(Reading time: 29 - 57 minutes)

'தூங்கிட்டியா கண்ணம்மா???'

'ம்??? ம்ஹூம்..'

'தேவை இல்லாம ஏதாவது யோசிச்சிட்டு இருப்பேன்னு தோணிச்சு. அதான் கூப்பிட்டேன். கூலா தானே இருக்கே???"  

'ம்..' என்றவளுக்கு ஏனோ அவன் முகம் பார்க்க வேண்டுமென தவிக்கிறது.

'நான் ஏன் இப்படி இருக்கிறேன்??? நான் ஏன் இப்படி இருக்கிறேன்??? வேண்டாம். இது வேண்டாம்.' சொல்லிக்கொள்கிறாள் தனக்குள்ளே.

'சரி தூங்கு கண்ணம்மா. நான் போன் வெச்சிடவா..'

'ம்ஹூம்..' சட்டென சொல்லிவிட்டாள் அபர்ணா.

'என்ன ம்ஹூம்??? ஏன் கண்ணம்மா தூக்கம் வரலையா???'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

'ம்ஹூம்...'

'சரி அப்போ மாடிக்கு வா பேசிட்டு இருப்போம்...' அவன் சாதரணமாக சொல்ல

'நான் வ... வரவா??? தப்பில்லையா???' கேட்டாள் அவள். அந்த 'தப்பில்லையா' அவள் கேட்டதின் அர்த்தம் அவனுக்கு புரியவில்லை.

'இதில் என்னடா தப்பு??? வா வா ஓடிவா. பார்க்கலாம்..' அவன் சொல்ல அழைப்பை துண்டித்துவிட்டு  நிஜமாகவே ஓட்டமாகத்தான் மாடிப்படி ஏறினாள் அவள்.

அவள் கையிலேயே இருந்தது அவள் கைப்பேசி. அதில் இருந்த அருணின் 78 தவறவிட்ட அழைப்புகளை கவனிக்கவே இல்லை அவள்.

ஓடிச்சென்று மூச்சு வாங்க அவனெதிரில் நின்றாள் அபர்ணா.....

'இ... இல்லை.. ஒண்ணுமில்லை. சும்மா  உ....உங்களை பார்க்கணும் போ....போலே இருந்தது..'

அழகான ஒரு புன்னகை அவன் இதழ்களில். அவன் எப்போது அவளை நோக்கி இருகைகளையையும் நீட்டினான். அவள் எப்படி அவன் கைகளில் சேர்ந்தாள் என்று இருவருக்குமே தெரியவில்லை.

'கண்ணம்மா.... என்னடா கண்ணுக்குள்ளே தண்ணி.. கண்ணம்மா.. எதுக்குடா.. நான் ஒரு மடையன். உன்னை தனியா விட்டிருக்க கூடாது. கண்ணம்மா ப்ளீஸ்டா.. கண்ணம்மா எல்லாம் உன் நல்லதுக்குதான்டா செஞ்சேன்.. கண்ணம்மா' அங்கே அவன் குரல் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. நிமிரவே இல்லை அவள்.

கிட்டத்தட்ட முப்பது மணிநேரமாக அவள் சேர்த்து வைத்திருந்த கண்ணீர் மொத்தமும் அவன் தோளிலே இறங்கிக்கொண்டிருந்தது. கிட்டதட்ட பத்து நிமிடங்கள். எல்லாவற்றையும் முடித்திருந்தாள் அவள்.

'என்ன கண்ணம்மா. இப்படி அழறே???. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கா??? அவனது கண்ணோரத்திலும் கொஞ்சம் கண்ணீர் மிச்சமிருக்க கேட்டான் அவன்.

இடம் வலமாக தலை அசைத்தாள் அவள் ஆனால் கண்டிப்பாக அப்படிதானே இருக்கும். பதில் சொன்னது அவன் மனம்.

'நான் ரொம்ப பயந்துட்டேன்டா' என்றபடி அவள் கன்னங்களில் மிச்சமிருந்த கண்ணீரை இருகைகளாலும் அழுந்த துடைத்தான் அவன்.

மெல்ல கண்களை நிமிர்த்தினாள் அவள். மெது மெதுவாய் அவன் முகத்தை அளந்தன அவள் கண்கள். இதுவரை அவனை ரொம்பவும் ஊன்றி பார்த்தது இல்லைதான் அவள். இப்போது முதல் முறையாய் இத்தனை நெருக்கத்தில்

அவனது துறுதுறு கண்களும், நேர்த்தியான மீசையும் அவள் மனதில் அழகாய் விழுந்த நேரத்தில் ஒலித்தது அவள் கையிலிருந்த கைப்பேசி.

திரை ஒளிர்ந்தது அருண்!!! திடுக்கென்றது அவளுக்கு. அவன் பார்வையுமே அதன் மீது விழுந்தது. சுறுசுறுவென பொங்கியது பரத்துக்கு.

'இந்த நேரத்தில் அழைக்கிறான் என்றால் எத்தனை வக்கிரம் இருக்க வேண்டும் அவனுக்குள்ளே'

ஒலித்து ஓய்ந்தது அது. அபர்ணா ஏற்கவில்லை அழைப்பை. 79 மிஸ்டு கால்ஸ் என சொன்னது திரை.  பரத்தின் முகத்தில் கொஞ்சம் கோபக்கோடுகள். ஒரு நிமிடத்திற்குள் மற்றொரு முறை அழைப்பு.

'நீ எடுத்து பேசுடா..' என்றான் சட்டென. மெல்ல நிமிர்ந்தாள் அவள்.

'சும்மா பேசு. என்னதான் சொல்றான்னு கேட்போம்..' சொன்னான் பரத்.

'ஹலோ..' என்றாள் இவள். மறுமுனையில் அவன் என்ன சொன்னானோ

'ஆக்சிடென்டா...' என்றாள் திடுக்கிட்ட குரலில்.

அதன் பின் இவள் எதுவுமே பேசவில்லை. மறுமுனை ஏதேதோ சொல்லிக்கொண்டே இருந்தது. பரத் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அதிலிருந்தது தவிப்பா, கவலையா, கோபமா, ஆதங்கமா கண்டுக்கொள்ள முடியவில்லை பரத்தால்.

பேசி முடிந்ததும் பரத்திடம் எதுவுமே சொல்லவில்லை அவள். வாஷ் பேசினுக்கு சென்று தண்ணீரை முகத்தில் வாரி வாரி அடித்துக்கொண்டாள். அவளது மனநிலை புரியவில்லை அவனுக்கு.  முகத்தை துடைத்துக்கொண்டு அவனருகில் வந்தாள் அவள். 

'என்னடா சொன்னான்???

அவருக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம்..... பரத் நான் என்ன கேட்டாலும் செய்வீங்களா???'

'என்ன வேணும் கண்ணம்மா .'

எனக்கு அருணை பார்க்கணும்!!!'

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:982}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.