(Reading time: 16 - 31 minutes)

"ன்னைக்கு நீ முட்டாள். இதை ஓத்துக்கிட்டு தான் ஆகணும் ஜான். இனி நீ முட்டாள் ஆகுற ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு ஜோக்கர் பொம்மை வாங்கி வைப்பேன்" என கூறி மீண்டும் அதே இடத்தில ஜோக்கர் பொம்மையை வைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தான்.

ஜெஸிகா மழையில் நனையாதவாறு குடை பிடித்து நடந்து வந்துகொண்டிருந்தாள். இன்னும் கடைசியாக ஒரு வீடு மட்டுமே பாக்கி. அதையும் பார்த்துவிட்டு, எது நன்றாக இருக்கிறதோ அதை டைரக்டரிடம் தெரியப்படுத்திவிட்டு மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கவேண்டும் என எண்ணினாள்.

இரவில் தனியாக வந்து கொண்டிருந்ததால் அவளுக்கு சிறிது பயமேற்பட்டது. தனது கைப்பையில்  பெப்பர் ஸ்பிரேவயும் சிறிய கத்தியும் இருப்பதை எண்ணி தன்னை தைரியப்படுத்திக் கொண்டாள். அவள் தேடி வந்த வீடு தூரத்தில் தனியாக காட்சி தந்தது. 'அப்பாடா! ஒரு வழியா வந்துட்டோம்' என நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.,

காய்ச்சலின் அவஸ்தையோடு மதியத்தில் இருந்து உணவு உண்ணாததால் உடலில் இருக்கும் சக்தி வெகுவாக குறைந்திருந்தது. இருமியபடியே அவ்வீட்டை நோக்கி நடந்தாள். சிறிது நேரத்தில் வீட்டை அடைந்த ஜெஸிகா காலிங்பெல்லை அழுத்தினாள். வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. கதவு திறந்திருந்தது. வீட்டினுள் பூனை போல் மெல்ல நுழைந்தாள்.

"சார் சார்"

வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. "வீட்டை திறந்து வச்சிட்டு வீட்டில் இருப்பவர்கள் எங்கே போயிருப்பாங்க" என தனக்கு தானே கேட்டுக்கொண்டு வீட்டை மெல்ல சுற்றிப்பார்த்தாள்.

"வீடு நல்லா தான் இருக்கு. ஆனா எனக்கு பிடிக்காத பச்சை நிற பெயிண்ட் அடிச்சு வச்சிருக்காங்க".என முனகிக்கொண்டே வீட்டின் நாலாபுறமும் தன் கண்களை சுழலவிட்டாள் ஜெஸிகா.

'ரசனைனா என்னன்னே தெரியாதவங்க தான் இந்த வீட்டில் குடி இருக்கணும்..வீட்டை கொஞ்சம் மாத்தினா போதும் ஷூட்டிங் இங்கேயே நடத்தலாம்' என எண்ணிய ஜெஸிகா தான் கொண்டுவந்த காமெராவை கொண்டு வீட்டை படமெடுத்தாள்.

அப்போது, கம்ப்யூட்டர் டேபிளில், தான் பூங்காவில் நின்றுகொண்டிருக்கும் புகைப்பட,ம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். குளிரையும் தாண்டி அவள் முகத்தில் வியர்வை முத்துக்கள் அரும்பின.

'யாரோ தன்னைப் பின்தொடர்ந்து படம் எடுத்து இருக்கிறார்கள். யார் அவர்கள்? எதற்காக தன்னை படமெடுத்தார்கள்?' என தன் மனதில் பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள்.

அந்த இடமே சூனியக்கோட்டை போல் ஜெஸிகாவிற்கு தோன்றியது. 'சீக்கிரம் இந்த இடத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும்' என எண்ணிய வேளையில், ஓர் அறையில் இருந்து யாரோ வரும் சத்தம் கேட்க, அருகே இருக்கும் ஓர் இடத்தில்  மறைந்து கொண்டாள்.

ஜான் கொட்டாவி விட்டுக்கொண்டே மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தான். ஜெஸிகா மெதுவாக ஜானின் பின்னால் வந்து நின்றாள். தண்ணீர் குடித்துவிட்டு ஜான் திரும்பிய வேளையில் தன்னிடம் இருந்த பெப்பர் ஸ்ப்ரேயை ஜான் முகத்தில் அடித்தாள்..எரிச்சல் பொறுக்க முடியாமல் ஜான் ஓவென கத்தி கீழே விழுந்தான்.

"சொல்லுடா, யார் நீ? ,எதுக்கு என்னை ஃபாலோ பண்ணி போட்டோ எடுத்து வச்சிருக்க? சொல்ல போறியா இல்லையா? " என அவன் தலையைப் பிடித்து வெறியோடுஉலுக்கினாள் ஜெஸிகா. 

அவள் கூறியது எதுவும் ஜானிற்கு கேட்கவில்லை  அவன் கண்களை இழந்துவிட்டதைப் போல துடித்தான்.

தனது கைப்பையில் இருந்து கத்தியை எடுத்தாள் ஜெஸிகா. "இப்போ நீ சொல்லலேனா உன்னை கொலை பண்ணிடுவேன்" என கோபத்தோடு ஜானை நோக்கி வந்தாள்  அப்போது தான் அவள் ஜானின் முகத்தைக் கண்டாள்.

"ஜான்! நீயா?"

'இந்த குரலை எங்கேயோ கேட்டிருக்கேனே' என எண்ணிய ஜான், வாஷ்பேஷினில் தன் முகத்தைக் கழுவினான். அதன் பிறகும் கண்களின் எரிச்சல் குறைந்தபாடில்லை. மெதுவாக கண்களை திறந்தான். அவன் இமைகள் படபடவென துடித்தன . ஜெஸிகா மங்கலாகத் தெரிந்தாள்.

"அடிப்பாவி! நீயா?.ஏண்டி எங்கே போனாலும் என்னை நிம்மதியா விடமாட்டியா?" என எரிச்சலோடும் கோபத்தோடும் கத்தினான் ஜான்.

"ஷூட்டிங் விஷயமா இங்கே வந்தேன்"

"கதை விடாத. என்னை ஃபாலோ பண்ணி என் வீட்டை கண்டுபிடிச்சு என்னை பார்க்க வந்திருக்க. உன் காதலை என்னால ஏத்துக்க முடியாது ஜெஸ்ஸி"

"உளறாத. நீ இல்லாத இந்த கொஞ்ச நாள் எவ்வளவு சந்தோசமா இருந்தேன் தெரியுமா?"

ஜான் தன் கண்களை கழுவிக்கொண்டே இருந்தான்.

"பார்க்ல நான் இருந்த போட்டோ இங்க எப்படி வந்துச்சி. நீ தான் என்னை பின்தொடர்ந்து போட்டோ பிடிச்சிருக்க"

ஜான் என்ன சொல்வதென்று விழித்தான். "உன்ன நான் போட்டோ பிடிக்கலை. என் நண்பன் தான் எடுத்தான்"

"நண்பனா? எதுக்கு?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.