(Reading time: 11 - 21 minutes)

Buvaneswari 

விசாலி – சூப்பருங்க! நீங்கள் பின்பற்றும் (அ) சரி என நினைக்கும் கருத்துக்களை மட்டுமே உங்கள் கதைகளில், கவிதைகளில் சொல்வீங்களா, இல்லை, கதைகளின் சூழ்நிலைக்கு ஏற்ப அதை நிர்ணயிச்சுப்பீங்களா?

புவனேஸ்வரி - எனக்கு சரினு படலன்னா அதை நான் எழுத மாட்டேன். பெண் துணைவனுக்காக, நட்பை விட்டு தருவது, ஆணும் பெண்ணும் “ ஆமா நாங்க ப்ரண்ட்ஸ் / லவர்ஸ்” தான் நு சொல்ல தயங்குவது, பெண்களை முழுநேர வில்லியென காட்டுவது, ஒரு கதாபாத்திரத்தை ஆரம்பத்தில் தொடங்கி தப்பாகவே காட்டுறது, ஜோடிகளை பிரிச்சு வெச்சு கதையை முடிக்கிறது, கதாநாயகன் மது, மாது, புகைப்பிடிப்பில் நிம்மதி தேடுவது, ஆணோ, பெண்ணோ அழகில் மட்டும் மொத்தமாய் மயங்கி, கிறங்கி, உருகி மோகத்தில் தொடங்கி காதலை உணர்வது இதெல்லாம் எனக்கு சரி தவறுனு சொல்றது விட, எனக்கு பிடிக்காது. எனக்கு பிடிக்கலனா நான் எழுத மாட்டேன் அப்படி.

சில நாள் எழுதுற காட்சிகளோ, கவிதைகளோ நினைச்ச மாதிரி இல்லன்னா அதை மொத்தமா “டெலிட்” செய்துவிடுவேன். சில நேரம் நம்ம கதை தாமதமாகவோ, இல்ல வராமலோ இருப்பதற்கு அதுதான் காரணம். இந்த இடத்துல எனக்கிது சொல்லனும் போல இருக்கு.

உத்தமவில்லன் படத்துல கே பீ ஐயா சொல்லுவாரு, “ உன்ன மாதிரி ஒரு உச்ச நட்சத்திரம் கேட்டவுடனே கதை பண்ண முடியாது என்னால.. எனக்கு கதை வேணும்..என்னை கன்வின்ஸ் பண்ணுற கதை வேணும்”நு. அந்த காட்சியை பார்த்ததில்இருந்து அந்த வசனமே எனக்கு வேதவாக்குனு சொல்லுவேன். (ரொம்ப பேசிட்டேனோ? சரி நெக்ஸ்ட்)

 

விசாலி – ஒரு வித்தியாசமான கேள்வி. டைம் மெஷினில் பத்து வருடங்கள் முன்னோக்கி சென்று பார்த்தால் நீங்கள் அப்போது என்ன செய்துக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்குறீங்க?

புவனேஸ்வரி - எனக்கு தெரியல.. டைம் மெஷின் கிடைச்சா, அதை தொட்டு கூட பார்க்க மாட்டேன் நினைக்கிறேன்.. நாம எல்லாரும் “லக்கிமேன்” படம் பார்த்துருப்போம். அதுல கதாநாயகனின் அம்மா தவற போறாங்க தெரிஞ்சதும் ஒரு அசௌகரியம்,கவலை மனசுல வரும்ல? அதுதான் இயற்கையை  மீறும் விதியின் வெளிப்பாடு என்று உணருறேன். அதனால் அடுத்த மணி நேரம் கூட எப்படி இருக்கும் இருக்கனும்னு நான் கனவு காண்பதில்லை.

பேச்சு வாக்கில், சில இடங்களுக்கு போகனும், சிலரோடு இருக்கனும்னு சொல்லுவேன். ஆனா மனசு தொட்டு சொல்ல சொன்னா, என் கற்பனைகள் வெள்ளை காகிதங்கள் தான்! ஆனா, எங்க எப்படி இருந்தாலும் சிரிச்சுட்டே, சிரிக்க வெச்சுட்டே, இருப்பேன்னு தெரியும். இது ஒரு வகையான பதில்.

இன்னொரு பக்கம், என் பையன் அல்லது பொண்ணு கூட சேர்ந்து விளையாடிட்டு இருப்பேன் நினைக்கிறேன்..ஹீ ஹீ.. “social network” ல தேடினாலும் பேச முடியாத அளவுக்கு பிசியான ஒரு குடும்ப வாழ்க்கைல சந்தோஷத்தை கொடுத்துட்டு இருப்பேனோ? எது நடந்தாலும் சந்தோஷம் தான் ;)

 

Buvaneswari 

 

விசாலி – எங்களுக்கும் சந்தோஷம் தான் :-) சரி, Chillzeeயை பற்றிய உங்களின் பார்வையை சொல்லுங்களேன்

புவனேஸ்வரி - சில்சீகு நான் எழுதவே வரல..நம்ம தோழி “மீரா ராமின்” கதையை படிக்கத்தான் வந்தேன்.

பள்ளி பருவத்தில் நான் ரொம்ப துறுதுறு மாணவி. பட்டிமன்றம், பேச்சுபோட்டி, கவிதைப்போட்டி, கதைனு எதையாவது பண்ணிட்டே இருப்பேன். அதுவும் எனக்கு தமிழ் மட்டும்தான் சரளமா வரும் இப்போது வரை! கோபம் வந்தா தான் இங்க்லிஷ் வரும்.. ஹா ஹா..

ஆக, தமிழில் அவ்வளவு ஆர்வமான ஒரு வாழ்க்கையை தொடங்கிவிட்டு, வேலை, புது இடம், நிதர்சன வாழ்க்கைனு அந்த தமிழ் தரும் சந்தோஷத்தையே தொலைச்சிட்டென்னு நினைச்சேன்.

என்னை மீட்டு எடுத்தது சில்சீதான். நான்கு வருஷம் ஆகிருக்கும் நினைக்கிறேன் இங்க வந்து. ஆனா இன்னமும் அந்த படபடப்பும் எதிர்பார்ப்பும் நீங்கவில்லை. ஒரு சின்ன கவிதையை அனுப்பி வெச்சுட்டா கூட வந்துருச்சா? போஸ்ட் பண்ணிருப்பாங்களா? கமெண்ட்ஸ் வந்துருக்குமா? இப்ப பார்ப்போமா? இல்ல கொஞ்சம் வெயிட் பண்ணி ரெண்டு மூணு கமெண்ட்ஸ் அதிகம் இருக்குமோ? இப்படி யோசிக்க வைக்கிற சில்சீ எனக்கு வரம்தான்.

என்னுடைய சின்ன சின்ன ஐடியாக்கள், படைப்புகள், எதையுமே “முடியாது விட்டுருங்க”நு பட்டுனு சொன்னதே இல்லை யாரும். நான் முதல்ல வந்தப்போ எப்படி சில்சீ இருக்காங்களோ அப்படித்தான் இப்பவரை இருக்காங்க..சொல்லபோனால் இப்போ மறுபடியும் விறுவிறுப்பு அதிகமாகி இருக்குறதை உணருறேன்.. இதைவிட ஸ்பெசல் என்னன்னா,

நான் ஒரு அயல்நாட்டி பிரஜை. எனக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமே இல்லனு நான் நினைச்சதே இல்லை. நான் ரொம்ப ஆத்மார்த்தமா நேசிச்சு, மதிச்சு, எப்போடா வருவோம்னு காத்திருக்குற தேசத்துல என்னுடைய சிந்தனைகள் புத்தகவடிவில் நடமாடிட்டு இருக்கு.. “புவனேஸ்வரி இந்தியாவுக்கு வரல, ஆனா அவங்க புக்கு இங்கதான் இருக்குனு” சொல்லும்போதே சிலிர்ப்பா இருக்குல? அதுக்கு காரணமே சில்சீதான். எல்லாருக்கும் இது ஒரு பதில். எனக்கு இது என் சிலிர்ப்பின் அடையாளம் :)

அதுமட்டும் இல்ல, என்னோட டைமிங்க் புரிஞ்சு என்னை சகிச்சு ஸ்வ்வீட்டா இருக்குற அட்மின்ஸ் இங்க மட்டும் தான்பா இருக்காங்க..ஹீ ஹீ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.