(Reading time: 5 - 9 minutes)

2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஸ்ரீயுடன் கலந்துரையாடல்

Sri 

Sri

Chillzee வாசகர்களை தன் கதைகளால் வசியம் செய்திருப்பவர் ஸ்ரீ!

2016ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறுகதையின் மூலம் chillzeeயில் அறிமுகமாகி, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து பல மனம் மயக்கும் கதைகள் எழுதிக் கொண்டு இருப்பவர்.

chillzee டீமை சேர்ந்த விசாலி மகளிர் தினத்திற்காக ஸ்ரீயுடன் நடத்திய ஜாலி கலந்துரையாடல் இதோ உங்களுக்காக.

 


விசாலி – வணக்கம் ஸ்ரீ! இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

ஸ்ரீ நன்றி விசாலி உங்களுக்கும் நம்ம சில்சீயோட அத்தனை அழகான ரீடர்ஸ் ரைட்டர்ஸ்க்கும் இனிய மகளிர்தின வாழ்த்துக்கள்.

 

விசாலி – உங்கள் முதல் கதை எழுதிய அனுபவம் பற்றி சொல்லுங்க.

ஸ்ரீ - என்னுள் நிறைந்தவனே எப்போதுமே ரொம்ப ஸ்பெஷல்.நிஜமா ஒரு புத்தகமா வரும்ங்கிற அளவு நினைச்சு இந்த கதையை ஆரம்பிக்கல.எப்போதுமே வாழ்க்கைல முதல் விஷயங்கள் அழகானது.அதே போல்தான் இதுவும்.எத்தனை கதைகள் எழுதினாலும் என்னை வாசகர்களும் மத்த எழுத்தாளர்களும் என்னுள் நிறைந்தவனே ஸ்ரீ னு தான் கூப்பிடுறாங்க.

 

விசாலி – அப்போ நீங்க முதல் முதல் எழுதியதே தொடர் கதை தானா?

ஸ்ரீ இல்லை.என்னுடைய முதல் கதை பிறந்தநாள்ங்கிற டைட்டில்ல எழுதின ஒன் பேஜ் சிறுகதை.அதன் பிறகு தான் தொடர்கதை ஆரம்பித்தது.

 

விசாலி – Chillzeeயில் வெளிவந்துள்ள உங்களுடைய எழுத்தில் (சிறுகதை, தொடர்) உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? 

ஸ்ரீ - வழக்கமான பதிலா இருந்தாலும் இது தான் உண்மை.எல்லாமே பிடிச்சு எழுதின கதைகள் தான்.குறிப்பிட்டு சொல்லனும்னா ஆன் கோயிங்ல இருக்குற இன்பமே வாழ்வாகிட வந்தவனே.

 

விசாலி – நல்ல சாய்ஸ்!!! உங்கள் கதைகளில் நீங்கள் உருவாக்கிய காட்சி(களை) நிஜத்தில் பார்க்க நேர்ந்த அனுபவம் உண்டா?

ஸ்ரீ - நேர்மையான பதில் என்னுடைய முதல் இரண்டு கதைகளிலுமே நிறைய காட்சிகள், இடங்கள் ,மனிதர்கள் என் வாழ்வில் நேரில் பார்த்தவை தான்.

 

விசாலி – இன்ட்ரஸ்டிங் பா! அப்போ, சிறு வயதிலேயே எழுத வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்ததா,

ஸ்ரீ - படிக்கும் ஆர்வம் ரொம்பவே அதிகம்.ஆங்கிலத்தை விட தமிழ் புத்தகங்கள் நிறைய நிறைய படிச்சுருக்கேன்.ஆனால் எழுத்து மீதான ஆர்வம் சில்சீனால தான் வந்தது.சில்சீல வர்ற அத்தனை கதையையும் படிப்பேன்.அப்படிதான் நாமளும் எழுதலாமானு யோசிச்சது.

 

விசாலி – நீங்க சில்சீ வாசகி என்பது எங்களுக்கு புது செய்தி! ஆனால் மகிழ்ச்சியூட்டும் செய்தி.

சரி, ஒரு சீரியஸ் கேள்வி. ஒரு எழுத்தாளராக என்ன சாதிக்க (achieve) வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

ஸ்ரீ - நம் எழுத்தால் நல்ல விஷயங்களை சொல்லும் அதே நேரம் படிக்குறவங்களுக்கு ஒரு பீல் குட் மூட் உருவாகனும்.கருத்துக்கள் சொல்றோம் சிரிக்க வைக்குறோம்ங்கிறத தாண்டி எதார்தத்ததை ரிலேட் பண்ணிக்குறதா இருக்கனும்.இப்போ வர என்னோட நான்கு எல்லா கதைகளுக்குமே எல்லோரும் சொல்ற ஒரு விஷயம் எதார்த்தமா இருக்கு கரெக்டெர்ஸ் எல்லாமே நம்மளோட வாழற சாதாரண ஒரு மனுஷங்களா கண் முன்னாடி வர்றாங்கனு சொல்லுவாங்க.இதை எந்த நிலையிலும் அதை மாத்தாம கதைகளில் வித்யாசத்தை கொடுத்தால் என்னளவில் அதுவே பெரிய சாதனை தான்.

 

விசாலி – இந்த சாதனை தொடர வாழ்த்துக்கள். சரி,ஒன்னு சொல்லுங்க. எழுத தொடங்கிய போது ஏன் உங்க சொந்த பெயரில் எழுதலை? ஸ்ரீ எனும் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்ததற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன?

ஸ்ரீ - ரகசியம்நு சொல்ற அளவு எதுவும் இல்லை.கணவரின் பெயர் அது மட்டும் தான் காரணம்.தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த பெயரும்கூட. :)

 

விசாலி – புரிந்துக் கொள்ள முடிகிறது :-) Chillzeeயை பற்றிய உங்களின் பார்வையை சொல்லுங்களேன்.

ஸ்ரீ - பல பெண்களின் கனவுகளை நிஜமாக்கும் திறவுகோல் தான் சில்சீ.நம்ம ரீடர்ஸ் அண்ட் ரைட்டர்ஸ் மாதிரி ஒரு பேமிலி பாண்டிங் வேற எங்கேயும் கிடைக்குமானு தெரில.எழுதுறவங்களுக்கு ரொம்ப ரொம்பவே கம்போர்ட் குடுக்குற ஒரு தளம்.ஏற்கனவே குறிப்பிட்டிருந்த மாதிரி சில்சீ கதைகளை படிக்க ஆரம்பிச்சு தான் நான் எழுத தொடங்கியதே.

விசாலி – ரொம்ப நன்றி ஸ்ரீ! சர்வதேச மகளிர் தினமான இன்று நீங்க பெண்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி என்ன?

ஸ்ரீ - எப்போதுமே உங்களுக்கான அடையாளத்தை தேடி ஓடுங்கள்.இன்னாரின் மனைவி இன்னாரின் மகள் இன்னாரின் தாய் என்பதோடு நம் வாழ்க்கை முடியகூடாது.நம் தனித்தன்மையை எப்படியாவது நிலைநாட்டி. கொண்டே இருக்க வேண்டும்.எத்தனை பொறுப்புகள் வந்தாலும் நமக்கான நேரம் என்பது தினசரி வாழ்வில் நிச்சயம் இருக்க வேண்டும்.

இனிய மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். :)

 

விசாலி – கேட்ட உடனே நேரம் ஒதுக்கி இந்த பேட்டியில் பங்குப் பெற்றதற்கு நன்றி ஸ்ரீ.

ஸ்ரீ இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு உங்களுக்கும் சில்சீக்கும் என்னோட நன்றிகள் விசாலி.எப்போதுமே எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் சில்சீக்கு நிகர் சில்சீ தான். smilesmile

 

ஸ்ரீயின் பங்களிப்புகள்:

அனைத்து பங்களிப்புகளையும் படிக்க, https://www.chillzee.in/chillzee-contributors/164:rohinisri பக்கம் செல்லுங்கள்.

நிறைவுப்பெற்ற கதைகள் படிக்க https://www.chillzee.in/stories/chillzee-completed-stories-by-authors-01#sri1 பக்கம் செல்லுங்கள்.

 

{kunena_discuss:1177} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.