(Reading time: 13 - 25 minutes)

விவேக் ஸ்ரீநிவாசன் - 06 - வத்ஸலா

 

vs

காக்பிட் அறையின் அந்த மங்கலான வெளிச்சத்தில் திரும்பி அவன் முகம் பார்த்தாள் துணை விமானி சந்தியா.

நிஜமா சொல்லு லவ் மேட்டர்தானே’ கண் சிமிட்டினாள் அவள்.

‘நோ சந்தியா... என் வாழ்கையிலே இந்த லவ் கல்யாணம் எல்லாத்துக்கும் இடமிருக்கான்னு தெரியலை...’ என்றான் சின்ன புன்னகையுடன்.

‘ஏன்..ஏன் அப்படி...’

‘அது பெரிய சீக்ரெட்... விவேக் புக் ஆஃப் சீக்ரெட்ஸோட ஒரு பார்ட்..’ என்று அவன் அழகாய் சிரிக்க அவளும் அவனுடன் சிரிப்பில் இணைந்துக்கொண்டாள் சந்தியா. அவனது விழிகள் ஜன்னலின் வழியே தெரிந்த நட்சத்திர கூட்டங்களை உரச அவற்றை பார்த்து சிரித்துக்கொண்டான் விவேக்.

அவர்களுக்கு தெரியுமே அந்த ரகசியம்!!! அந்த காரணம்!!! அன்று அவனும் அவன் தந்தையும் பேசிக்கொண்ட வார்தைகைகளுக்கு சாட்சியும் அவர்கள்தானே.

பல வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வு அது. அவனது பதினான்காவது வயதில் நடந்த சம்பவம் அது!!!

கூடைப்பந்து விளையாடுவதில் அவனுக்கு ஆர்வம் அதிகம். அவனது பள்ளி கூடைபந்து அணியின் கேப்டனாக அவன் இருந்த காலம் அது.

அவனது தந்தை அவனுக்காக வீட்டின் பின்னால் சின்னதாக ஒரு கூடைபந்து மைதானத்தை அமைத்திருந்தார். இவன் காலையிலும் மாலையிலும் அங்கே சிறிது நேரம் விளையாடி பயிற்சி செய்வது வழக்கம்.

அவனது பள்ளித்தோழி கீதா!!! அவள் அவனது பக்கத்து வீட்டில் குடி இருந்தாள். இவன் விளையாடிக்கொண்டிருக்கும் நேரங்களில் அங்கே வந்து அமர்ந்து இவனை பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டு இருப்பது அவளது வழக்கம். எதனால் என்று புரியாத ஒரு ஈர்ப்பு இவனிடத்தில் அவளுக்கு.

அன்றும் காலையில் வழக்கம்  போல் இவன் பந்தை தட்டிக்கொண்டே சுழன்றுக்கொண்டிருக்க என்ன நினைத்தாளோ சட்டென இவன் கன்னத்தில் முத்தமிட்டிருந்தாள் கீதா. மீசை அரும்ப ஆரம்பித்திருந்த பருவம் அது .நிறையவே படபடப்பும், பரபரப்பும், இவனிடம் தொற்றிக்கொள்ள அடுத்து என்ன செய்வது என புரியாமல் இவன் திகைத்து திரும்ப அங்கே நின்றிருந்தார் ஸ்ரீநிவாசன்!!!

அவர் அந்த காட்சியை பார்த்துவிட்டார் என இருவருக்குமே புரிந்தது. அங்கிருந்து ஓடியே விட்டிருந்தாள் அந்த சின்ன பெண். இவன் மீது எந்த தப்பும் இல்லைதான்.

அதற்கும் மேலாக அப்பா அவனை திட்டி இருந்தால் கூட மனது நிம்மதியாக இருந்திருக்கும். அப்பா எதுவுமே பேசாமல் உள்ளே சென்று விட உயிர் மொத்தமாக வற்றிப்போன ஒரு உணர்வு இவனுக்கு.

ன்று மாலை வரை இவனிடம் எதுவுமே பேசவில்லை அப்பா. இரவு இவர்கள் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக இருவரும் ஹைதிராபாத் செல்ல வேண்டி இருந்தது. விமானம் ஏறி இருவரும் அருகருகே அமர்ந்த பிறகும் அப்பா எதுவுமே பேசவில்லை.

அப்போதெல்லாமும் விமானப்பயணம் கொஞ்சம் பயம்தான் விவேக்குக்கு!!! விமானம் மேலே ஏறத்துவங்க கண்களை இறுகமூடிக்கொண்டு அப்பாவின் கைகளை கோர்த்துக்கொண்டு அமர்ந்து கொண்டான் மகன். அப்பாவின் இதழ்களில் மெது மெதுவாக ஒரு புன்னகை மலர்ந்தது.

சில நிமிடங்கள் கழித்து அவன் கண் திறக்க காலையில் நடந்த அந்த நிகழ்வினால் இத்தனை  நேரம் நரகத்தின் பிடியில் இருந்தவன் அப்பாவின் புன்னகையில் கரைந்து போனான். அவன் கண்களில் நீர் கட்டிக்கொண்டு நின்றது.

அவனது பயங்கள், குழந்தைத்தனங்களை விட்டு அவனை வெளியே கொண்டு வரும் பொருட்டு அவர் அவனை கண்ணா என்று கூட அடிக்கடி அழைப்பது இல்லைதான். சற்றே அதிரடியாகத்தான் அவனிடம் பேசுவார் அவர். இன்று பிறந்த குழந்தையாய் முதன் முதலாய் அவர் கைகளில் தவழ்ந்த அந்த விவேக்கை பார்க்கும் உணர்வு அப்பாவுக்கு.

‘என்னடா கண்ணா..’ என்றார் இதமாக!!!

‘தப்பு எதுவும் செய்திட்டேனாபா??? உங்களை எதுவும் கஷ்டப்படுதிட்டேனாபா..’ என்றான் அப்பாவின் முகம் கூட பார்க்க முடியாத தயக்கத்துடன்.

‘முதல்லே நிமிர்ந்து உட்காரு. என் பையன் எப்பவும் இப்படி தலைகுனிஞ்சு இருக்க கூடாது..’ என்றார் அவர். நிமிர்ந்தான் விவேக்.

‘தப்பெல்லாம் எதுவும் இல்லைடா கண்ணா’ என்றார் பாசம் நிறைந்த குரலில்.

இல்லப்பா. அவ அப்படி செஞ்சப்போ எனக்கு கொஞ்சம் சந்தோஷமாதான் இருந்ததுபா...’ என்றான் அடியிலும் அடிக்குரலில்.

அழகாய் சிரித்தார் அப்பா ‘இதெல்லாம் இந்த வயசிலே வர்றதுதான்டா. இதை எப்படி சரியா ஹேண்டில் பண்றதுன்னு நீ கத்துக்கணும்..’ என்றார் புன்னகையுடன்..

ஒரு நண்பனாய், ஒரு தந்தையாய், ஒரு மருத்துவனாய், ஒரு ஆசிரியனாய் அந்த வயதுக்கான அவனுடைய மாற்றங்களை அதன் காரணங்களை மிக நிதானமாய் விளக்கினார் அவனுக்கு. அப்பாவின் தோளில் குழந்தையாய் சாய்ந்தபடி எல்லாவற்றையும் கேட்டிருந்தான் மகன்.

கடைசியாய் கேட்டான் மகன் ‘அப்பா அப்போ லவ் பண்ணா தப்பில்லையாபா..’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.