் அவனது ட்ரேட் மார்க் சிரிப்போடே அவன் சொல்ல…. 

அவ்வளவுதான்…. சட்டென நிசப்தமாகிறது அதுவரையும் அவளை சுற்றி சல சலவென வீசிக் கொண்டிருந்த சந்தோஷக் காற்று….. நடு நெஞ்சில் கப கப என எதோ தவிப்பு அடித்து எடுக்க…. வெற்று முகமாய்  அவனைப் பார்த்தாள் ரியா….

அவன் சாதாரண்மாய்த்தான் இருந்தான்…. ஆனால்  தொண்டையிலிருந்து சுட சுட இறங்குகிறது ஒரு துயரம் இவளுக்கு…..அந்த ஏஜ்லயே வேலை பார்த்துறுக்கான்…..அதோட அம்மா அப்பாவ மிஸ் செய்றதுன்னா எப்படி இருக்கும்னு இவளுக்கு தெரியாதா….

அவள் பார்த்து நின்ற விதத்தைப் பார்க்கவும்தான் விவனுக்கு அவன் பேச்சின் பின் விளைவு புரிகிறது…… சிரிக்க வைக்க அவளை கூட்டி வந்து என்ன செய்துவிட்டான் இவன்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.