(Reading time: 11 - 21 minutes)

Buvaneswari 

விசாலி – மனசை தொட்டுட்டீங்க போங்க! புவனேஸ்வரி எனும் எழுத்தாளர் இன்னும் பல மடங்கு வளர வாழ்த்துக்கள்.

இந்த பேட்டியை முடிக்கும் முன் இன்னும் ஒரு கேள்வி. சர்வதேச மகளிர் தினமான இன்று நீங்கள் பெண்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி என்ன?

புவனேஸ்வரி - எனக்கு ஒரு விஷயம் சிலதோழிகளோடு பகிர்ந்து கொள்ளனும். அதை தனி கட்டுரையாகவும், என்னுடைய பொதுவான வாழ்த்தினை இங்கேயும் சொல்லிடுறேன்.

  • பெண்கள் அனைவருக்குமே மகளிர் தின வாழ்த்துக்கள். பெண்கள் ஆண்களுக்கும் மேல இருக்கனும்னு இல்லை,கீழயும் இருக்கனும்னு இல்ல, அவர்களுக்கு தோள்தட்டி ஊக்குவிக்கும் சமநிலையாக இருந்தாலே போதும்.
  • இன்னமும் வரதட்சனை, கைபெண் திருமணம், திருநங்கைகளுக்கான எதிர்ப்பு இதெல்லாம் இருக்கத்தான் செய்யுது.. மாற்றம் கொண்டு வரனும்னு எண்ணமிருந்தால் இதில் கவனம் செலுத்துங்க.
  • திருநங்கைகளுக்கு உரிமை கிடைக்கனும்னா, அவங்களை மூன்றாவது பாலினம்னு நினைக்காமல் நம்மில் ஒருத்தாராக்கனும்னு தான் என்னுடைய கருத்து.. இதுக்காக யாரும் தனியாக போராட வேண்டாம். அவங்களை பார்த்தால், ஒரு வினாடி கூட அதிர்ச்சியோ,முக சுளிப்போ வெளிகொண்டு வராதீங்க. “சாப்பிட்டிங்களா”நு கொஞ்சம் மனசார் கேளுங்க மரணபடுக்கையிலும் மறக்க மாட்டாங்க உங்களை.
  • குழந்தைகளை வளர்க்குறதுல கவனமா இருங்க.. எதை எல்லாம் செய்ய கூடாதுனு பட்டியல் போடாமல்,எதை செய்யனும்னும் சொல்லி கொடுங்க.
  • தற்காப்புகலை மாதிரி, கொஞ்சம் மனம் விட்டு பேசவும் சொல்லி கொடுங்க. பொண்ணுனா அளவாக த்தான் பேசனும் என்பது வெறும் கண்துடைப்புதான்.. “எவ்வளவு வேணும்னாலும் பேசு.. ஆனா சரியானதாக பேசுனு சொல்லி வளர்த்துவிடுங்க”. மன்னிப்பு கேட்பது வெற்றியின் அடையாளம்னு ஆண் பெண் இருவருக்கும் சொல்லி வளர்ங்க.. ஒவ்வொரு மாற்றமும் வளர்ப்பில்தான் இருக்கிறது! நல்ல சமுதாயம் நம்ம கையில் தான் இருக்கு.
  • பசங்க மாதிரி இருந்து “நான் சுதந்திரமானவள்” நு சொல்லாதீங்க. மறைமுகமாக நீங்க பசங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுறிங்க.. பேண்ட் சர்ட் போட்டாநிமிர்வு தானாகவே வரும். ஏனா அது சரீரம் மறைத்து சௌகரியம் தருது! புடவையிலும் நிமிர்வு தெரியனும்! அதுதான் பெண்ணியம்.அதை புரிய வைங்க.
  • பெண்கள் உடல் ரீதியாகவும்,மனரீதியாகவும், வலுமையானவர்கள், வேகமானகவர். அந்த வேகத்தை ஆக்ககரசிந்தனைக்கு பயன்படுத்துங்க..
  • மனசை லேசா பூ மாதிரி வெச்சுக்கோங்க.. பாட்டு கேளுங்க, பாடுங்க, மனசு விட்டு பேசுங்க, கோபம் வந்தா எதையாச்சும் போட்டு உடைச்சிட்டு மறந்துடுங்க. மனசுல எதையுமே போட்டு அழுத்த வேண்டாம். இலகுவா இருங்க.

 

விசாலி – நம் வாசககிகள் அனைவருக்கும் இது கட்டாயம் உதவும். கேட்ட உடனே நேரம் ஒதுக்கி, இந்த பேட்டியில் பங்குப் பெற்றதற்கு நன்றிகள் புவனேஸ்வரி!

புவனேஸ்வரி - 2018 எனக்கு,நான் எதிர்பார்த்த விதமாக தான் அமைந்து கொண்டு வருகிறது. அதில் இந்த நாளும் ஒன்னு. என் லைப்ஃலயே முதல் நேர்காணல் இது. சந்தோஷமாக இருக்கு. நன்றி சில்சீ மற்றும் என் செல்லம் விசு. மகளிர் தின வாழ்த்துக்கள் :) ஒவ்வொரு பெண்ணுக்கும் தோள் கொடுக்கும் ஆண்களுக்கும் நன்றி சொல்லிக்கிறேன் _/\_ நன்றி

 

புவனேஸ்வரியின் பங்களிப்புகள்:

அனைத்து பங்களிப்புகளையும் படிக்க, https://www.chillzee.in/chillzee-contributors/3:buvaneswari பக்கம் செல்லுங்கள்.

நிறைவுப்பெற்ற கதைகள் படிக்க https://www.chillzee.in/stories/chillzee-completed-stories-by-authors-01#buvi பக்கம் செல்லுங்கள்.

 

{kunena_discuss:1177} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.